svr.pamini

Montreal Time

Wednesday, November 23, 2011

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனராக விளங்கிய ஸ்டீவை ஞாபகப்படுத்தும் அவரது ரசிகர்கள்



ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனராக விளங்கிய ஸ்டீவ்-ன் மரணம் நம்மில் அனேகருக்கு ஒரு பெரிய இழப்பாக இருந்தாலும், இது போன்ற புகைப்படங்களும் ஓவியங்களும் அவரது சாதனைகளையும் கண்டுபிடிப்புகளையும் நம்மை திரும்பி பார்க்க செய்கின்றன.ஸ்டீவின் ரசிகர்கள் அவரை ஞாபகப்படுத்தும் வகையில் அவரது புகைப்படங்களையும், ஓவியங்களையும் வடிவமைத்து இணையதளங்களில் உலாவவிட்டுள்ளனர். அவர் மறைந்தாலும் அவரது கண்டுபிடிப்புகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.

Monday, November 14, 2011

காதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது? ஆய்வாளர்கள் கருத்து


காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக் கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள்.
காதலிப்பவர்களை கவர்வதற்காக இளமையின் வேகத்தில் எத்தனையோ சாகசங்களை செய்பவர்கள் ஏராளம். மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங்களை சேகரித்தாலே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாக்கலாம்.
நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் ரொமான்டிக் செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறார்கள்.
புரிதலும் விட்டுகொடுத்தலும்
காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகி விடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும். உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல் வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும்.
நீங்களும் அப்படிப்பட்டவர் எனில் காதல் வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதனை மன்மதக்காதல் என்கின்றனர் ரொமான்டிக் ஆய்வாளர்கள். இந்த வகை காதலர்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து ஆத்மார்த்தமான காதலர்களாக திகழ்வார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒருவருக்கொருவர் புரிதல் தன்மையுடனும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தும் வாழ்வார்கள். இந்த காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.
பொழுது போக்கு காதல்
காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏகப்பட்ட செயல்களை செய்து அவளை தன்வசமே வைத்திருக்கும் காதலர்கள் ஏராளமானோர் உண்டு. இத்தகைய காதல் கவன ஈர்ப்புக்காதல் என்கின்றனர்.
உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது எனவே இது முழுமையான காதல் அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள் நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள்.
அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கின்றனர் அவர்கள்.
வாழ்க்கை முழுதும் தொடரும்
காதலியின் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவள் மீது உள்ள அக்கறையினால் எண்ணற்ற செயல்களை செய்து அவளின் நன்மதிப்பினை ஏராளமாக பெறும் ஆண்கள் உண்டு. கண்ணியமான பார்வையும் நேசத்தை வெளிப்படுத்த சரியான தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலை சேமிப்புக் காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும் என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள்.
இருவரும் ஆழமான அன்பு வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.
எல்லைமீறாத காதல்
இருவருக்கும் பரஸ்பரம் பிடித்திருக்கிறது. இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டாலும் எல்லைமீறாமல் செல்கிறது உங்கள் காதல். ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை பட்டியலிட்டாலும் முட்டிக்கொள்வதில்லை. காமத்தைப் பற்றிப் பேசினாலும் விசரம் இல்லை எனில் உங்கள் காதல் திட்டமிட்டக் காதல்.
வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.
விட்டுக்கொடுக்காத காதல்
ஒருவருக்கொருவர் சீண்டிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். எல்லை மீறல்கள் இருந்தாலும், அந்த சீண்டலை அனுமதிப்பர்.
உங்களுடைய காதல் இப்படிப்பட்டது என்றால் அதனை இனிப்பு காதல் என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும்.
அதிக உணர்ச்சியும் கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார்.
இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உயிர் தரும் காதல்
காதலிக்கோ, காதலருக்கோ ஏதாவது ஒன்று என்றால் உடனே அக்கறையுடன் கவனிக்க கிளம்பிவிடுவார்கள். விளையாட்டுக்கு அழைத்தால் கூட லீவ் போட்டுவிட்டு உடனே காதலிப்பவர்களை உடனே பார்க்க கிளம்பிவிடுபவர்களா நீங்கள். அப்படியானால் ஆத்மார்த்தமான இந்த காதலை வெற்றிக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.
என்ன காதலர்களே நீங்களும் உங்கள் காதல் எப்படிப்பட்டது என்றும் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டுபிடித்து கொள்ளுங்கள்.
Photobucket