svr.pamini

Montreal Time

Tuesday, September 18, 2012

ஈரான் மீது எந்நேரமும் போர் ••►அமெரிக்க

ஈரான் மீது எந்நேரமும் போர் தொடுப்போம்: அமெரிக்க தூதர் சூசன் ரைஸ்

ஈரான் நியூக்ளியர் குண்டுகள் பெறுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா எடுக்கும் என ஐ.நா அமைப்பிற்கான அமெரிக்காவின் மூத்த தூதரான சூசன் ரைஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஈரான் நியூக்ளியர் ஆயுதங்கள் பெறுவதை அமெரிக்க அனுமதிக்காது. இவ்விடயத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா மிகத் தெள்ளத் தெளிவான முடிவில் உள்ளார்.
அவ்வாறு நடப்பதை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து முடிவுகளும் அந்நாட்டிற்கு எதிராக தயாராக உள்ளன.
இது ஒரு நசுக்கும் கொள்கையாக இருக்கவில்லை. ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது அமெரிக்காவின் ஒரு கொள்கையாக உள்ளது.
இதை ஜனாதிபதி பலமுறை வலியுறுத்தியும் சொல்லி வந்து இருக்கிறார். இது தான் இறுதி முடிவு. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதையே அவர்களுக்கான ரெட் லைன் என்றும் கூறிவருகிறார்.
இது குறித்து இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் கொள்கை அதிகாரிகள் அனைவருடனும் தொடர்ந்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை என்றால், அந்நாட்டின் மீது எந்நேரமும் படையெடுக்கும் ஆணையை பிறப்பிக்க தேவையான அதிகாரத்தை ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
எங்களை தாக்கினால் இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறோம்.. இஸ்ரேலில் எதுவுமே மிச்சமிருக்காது.
அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்குமேயானால் மேற்குலக நாடுகளும், அமெரிக்காவும் ஒரு பக்கமும் நாங்கள் ஒருபக்கமுமாக நிற்போம். இது இயற்கையானது. அதேபோல் போர் நடைபெறும் போது ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதுவம் இயல்பான ஒன்றானதுதான்.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்கெனவே இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளனர். எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துமாறு ஹிஸ்புல்லா அமைப்பை கேட்டுக் கொள்வோம். அப்புறம் இஸ்ரேலில் எதுவுமே எஞ்சியிருக்காது என்றார்.
ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இப்படி விரிவாக பதிலடித் தாக்குதல் பற்றி பேசுவது இதுவே முதல்முறை என்பதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Photobucket