svr.pamini

Montreal Time

Friday, November 9, 2012

கடல் படத்தின் பாடல் நெஞ்சுக்குள்ள உம்மை..வெளியிட்டார் ரஹ்மான்

மணிரத்தினத்தின் இயக்கத்தில் தயாராகிவரும் கடல் படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், நெஞ்சுக்குள்ள உம்மை... என்ற ஒரு பாடலினை எம்.டீ.வி அன்பிளக்ட் நிகழ்ச்சியில் வெளியிட்டு வைத்துள்ளார். இசை வெளியீட்டுக்கு முதல் சிங்கிள் ட்ரெக் ஒன்றினை யூடியூப்பில் வெளியிட்டு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் வழக்கத்தினை இப்பாடல் மூலம் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன் யூடியூப்பில் ஏராளமான இசை ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர். எந்திரனுக்கு பிறகு தமிழில் ரஹ்மான் இசையமைத்துள்ள படம் கடல் என்பதனால் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுவதை பூர்த்தி செய்யும் வகையில் இப்பாடல் வெளியீடு அமைந்துள்ளது. மேலும் பாடல் வெளியீட்டின் போது 'இது ஒரு மகிழ்ச்சியான தருணம்' என தனது மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டார் ஒஸ்கார் நாயகன். இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள அந்த பாடல் இதோ...

No comments:

Post a Comment

Photobucket