
ஜெனிலியா ரொம்ப புத்திசாலி (விஜய் கிட்ட இருக்கும் போது மட்டும் முட்டாள்) பத்திரிக்கை நிருபரா வேலை செய்கிறார்.பசுபதி அந்த ஊர்ல தாதா.ஆனா பகவத் கீதை பாக்குற எல்லோருக்கும் உபதேசம் பண்ணுவார். அவரோட உண்மையான முகம் ஜெனிலியாவுக்கு மட்டும் தான் தெரியும்.(பின்ன ஒரிஜினல் படத்துலையும் கதை அப்படித்தான் போகுது). அப்படியிருக்கும் போது ஒரு வெடிகுண்டு விபத்துல பசுபதியின் ஆட்கள் சாக அதை வைச்சது வேலாயுதம் தான் என்று துண்டுச்சீட்டுகள் மூலம் வதந்தி பரப்புகிறார்.
அப்படியே கட் பண்றோம்.இது எதுவும் தெரியாம அத்தைப் பொண்ணு,அம்மா என்று சந்தோஷமாக ஆடல் பாடல் ஊரே மதிக்கும் ஒருவராக கிராமத்தில் வாழ்கிறார் விஜய்.(மதிக்காம மிதிச்சா கொஞ்சம் நல்லாயிருக்கும்).இப்போ விஜய் ஜெனிலியா,பசுபதி இருக்கிற ஊருக்குப் போக ஒரு காரணம்.அதுக்கு இட்டாங்கடா அந்த தங்கச்சி சரண்யாவ. தங்கை இருந்தா போதுமா.சிட்டிக்கு எப்படி போக. கல்யாணம் பண்ணுங்கடா. கல்யாண நேரத்துல எப்படிடா சிட்டிக்கு போகுறது. தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு சிட்பண்ட்ல பணம் போட்டியிருக்காரு விஜய்.அதுவும் ரவுடி இருக்கிற சட்டியில தான் அகப்பை போட முடியும்.பணத்தை எடுக்க அந்த ஊருக்கு போக.
அப்ப பாத்து ஊர்ல நிறைய இடத்துல குண்டு வெடிக்க அந்த இடத்துல எல்லாம் விஜய் ஜஸ்ட்ல மிஸ் ஆகுறார். எப்படின்னா குண்டு அவர் செருப்பு பக்கத்துல வெடிக்கும்.இங்க யார்டா பொட்டு வெடி வெடிச்சதுன்னு கேக்காம எஸ் ஆயிருவாரு. அப்ப பாத்து கோவில் அர்ச்சகர் உங்க பெயர் என்ன அப்படி கேக்க(அப்பத்தானே வேலாயுதம் பெயர் எல்லோருக்கும் தெரியும்).அதே மாதிரி விஜய் சொல்ல ஆபத்பாந்தவர் வந்துட்டார் அப்படி மக்கள் பில்டப் கொடுக்கிறாங்க.(அதே மாதிரி தான் தியேட்டர்ளையும் சொல்வாங்க). ஜெனிலியா வந்து நீங்க தான் அதுக்கு சரியான ஆள்னு சொல்ல நான் அதுக்கு சரி வர மாட்டேன்னு விஜய் சொல்ல (எதுக்குப்பா அதை சொல்வீங்களா..இல்ல வடிவேலுக்கு சொல்லாம விட்ட மாதிரி இருந்துருவீங்களா) ஜெனிலியா நீங்க தான் அதுக்கு சரியான் ஆள்னு சொல்றாங்க.
இப்படி எல்லாம் சொன்னா விஜய் கேப்பாரா. சிட்பண்ட்ல பணத்தை ஏமாத்துறாங்க. ஜெண்டிமேன், இந்தியன்,அன்னியன்,சாமுராய், ரமணா, இன்னும் வர்ற போற சங்கர் படம் மாதிரி இவரு பணம் போன உடனே பொங்குறாரு.பொங்குறாரு.லாஜிக் இடிக்குமே.சரி இப்படி வைப்போம்.பணம் போனதால மக்கள் எல்லாம் தற்கொலை செய்ய பொங்கி எழுந்து மாஸ்க்கைப் போட்டுகிறார். அழிக்கிறார்.
நடுவுல விஜய் தங்கச்சி கல்யாணம். விஜய் மேல சந்தேகம் வந்து வில்லன் குண்டு வைக்க இவர் சாகாம சரண்யா காலி. லேசா முகம் தெரிஞ்ச காரணத்துனாலத்தான் இங்கே வந்துட்டாங்க அப்படி சொல்லி ராவோடு ராவாக இன்னொரு மாஸ்க் தைக்கிறார். அப்படியே கிளம்பி எதிரிகளை அழிக்கிறார். அப்பத்தான் ஒரு உண்மை தெரியுது பசுபதி இந்து இல்ல இந்தியாவை இழிக்க (சாரி ஒரு ரைமிங் வரட்டுமே என்று சொல்லி விட்டேன்) அழிக்க வந்த முஸ்லீம் (கொய்யால இதையாவது மாத்துங்க). உடனே துவம்சம் பண்ணி இந்தியாவை காப்பாத்தி விட,ஜெனிலியா,ஹன்சிகா இருவரும் விஜய்க்காக போட்டி போட எனக்கு கோட்டி கிழிய..
இந்தியா முழுக்க ரசிகர்கள் படத்தை கொண்டாட வருங்கால பிரதமர் என்று போஸ்டர் அடித்து விடுகிறார்கள்.இது தெரிந்து ஒபாமா கூட்டணிக்கு விஜயைக் கூப்பிடுகிறார். எனக்கு சூலாயுதம் படம் நடிக்க வேண்டும். பெயரும்,ஹீரோயின்,இயக்குனர், தயாரிப்பாளர் தான் வேற.கதை அதே தான்.எனக்கு அது தான் முக்கியம் என்று சொல்லி விட்டு வர. தொல்லை தாங்க முடியாமல் ஒரு கேஸ் போடலாமா என்று ஆட்சியாளர்கள் யோசிக்கிறார்கள். ரசிகர்கள் (அவர் ரசிகர்கள் குறையாமலிருந்தால்) அடுத்த படமாவது நல்லா வந்து விடாதா என்று நப்பாசையோடு விஜய் நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றி பேசுகிறார்கள்.