svr.pamini

Montreal Time

Thursday, December 23, 2010

ஏ.ஆர். ரஹ்மான்

 ஏ.ஆர். ரஹ்மான் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஆர்.கே.சேகர் என்பவரது ஒரே மகனாவார். ரஹ்மான் ஒன்பது வயதாயிருக்கும் போதே அவர் தந்தை காலமானார். அதனால் மிகவும் கஷ்டப்பட்ட இவர்கள் குடும்பம் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாயைக் கொண்டு காலம் தள்ளி வந்தது. இந்நிலையில் ரஹ்மானின் சகோதரி ஒரு விசித்திர நோயினால் தாக்கப்பட்டார். அந்நோயை சூஃபி துறவி ஒருவர் தீர்த்து வைத்தார். அதனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார் திலீப் என்ற பெயர் கொண்ட அல்லா ராகா ரஹ்மான். 

     ஆரம்ப காலத்தி கீ போர்டு வாசித்து வந்த ரஹ்மான் தனது 11வது வயதில் இளையராஜாவின் குழுவில் சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ரமேஷ் நாயுடு ஆகியோரின் இசைக் குழுவிலும் பணியாற்றினார். ஜாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் இணைந்து உலகம் முழுதும் இசைப்பயணம் மேற்கொண்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் உதவித்தொகை பெற்று, மேற்கத்திய இசையில் இளநிலை பட்டம் பெற்றார்.

     1991ல் தனது வீட்டை ஒட்டியே தனியாக ஸ்டூடியோ ஆரம்பித்த ரஹ்மான் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கும், தொலைகாட்சிகளுக்கு இசை அமைத்து வந்தார். 1992ல் முதன் முதலாக இயக்குனர் மணிரத்தினத்தின் 'ரோஜா' படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் ரூ.25,000 மட்டுமே. இப்படத்திற்கு முதன் முதலாக ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் ரஹ்மான் மின்சார கனவு (1997) லகான் (இந்தி 2002) மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் (2003) ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்றுள்ளார். 

     ராம்கோபால் வர்மாவின் ரங்கீலா படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் ரஹ்மான். தில் சே, தால் ஆகிய இந்திப் படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. இவர் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து 2006 வரை பத்து படங்களில் பணியாற்றியுள்ளார். அதேபோல் இயக்குனர் சங்கருடன் இணைந்து ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், நாயக், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். அதே போல் இவர் இசையமைத்த ரஜினியின் படங்களான முத்து, படையப்பா, இப்போது சிவாஜி ஆகியவற்றின் பாடல்கள் மிகவும் பிரபலபலாமாக இந்தியாவில் மட்டுமின்றி ஜப்பானில் பேசப்படுகிறது. 

     இவர் வாரியர்ஸ் ஆப் ஹெவன் அண்ட் எர்த் (Warriors of Heaven and Earth) (2003) என்ற சின ஆங்கிலப்படத்திற்கும் பின்னணி இசையமைத்துள்ளார். இவர் வந்தே மாதரம் என்ற (1996) இசைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். பாம்பே டிரீம்ஸ் (Bombay Dreams)(2002) என்ற ஆங்கில நாடகத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். 

     ரஹ்மானின் இசை சேவையைப் பாராட்டி அவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது.    ரகுமான் பாடல்களைக் கேட்க இங்கே கிளிக் பண்ணவும்-> Rahman hits                                                                                                          இசைத்தொகுப்புகள்
தீன் இசை மழை (1989)
அந்தி மழை (1990)
செட் மீ ஃபிரி (Set Me Free)(1991)
வந்தே மாதரம் (1997)
ஜன கன மன (2000) மற்றும் (2006)
பாம்பே டிரீம்ஸ் (2002)
இக்னைடட் மைண்ட்ஸ் (Ignited Minds)(2003)
ராகாஸ் டான்ஸ் (Raga's Dance)(2004)
பான்யான் தீம் இசை (Theme Music for The Banyan)(2006)
தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் (The Lord of the Rings - Theatre Production)(2006)
வோர்ல்ட்ஸ்பேஸ் சிக்னேச்சர் இசை (World Space Signature Tune)(2006)
ஏர்டெல் இசை (Airtel Tune) (2006)
பிரே பார் மி பிரதர் (Pray for me Brother - UN Theme song for Poverty Allevation)(2007)

Saturday, December 18, 2010

2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் தேர்வு!

உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை 'டைம்' பத்திரிகை தேர்வு செய்துள்ளது.உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கை ஆரம்பித்து, அதை வெற்றிகரமான வர்த்தகமாகவும் மாற்றியுள்ளார் இவர். இன்று இணைய உலகின் ஜாம்பவான் கூகுளே அச்சம் கொள்ளும் அளவுக்கு பேஸ்புக் வளர்ந்து வருகிறது. 26 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் இளைஞர் ஜுக்கர்பெர்க்தான். இதற்கு முன் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இதே வயதில் டைம் பத்திரிகையால் உலகின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரை விட 2 வாரம் இளையவர் ஜுக்கர்பெர்க்.

செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை ஆண்டுதோறும் 'டைம்' பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


Friday, December 17, 2010

அனைவராலும் எதிர்பார்கப்படும் விஜையின் காவலன்.....


டிசெம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிரது காவலன். தொடர்ச்சியாக ஆறு படங்களின் தோல்விக்கு பிறகு (எழாவது தடவையுமாக) அனைவராலும் பெருத்த எதிர்பார்பிற்க்குள்ளாகியுள்ளது காவலன் திரைப்படம்.தற்போது பாடல்கள் வெளிவந்துள்ளன. வித்தியாசாகரின் மெல்லிசையில் காதிற்கு இனிமையளிக்கின்றன..கில்லி வெற்றிக் கூட்டணி என்ற காரணத்தால் வித்யாசாகரை நம்பிக் களத்தில் இறங்கியிருக்கிறார்.
இருந்தும் உலகத் தமிழர்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் அசினை நம்பிக் களத்தில இறங்கியிருப்பது ஒரு தடைக்கல் ஆகவே கருதப்படுகிறது.விஜையின் பிளஸ் எண்டு எடுத்துக் கொண்டால் அவரின் அமைதி,சிறப்பான நடனம் குறிப்பிடத்தக்கது. நடனம் பாடலின் ஒரு அங்கமாகவே பார்கப்படுகின்றது.வித்தியாசமான நடிப்பே அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது இதுவே விஜையிடம் உள்ள மிகப்பெரிய மைனஸ்.மேலும் மேடை நிகழ்ச்சிகளிலேயே அதிகம் பேசாதவர் தனது தந்தையின் சுய விருப்பின்பேரிலே அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார்.இதுவும் அவரின் சினிமாவாழ்க்கையை தொலைப்பதாக உள்ளது.விஜையின் ரசிகர் கூட்டம் இதை உணர்வதில்லை. அவரை விமர்சித்தால் "விடாமுயற்ச்சி விஸ்வரூப வெற்றி"  எண்டு புலம்புகினம். நாங்களும் எதிர்பார்ப்போம் காவலன் ஸ்கோரை....?????????????? 

Thursday, December 16, 2010

யாழ் மண்ணின் கலாச்சார அடையாளம் மாட்டுவண்டிச்சவாரி...

யாழ் மண்ணில் வருடம் தோறும் ஒரு போட்டி நிகழ்வாக இந்த மாட்டுவண்டிச் சவாரி நடைபெற்றுவருகிறது.நீர்வேலி தரவை பகுதியில் இந் நிகழ்வு இடம்பெறும்.குடாநாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் மாடுகள் கொண்டு வரப்படும்.மாடுகளுக்கு உசாரேற்றுவதற்க்காக சாராயம் பருக்கப்படும் மற்றும் ஊசிக்கம்பிகளால் மாடுகளில் முதுகில் குற்றுதலும் இடம்பெறும்.இது ஒரு மிருகவதையாக இருந்தாலும் போட்டிநிகழ்வாகக் காண்கையில் ஒரு சுவாரஸ்யம் மிக்கதாகும்....

Friday, December 10, 2010

அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜனிக்காந்துக்கு 60 வது பிறந்தநாள்

                                          நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் யங் சூப்பர் ஸ்டார், சூப்பர் நாயகன்,தளபதி என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக் கொண்டு திரியும் பொழுது கிட்டத்தட்ட 30 வருடமாக "சூப்பர் ஸ்டார்" என்ற எந்த பெருமையில்லாமல் எளிமையாக வாழ்ந்து வருகிறார் ரஜனிக்காந்.
வெற்றியையும் தோல்வியையும் சமமாக எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்.
குசெலன் தோல்வியையும் எந்திரென் வெற்றியையும் சமமாக நோக்கியவர்.சக கலைஞர்களுடன் ஈகோ இன்றிப் பழகுபவர். தமிழ் சினிமாவின் அப்பவும் இப்பவும் எப்பவும் ஒரெ ஒரு சுப்பர்ஸ்டார் என்றால் அது திரு றஜனிக்காந் அவர்கள் மட்டுமே.....இவன் பெயர் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டது நிலவு தனை முட்டும்.அவர் 100 வயது மட்டும் வாழ்ந்து எந்திரென் போன்ற மிகபிரமாண்டமான வெற்றிப்படங்களைக் கொடுக்கவேண்டும்.

Tuesday, December 7, 2010

வாஷ் அவுட் ஆனது ரத்தசரித்திரம் - நஷ்டத்தை ஈடுகட்ட இறங்கி வந்தார் சூரியா!!!!

தமிழ்சினிமா வரலாற்றில் தாயகத் தமிழர்கள், உலகத்தமிழர்களின் சாபத்துக்கு ஆளான ஒரு படமென்றால் அது ரத்தசரித்திரம்தான் என்கிறார்கள்கோலிவுட் செய்தியாளர்கள். தமிழர்களை மதிக்காத விவேக் ஓபராய், அவரை நியாப்படுத்திய சூரியா இருவரும் நடித்த படமென்பதால் அதை வெளியிட விடமாட்டோம் என்றார்கள் நாம் தமிழர் இயக்கத்தினர்.
இன்னொருபக்கம் ரத்தசரித்திரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளில் நடித்தற்கான ஊதியத்துக்குப் பதிலாக தமிழ் ரத்தசரித்திரம் படத்தின் விநியோக உரிமையை பெற்றுக்கொண்டாராம். சூரியா படத்தை வெளியிட்டால் கோபத்தில் இருக்கும் நாம் தமிழர் இயக்கம் பெரிய தடையாக இருக்கும் என்பதை உணர்ந்த சூரியா, அதை ஆளும் கட்சி தயாரிபாளரான துரை.தயாநிதிக்கு விற்று விட்டார்
ஏற்கனவே அந்தத் தயாரிப்பாளர் நம்பி வாங்கிய வ குவாட்டர் கட்டிங் படம் வாஷ் அவுட் ஆனதில் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார் - இப்போது அந்த நஷ்டத்தை மேலும் இரண்டு மடங்காக உயர்த்தி விட்டது ரத்தசரித்திரம். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ரத்தசரித்திரம் படத்துக்கு முதல் இரண்டு காட்சிகள் மட்டுமே ஓபனிங்காக இருந்தது. அதன்பிறகு மூன்றாவது காட்சியில் தொடங்கி தியேட்டர்கள் காத்து வாங்க ஆரம்பித்து விட்டன என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
ரத்தசரித்திரம் மண்ணைக் கவ்வியதற்கு மூன்று காரணங்களைச் சொல்கிறார்கள். ரத்தச்சரித்திரம் வெளியானது இயற்கைக்கே பிடிக்கவில்லை. கடந்த இருபது நாட்களாக தமிழகத்தில் பதினைந்துக்கும் அதிகமான மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கிறது மழை. இரண்டாவது காரணம் மழை பாதிப்பு இல்லாத மாவட்டங்களிலும் ரத்தச் சரித்திரம் செத்தச்சரித்திரம் ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் படத்தைப் பார்த்துச் சென்ற ரசிகர்களின் மவுத்டாக். இத்தனை கொடுமையான வன்முறைக் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லாததால் படம் கொடுமை என்று சொல்லிச்சென்றதால் மழை இல்லாத மாவட்டங்களிலும் வாஷ் அவுட். மூன்றாவதாக நாம் தமிழர் இயக்கத்தினர் விநியோகித்த ‘ ஏன் ரத்தசரித்திரம் தமிழர்கள் புறகணிக்க வேண்டிய திரைப்படம்?’ என்ற பத்து லட்சம் துண்டுப் பிரசுரங்கள் தமிழம் முழுவதும் விநியோகிகப்பட்டதோடு, இதே விஷயத்தை எட்டு லட்சம் கல்லூரி மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பியது என்று மூன்றாவது காரணத்தைச் சொல்கிறார்கள்.
எல்லாம் போகட்டும்! தமிழர்களுக்கு ஈழத்தில் ஏற்பட்ட இழப்பை பற்றிக் கவலைப்படாத சூரியா, ரத்தசரித்திடம் மூலம் தயாரிபாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்ட துரைதயாநிதி தயாரிக்கும் படம் ஒன்று 2012-ல் கால்ஷீட் கொடுத்து விட்டாரம். சூரியா கால்ஷீட் கொடுத்த பிறகே சமாதனம் ஆனாராம் புதுமாப்பிள்ளை துரை. தயாநிதி!!

Sunday, December 5, 2010

கலைஞரின் இலவச டீவி அரசியலும் விஜையின் இலவச அரிசி அரசியலும்.......

vijai
தனது அடுத்த படமான காவலன் ட்ரைலர் வெளியீட்டு விழாவை ஏழைகளுக்கு உதவும் வகையில் இன்று நடத்தினார் நடிகர் விஜய். ட்ரைலர் வெளியீட்டையொட்டி 300 ஏழைக் குடும்பங்களுக்கு 300 மூட்டை அரிசி தானம் செய்தார்.

விஜய் நடித்த காவலன் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடந்தது.

விழாவில் விஜய் பங்கேற்று 300 ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை இலவச அரிசி வழங்கினார். காவலன் பட டிரைலரையும் வெளியிட்டார். விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷக்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விஜய், "காவலன் பட டிரைய்லர் வெளியிட அழைத்ததும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. பட டிரெய்லர் விழாவுக்கு செலவிடும் தொகையை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாம் என்று தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரத்திடம் கூறினேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று, ஷக்தி சிதம்பரம் ஏழைகளுக்கு இலவச அரிசி கொடுக்க சம்மதித்தார். அதோடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவையும் நடத்துவதாக கூறியதால், விழாவுக்கு வர சம்மதித்தேன் என்றார்.


விழாவில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், மேனேஜர் மற்றும் பி.ஆர்.ஓ. பிடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி ஜேஎஸ் திருமண மண்டபத்தையொட்டியுள்ள இடங்களில் விஜய்யின் பெரிய பெரிய கட் அவுட்டுகள், சாரட் வண்டியில் விஜய் பயணிப்பது போன்ற அட்டை பொம்மை போன்றவற்றை வைத்திருந்தனர்.

Wednesday, December 1, 2010

8 வயது சிறுவனின் அதிரடி நடனம்: மைக்கல் ஜக்சனை மிஞ்சுவானா?

8 வயது சிறுவன் ஒருவனின் நடனக் காணொளியானது தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.ஹவாயில் வசிக்கும் அஞ்சலோ என்ற இச் சிறுவன் பிரோக் நடனத்தினால் பார்ப்பவர்கள் அனைவரினையும் ஆச்சர்யப்படவைக்கின்றான்.

தன்னை விட வயது கூடிய சக போட்டியாளனிடம் இவன் சவால்விடுவதும், கேலி செய்வதும் அனைவரையும் மெய்மறந்து இரசிக்கவைக்கின்றது.

இவனது போட்டியாளரும் பிரபலம் பெற்ற ஓர் நடனக் கலைஞர் ஆவார்.

அவனது நடனத்தினை கண்டு நீங்களும் ஆச்சரியப்படுங்கள்.
Photobucket