svr.pamini

Montreal Time

Saturday, January 29, 2011

காவலன் எங்கள் காதலன்......(விஜை, அசின் special show)

        
                                                              ஆறு படங்களின் தொடர்தோல்வியை ஒரே படமான "காவலன்" மூலம் ஈடுகட்டியுள்ளார் விஜை. தமிழகமெங்கும் காவலன் பற்றியே பேச்சு...அனைத்து தொலைக்காட்சியிலும் விஜையை அழைத்து சிறப்பு நிகழ்ச்சி நடாத்துறாங்க...அமைதியாக சாதித்துக்காடியுள்ளார் விஜை...விழ்ந்தார் விஜை என்று நினைத்த அரசியல் கட்சிகளும் விஜையை திரும்பி பார்கின்ற நிலை வந்துள்ளது.....பொறுத்திருந்து பார்ப்போம்... அரசியலிலும் கலக்குவாரா விஜை?

Thursday, January 27, 2011

உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் "டேப்ளட் பிசி(Tablet PC)"..!!!!

கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது.
ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது.
எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது.
இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனம் உண்டாக்கிய சலசலப்பும், மக்களை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. ஐ-பேட் இதுவரை டேப்ளட் பிசி குறித்து நிலவி வந்த அம்சங்களை மாற்றிப் போட வைத்தது. அந்நாளைய காம்போசிசன் நோட்டுப் போல தோற்றத்தில் பல டேப்ளட் பிசிக்கள் வடிவமைப்பு கொண்டுள்ளன. அனைத்தும் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
2. புதிய ஸ்லேட்கள்: பல டேப்ளட் பிசிக்கள் புதிய டிஜிட்டல் ஸ்லேட்டுகளாகத்தான் வடிவம் பெற்றுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட். 9.5 அங்குல அகலத்தில், 7.5 அங்குல உயரத்தில், 0.5 அங்குல தடிமனில் இது வெளியான போது, இதுவே டேப்ளட் பிசிக்களின், வரையறுக்கப்பட்ட வடிவமாக அமைந்துவிட்டது. பின்னர் சாம்சங் கேலக்ஸி டேப் 7 அங்குல திரையுடன் அறிமுகமான போது, கைகளுக்குள் அடங்குவதற்கான சரியான அளவு அது என வரையறை செய்யப்பட்டது.
தற்போது நாம் விரும்பும் அளவில் திரையுடன் கூடிய டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுக்கலாம். டேப்ளட் பிசிக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நிச்சயம் இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
3. ஆப்பரேட்டிங் சிஸ்டம்: பிரியமான அளவில் டேப்ளட் பிசிக்கள் தயார் ஆவது மட்டுமின்றி, இவற்றின் இயக்கத்திற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் ஐபோன், ஐபேட், ஐ பாட் டச் ஆகியவற்றில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இடம் பெறுகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன், 12க்கும் மேற்பட்ட புதிய டேப்ளட் பிசிக்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் 1.6, 2.0, 2.1 மற்றும் 2.2 எனப் பல பதிப்புகளில் கிடைக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, டேப்ளட் பிசிக்கானதாகக் கொண்டு வந்துள்ளது. பிளாக்பெரியைத் தயாரிக்கும் ஆர்.ஐ.எம். நிறுவனம், QNX என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு வகையாகும். டேப்ளட் பிசி தயாரிப்பில், பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நிறுவனங்களும், தங்கள் பங்கைப் பிடிக்க பலத்த போட்டியில் இறங்கி உள்ளன

Monday, January 24, 2011

எதிரியை எப்படி நண்பனாக்குவது? சிங்கள தேசத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.....


ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி உலகில் எந்த நாடும் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்ற நிலையில் ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய இந்தியா ஏன் ஈழத்தமிழர்களுடன் பகைமை பாராட்டுகிறது என்பதற்கான காரணங்களை இங்கு சொல்லி பழைய விடயங்களை கிளறுவதை விட இப்போது அந்த பகைமையை மறந்து இந்தியா ஈழத்தமிழர்களுக்கு உதவக்கூடிய இராஜதந்திர நடவடிக்கைகள் தமிழர் தரப்பில் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி.
உண்மையில் இந்தியா ஈழத்தமிழர்களின் நண்பனாகத்தான் இருந்திருக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெரிய மாநிலத்தின் ஆதரவுத்தளத்தை மத்திய அரசு பெற வேண்டுமாக இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மொழியால் கலாசாரத்தால் மதத்தால் ஒன்று பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இந்தியா இருக்க வேண்டும்.
ஆனால் இந்தியா ஈழத்தமிழர்களின் நேர் எதிரியான சிங்கள தேசத்துடன் அல்லவா நட்பு பாராட்டி நிற்கிறது. இதற்கு இந்தியாவின் மீது தவறு சொல்லவதை விட இந்தியாவை சரியாக கையாள தவறிய எங்களில்தான் பிழை இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
மகிந்த ராசபக்சவிடமிருந்து அல்லது சிங்கள தேசத்திடமிருந்து ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதற்கு பல விடயங்கள் இருக்கின்றன.
மிகப்பெரிய இனப்படுகொலையை புரிந்தவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறதா என உங்களில் பலர் என்மீது கோபக்கணைகளை வீசக்கூடும்.
ஆனால் இந்த கோபக்கணைகளை விடுத்து நிதானமாக சிந்தித்தால் நாங்கள் செய்யத்தவறிய பல விடயங்களை மகிந்த அல்லது சிங்கள தேசம் செய்து அதை தங்களுக்கு சாதகமாக்கியிருக்கிறார்களே என்பதை அறிந்து கொண்டால் நிட்சயம் என்னுடைய தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்வீர்கள்.
பொதுவாகவே தன்னுடைய எதிரியுடன் நட்புக்கொள்பவர்களை எதிரியின் பக்கம் நிற்பவர்களை பகை உணர்வுடன் பார்ப்பதும் அவர்களுடனான தொடர்பாடல்களை தவிர்ப்பதும் இயல்பான ஒரு விடயம்தான். உலக நாடுகளில் அவ்வாறுதான் நாடுகள் அணிசேர்கின்றன.
ஆனால் ஸ்ரீலங்காவின் விடயத்தில் அது மாறுபட்டே காணப்படுகிறது.
இந்தியாவின் நேர் எதிரி நாடுகளாக சீனாவும் பாகிஸ்தான் விளங்குகின்றன. ஆனால் இலங்கையின் மிக நெருங்கிய நண்பர்களாக இந்த மூன்று நாடுகளும் விளங்குகின்றன. அதேபோல அமெரிக்காவும் ஈரானும் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் இந்த இரு நாடுகளும் இலங்கைக்கு உதவி வழங்கும் நேசநாடுகளாக விளங்கி வருகின்றன.
இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்குகின்ற போது அதைவிட அதிகமான ஆயுதங்களை இந்தியா வழங்க துடிக்கின்றது. அதற்கு மேலாக இந்தியாவின் மற்றொரு எதிரியான பாகிஸ்தான் ஆயுதங்களையும் பயிற்சிகளையும் இலங்கைக்கு வழங்குகிறது.
சீனா அம்பாந்தோட்டை தொடக்கம் கொழும்புவரையான தொடரூந்து பாதைக்கு நிதி உதவி வழங்குகிறது என்றால் இந்தியா கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையான தொடரூந்து பாதைக்கு உதவி வழங்குகிறது. இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை விட அதிக நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா துடியாக துடிக்கிறது. இலங்கையின் அடிப்படை கட்டுமானப்பணிகளை விருத்தி செய்வதற்கென இந்த வருடம் மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா சம்மதித்திருக்கிறது.
உலகில் எந்த ஒரு நாடும் இலங்கையை எதிரி என்று சொல்லாத அளவுக்கு சிங்கள தேசம் நட்புசக்திகளை வளர்த்துக்கொண்டதன் காரணமாகவே உலகில் உள்ள 35க்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து எங்களை அழித்து கொண்டதாக நாங்கள் தலையில் அடித்துக்கொள்கிறோம். உலகில் உள்ள அத்தனை நாடுகளும் உதாரணமாக ஈழத்தமிழர்கள் நம்பியிருக்கும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் கூட வடகிழக்கில் ஆயுதப்போராட்டத்தை அடக்குவதற்கு நேரடியாக உதவி செய்திருந்தன என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் இந்தியா உட்பட உலக நாடுகளை நட்புசக்தியாக மாற்றுவதற்கு தவறியதுதான்.
சிங்கள தேசத்திடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் எதிரியையும் நண்பனாக்குவது. ஆனால் தமிழர்களாகிய நாம் என்ன செய்திருக்கிறோம். தேடி தேடி எதிரிகளைச் சம்பாதித்திருக்கிறோம். இந்தியா துரோகி, சீனா பாகிஸ்தான் அமெரிக்கா எங்கள் எதிரி என சொல்லிச்சொல்லியே உலகில் பகைவர்களை சம்பாதித்ததை தவிர எதை சாதித்திருக்கிறோம். ஆகக்குறைந்தது தமிழ்நாட்டையாவது எங்கள் நட்பு சக்தியாக மாற்றியிருக்கிறோமா என்றால் அதுவும் பூச்சியம் தான். தமிழ்நாட்டில் ஆட்சியமைக்ககூடிய பலத்தில் இருக்கும் தி,மு.கவையோ அதிமுகவையோ எங்கள் நட்புசக்தியாக மாற்ற முடியாமல் போயிருக்கிறதே.
ஒரு தொகுதியில் கூட தனித்து நின்று வெற்றிபெற முடியாத சிறு கட்சித்தலைவர்களை தவிர தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களின் நட்பு சக்தி என சொல்லிக்கொள்வதற்கு யார் இருக்கிறார்கள்.
கருணாநிதி துரோகி அவர் துரோகி இவர் துரோகி என தேடி தேடி துரோகி பட்டங்களை வழங்கிக்கொண்டிருப்பதை தவிர உருப்படியாக சாதித்தது வேறு ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முதல் மகிந்த வரை சிங்கள தலைவர்கள் இந்தியாவை எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள், பகைவனைக்கூட நண்பனாக்கி இருக்கிறார்கள் என்ற வரலாற்றை தமிழர்கள் படிக்க வேண்டும்.
தன்னுடைய எல்லைக்குள் அத்துமீறி உணவுப்பொட்டலங்களை வீசிய இந்தியாவை ஜே.ஆர் போர்க்குணம் கொண்டு எதிர்க்கவில்லை. துரோகி என்று திட்டித்தீர்க்கவில்லை. எதிரியாக இருந்த இந்தியாவை அழைத்து தன்னுடைய மற்றொரு எதிரியான தமிழர்களோடு மோதவிட்டு தான் தப்பிக்கொண்ட ஜே.ஆரின் தந்திரத்தை எப்படி குறைவாக மதிப்பிட முடியும்?
இந்தியாவும் ஈழத்தமிழர்களும் மோதவேண்டும் என ஜே.ஆர்.விரித்த வலையில் தமிழர்கள் விழுந்தது யாரின் தவறு.
விடுதலை வேண்டி நிற்கும் எந்த ஒரு இனமும் எதிரியுடன் மோதுவதற்கு முதல் தன்னைச்சுற்றி மட்டுமல்ல எதிரியைச்சுற்றியிருக்கின்றவர்களையும் நட்புச்சக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஆதரவுத்தளம் ஒன்றை தேடிக்கொள்ள வேண்டும்.

Sunday, January 23, 2011

இசையமைப்பாளர் "யுவன்" கலந்து சிறப்பித்த Airtel super singer season 3 ........

                                                                   பாட்டுக்கு பாட்டு என்றிருந்த வழமையை "super singers" என்ற நவீனத்துவத்துக்கு கொண்டு சென்ற பெருமை விஜை டீவியையே சேரும்...அந்தவகையில் Airtel super singer seaon 3 இல் யுவன்சங்கர்ராஜா கலந்து தனது இசையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Friday, January 21, 2011

அரசியலில் ஆர்வம் உள்ளது எப்போது என இப்போது கூற முடியாது -விஜய்-

விஜய் அரசியலில் நுழைந்து விடுவார் என்பதால் தான் காவலனுக்குப் பிரச்சினை என்று நினைக்கிறீர்களா?
இந்த நொடி வரைக்கும் தெரியவில்லை. என்ன நடந்தது. எது நடந்தது. என்பதை அலசிப்பார்க்கவும் வகையில்லாமல் இருக்கிறது. எதுக்குப் பிரச்சினை யாருக்கு என் மேல் கோபம். அப்படி கோபம் ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை. யார், எப்படி என்று தெரிந்தால் நானே இறங்கிப் போராடலாம். நிறைய விடயங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இது எனக்கே புது அனுபவம். 50 படங்களில் நடித்து விட்டுத் திரும்பிப்பார்த்தால் எனக்கே ஆச்சரியம். படத்தோட வெளியீட்டுத் திகதி ஒரு நாள் தள்ளிப் போனது. எந்தப் படத்துக்கும் நடக்காத ஒன்று. நிறையப் பிரச்சினைகளை நானே கடைசி நேரத்தில் பேசி முடித்து சுமுகத் தீர்வு கண்டிருக்கிறேன். இப்போது நடந்த பிரச்சினைக்கு யார் மூல காரணம் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. அதையும் தாண்டி 350 தியேட்டர்களில் "காவலன்' வெளிவந்திருக்கிறது. நல்ல பெறுபேறு என்று சொல்கிறார்கள். புது அனுபவத்தை கற்றுத் தந்தவர்களுக்கும் அதை தந்துபோன காவலனுக்கும் நன்றி.
சினிமாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு படத்திலும் நிச்சயம் அரசியல் பொடி தூவியே ஆகவேண்டும் என்ற நிலையுள்ளது. ஆனால் உங்கள் படங்களில் அது இல்லையே ஏன்?
என் சினிமாக்களில் அரசியல் இருக்கிறது. ஆனால் ஒரேடியாக அதைத் தந்துவிட முடியாது. இப்போது இருக்கும் தலைமுறை தெளிவாக இருக்கிறார்கள். அரசியலை சினிமாவோடு இணைத்துப்பார்க்கிற, பேசுகிற மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அவர்கள் நினைத்தால் எல்லாம் எடுபடும். சினிமாவில் அரசியல் பொடி தூவி வசனம் பேசுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நேரம் கூடி வரும்போது அதை நீங்கள் பார்க்கலாம்.
அரசியலுக்கு வருவது பற்றிய முடிவுக்கு வந்து விட்டீர்களா?
அரசியலில் எனக்கு ஆர்வம் இருக்கிறது என்று எப்போதோ சொல்லி விட்டேன். ஆனால் அது எப்போது என்று இப்போது சொல்ல முடியாது. வருவேன் ஆனால், இப்ப...அப்பன்னு சொல்லிக் கொண்டே இருந்தால் மக்களுக்கே போரடித்துவிடும். எல்லோரையும் ஒன்று திரட்டி அரசியலில் இறங்கும் போது மக்கள் அதைப் பெரிசா பேச மாட்டாங்க. எனது அரசியல் பிரவேசம் பற்றி வரும் செய்திகளைப் படிக்கும் போது எனக்கே புதிதாக இருக்கிறது. முதல் மாநில மாநாட்டை திருச்சியில் கூட்டப் போகிறேன் என்றுகூட செய்தி வெளியிடுகிறார்கள். அதில் உண்மையில்லை. அது பற்றி எந்த முடிவுக்கும் வரவில்லை. இந்த விடயத்தில் என்னைச் சுற்றி இருப்பவர்களின் எண்ணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதேசமயம் காலமும், நேரமும், இடமும், சூழலும் அனுமதிக்கும்போது என்னை அந்த இடத்தில் கொண்டு போய் வைப்பேன். அப்படிச் செய்வதில் தயங்க மாட்டேன்.
கிராமத்து இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் திருப்ப ஏதாவது செய்யத் தோன்றுகிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏதாவது யோசனை இருக்கிறதா?
கிராமத்து இளைஞர்கள் எல்லோரையும் விவசாயத்தின் பக்கம் திருப்ப வேண்டுமென்று ஆசை இருக்கிறது. எல்லோருக்கும் விவசாயம் மறந்து கொண்டே வருகிறது. சென்னைக்கும் வெளிநாடுகளுக்கும் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதுக்காக இந்த நொடியில் ஒரு படத்தில் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதுதான் இப்போது என்னால் முடியும். ஆனால் அவர்களை முழுமையாக விவசாயத்தின் பக்கம் திசை திருப்ப ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது.

Wednesday, January 19, 2011

2012ல் உலகம் அழிந்து விடுமா?: விறுவிறுப்பான ஆராய்ச்சி பார்வை!



                                                                                                                                               உலகம் 2012ல் அழிந்து விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், ஜோதிடர்களும் அடித்துக் கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவை அனைத்தும் பொய் என்றும், இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்றும் விறுவிறுப்புடன் இந்திய விஞ்ஞானி விவாதிக்கிறார்.
உலகம் 2012ல் அழிந்து விடும் என்பதற்கு சான்றாக சில முக்கிய கூறுகள் உள்ளன.
இன்று நாம் பின்பற்றி வரும் திகதி முறைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்தவர்கள் மாயன் நாகரித்தினர். சூரியன் காலாவதியாகும் திகியையும் இவர்கள் கணித்துள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, அந்த திகதி 2012 தான். எனவே, 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பது இவர்கள் கருத்து.
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும், பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஐரோப்பிய விஞ்ஞானிகள், உலகின் பெரிய மூலக்கூறு இயந்திரத்தை கண்டறிந்துள்ளனர். இவர்கள் 27 கிலோ மீட்டர் ஆழத்தில், அணுக்களை வைத்து, அவற்றை ஒன்றிணைத்து மீண்டும் வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவற்றை 2012ல் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு நடந்தால், பூமியே நொறுங்கி விடும்.
திரு விவிலிய நூலில், உலகம் 2012ல் அழிந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும், சாத்தானுக்கும் கடைசி யுத்தம் நடக்கும் போது, இந்த அழிவு ஏற்படும் என்று பைபிள் கூறுகிறது. இதையே, சீனத்து நூல்களும், சில இந்து புராணங்களும் கூறுகின்றன.
இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றின் வாயில் இருப்பதாகவும், அது வெடித்தால் இந்த உலகமே சிதறிவிடும் என்று அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு 650000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்குமாம். அந்த ஆண்டு 2012 என்கிறார்கள் அவர்கள்.
இவையனைத்தும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பதற்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.
மேற்கூறிய அனைத்தும் பொய் என்று இந்திய விஞ்ஞானி அய்யம் பெருமாள் அடித்துக் கூறுகிறார்.
விஞ்ஞானிகள் நிகழ்த்திய அதிநுட்ப ஆராய்ச்சியின் படி, இன்னும் 450 ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார் அய்யம் பெருமாள்.
இன்னும் ஒரு சிலர், 2020ம் ஆண்டு பூமியை குறுங்கோள் ஒன்று தாக்கும் என்கிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், அக்னி ஏவுகணை மூலமாக அதை அழிக்கும் திறன் உலக ஆய்வுக் கூடத்தில் உள்ளது. எனவெ, எக்காரணத்தைக் கொண்டும் பூமி அழியாது என்கிறார் இவர்.
சூரிய சக்தி மூலமாக மின்சாரம் பெறும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. அதேபோல், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டமும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலக மக்களின் தேவைக்கு மின்சாரமும், குடிநீரும் உள்ளது. எதிர்காலத்தில் நாம் அதற்கு பயப்பட தேவையில்லை என்கிறார் அவர்.
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, மாசு கட்டுப்பாட்டை சரி செய்யலாம். அதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் விஞ்ஞானி அய்யம் பெருமாள்.

Monday, January 17, 2011

கற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’...........

                                                                                                                                           அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ என்னும் பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது.
பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில் வரட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றனவாம்.
இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமியைச் சுற்றி வருகின்றன. சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது.
இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற் துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங்கும் நடமாடுகின்றன. இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன.இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களிமண் தட்டா காரணம்? இவை வேகமான காற்றினால்தான் நகர்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில்லையாம். எனவே அந்த வாதமும் எடுபடாது.
நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்பதை இது காட்டுகிறது.

இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும்தான்.
தண்ணீரில் மிதக்கும் ‘வைரம்’
வைரங்கள் அதிக பளபளப்பு கொண்டவை; அதேபோன்று விலையும் அதிகம். பட்டை தீட்டப்படாத வைரம் மிகவும் கடினமானது. இயற்கையான வைரம் உருவாவதற்கு அதிக வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகிறது. பூமியில் மிகச்சில வைரச்சுரங்கங்களே உள்ளன. உலகில் உள்ள வைரங்களில் 90 சதவீதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறது.
மற்ற எல்லா ரத்தினங்களை விடவும் வைரத்தின் படிகக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கார்பன் அணுக்களின் கட்டமைப்பே அதனை மிகக் கடினமாக மாற்றியுள்ளது. இது எண்முக வடிவம் அல்லது ஆறு சதுர பக்கங்களைக் கொண்டிருக்கும். திரவத்தில் கரையாது, கொழுப்பில் ஒட்டும், வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது போன்ற பண்புகள் வைரத்துக்கு உண்டு.
தூய வைரம் தண்ணீரில் மிதக்கும். மேலும் ஒளி விலகல் மற்றும் ஒளிபுகும் திறன் ஆகிய இரண்டும் வைரத்துக்கு உண்டு. பென்சில், நிலக்கரி மற்றும் வைரம் ஆகிய மூன்றும் கார்பன் அணுக்களால் ஆனவை. வைரங்களின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளால் அது மற்ற ரத்தினங்களில் இருந்து வேறுபடுகிறது.
பொதுவாக வைரங்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும், சில சமயங்களில் ஊதா, வெளிர் சிவப்பு, சிவப்பு, பச்சை மற்றும் அடர் சாம்பல் நிறங்களில் கூட கிடைக்கின்றன. ஊதா நிற வைரம் அதிக விலை கொண்டது. ஏனெனில் இந்தநிற வைரங்கள் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது.

Sunday, January 16, 2011

கலக்கியது "காவலன்..." மீண்டுகாட்டிய இளைய தளபதி.....


முகம் காட்டாத காதலியால், திசை மாறி வாழ்க்கையில் பயணிக்கும் இளைஞன், மீண்டும் தன் காதலியோடு இணைகிறாரா? என்பதை உணர்ச்சி பொங்க, உருக்கமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் சித்திக்.
பெரும்பான்மையான ரசிக மனங்களில் நீங்கா இடம் பெற,படங்களை தேர்வு செய்து நடிக்கும்  நாயகன் விஜய்,தற்போது காதல்,ரொமான்ஸ் பக்கம் தாவி,'காவலனாக' அவதரித்துள்ளார்.
களம் எதுவாக இருந்தாலும்,நெஞ்சில் பயமும் கவலையும் இல்லாமல் இறங்கி விளையாடுகிறவர்தான் நாயகன் விஜய் என்பதை 'ஓப்பனிங்' சீன் கம்பீரமாக சொல்லிவிடுகிறது.
ஜாலியாக சுற்றிய விஜய்க்கு சொந்தங்கள் 'பாடிகார்டு' போஸ்டிங் போட்டு, ராஜ்கிரணிடம் அனுப்புகிறது.. அங்கே போனதும் ராஜ்கிரணின் எதிரி மகாதேவனின் ஆட்களை அடித்து தூள்கிளப்புகிறார் விஜய்.
ராஜ்கிரணின் மகள் அசினை கொன்றுவிடுவதாக மகாதேவன் மிரட்ட,அசினுக்கு 'பாடிகார்டாகிறார். பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வந்ததால் என்னவோ  அசினுக்கு மேக்கப் கலரில்,பளபளப்பை கூட்டியிருக்கிறார்கள்.
மேக்கப் கலைஞருக்கு பாராட்டுக்கள். செக்யூரிட்டி யூனிபார்மிலிருந்து, காலேஜ் கேம்பஸில் விஜய் 'மெட்ரோ செக்சுவல்' பர்சனாலிட்டியாக ஸ்டைல் லுக்கில் குறும்பு கொப்பளிக்க வலம் வருகிறவர், ரொமான்ஸ் காட்சி வரைக்கும் இளமை ரகளையில் துள்ளுகிறார்.
விஜய்,அசின் இருவரும் செல்போனில் பேசி லவ்வோ லவ்வுன்னு லவ்வுகிறார்கள். பிரைவேட் போனிலிருந்து வரும் காதல் வாய்ஸ், விஜய்யை பிடித்து உலுக்கி,சிலுசிலுக்க வைக்கிறதாம்.
அசினின் 'தொலை பேசி வழி' காதலுக்கு அவரின் தோழி மித்ரா'டிப்ஸ்' தர சுவாரஸ்யமாக நகர்கிறது.காலேஜ் படிக்கும் அசின்,மித்ரா இருவருக்கும் பாடமெடுக்கும் புத்திசாலி பாடிகார்ட், நெருக்கமாக போன் வாய்ஸ் காதல் பேசும்போதும், காதலியை கண்டுபிடிக்க திணறுவதாக காட்டுவதிலிருந்து அசின் மேல் விஜய்க்கு சந்தேகம் வராமல் போவதுவரை, படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி ரசிக்கிறவர்களுக்கு கலகலப்பு தரும். யாரும் எதிர்பாராத ட்விஸ்ட், உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ்.


Thursday, January 13, 2011

இசை ராஜா யுவன்......


2010-ம் ஆண்டில் அதிக ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். 'பையா' படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தின் நாயகன் யுவன்தான் என மீடியா கொண்டாடியது. அகில இந்திய அளவில் அதிக சிடிக்கள் விற்பனையான படங்களின் வரிசையில் 'பையா' இடம்பிடித்ததென்றால், யுவன் இசையின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். இந்தப் படத்தில் இடம் பெற்ற 'துளித்துளி...' பாடல் இந்திய அளவில் டாப் 20 பாடல்கள் பட்டியலில் இடம்பெற்றது. 'நான் மகான் அல்ல' படத்திலும் பெரிதும் பேசப்பட்டது யுவனின் இசை. 2010-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படமான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' இசையும் பாடல்களும் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துவிட்டதையும் மறுக்க முடியாது. 'கோவா', 'சர்வம்', 'தில்லாலங்கடி', 'பாணா காத்தாடி' போன்ற படங்கள் வர்த்தக ரீதியில் பேசப்படாவிட்டாலும் பாடல்கள் வெற்றி பெற்றன. 2010-ல் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமையும் யுவனுக்கே உண்டு. மொத்தம் 15 படங்கள்!
வரும் 16 ஆம் திகதி சென்னையிலே யுவன் சங்கர் ராஜா  "I WILL BE THERE FOR YOU ......" நிகழ்சி நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.......

Sunday, January 9, 2011

100வது நாளைக் கொண்டாடிய எந்திரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் எந்திரன் திரைப்படம் 100-வது நாளை நேற்று கொண்டாடியது.
எந்திரன் படம் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 3000 திரையரங்குகளில் வெளியானது உலகம் முழுக்க. தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக 600 திரையரங்குகள் என்று சொல்லப்பட்டாலும், முதல் வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
ஒரு தியேட்டர் காம்ப்ளெக்ஸில் 6 திரையரங்குகள் இருந்தால், அதில் 5-ல் எந்திரனை வெளியிட்டனர். மாயாஜாலின் 10 திரையரங்குகளில் தொடர்ச்சியாக நாளொன்றுக்கு 60 காட்சிகள் வீதம் ஓட்டி வசூலை அள்ளினர்.
எந்திரனின் அதிகாரப்பூர்வ வசூல் தொகை ரூ 400 கோடி என சன் நெட்வொர்க் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. வெளிநாடுகளில் மட்டும் எந்திரன் வசூல் ரூ 70 கோடி என அறிவித்துள்ளது இந்தப் படத்தை வெளியிட்ட அய்ங்கரன் நிறுவனம். அதாவது சிறப்புக் காட்சிகள், எக்ஸ்ட்ரா இருக்கைகள், முதல் மூன்று வாரங்கள் கூடுதலாக திரையிடப்பட்ட திரையரங்குகள், கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றை தவிர்த்து, அரசுக்குக் காட்டப்பட்டுள்ள கணக்குப்படி ரூ 400 கோடி!
இத்தனையையும் தாண்டி இந்தப் படம் 100 நாட்களை 6 நாடுகளில் கடந்துள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் எந்திரன் இந்த சாதனையைப் படைத்துள்ளது.
தெலுங்கில் ரூ 40 கோடி வரை இந்தப் படம் குவித்துள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகத்தில் இந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வசூலில் மட்டுமல்ல, தரத்திலும் முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

Wednesday, January 5, 2011

சிட்னியில் இடம்பெற்ற நிகழ்ச்சி Jai Ho- A.R.Rahman's Live Concert @ Sydney 2010_part 1 உங்களுக்காக.......

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானுக்கு எமது இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள் 06.01.2011

Tuesday, January 4, 2011

காதலை எப்படி சொல்வது?

மனம் நிறைய காதல் இருந்தும் அதை எப்படிச் சொல்வதென்று புரியவில்லையா? `சொல்லத்தான் நினைக்கிறேன்... சொல்லாமல் தவிக்கிறேன்... காதல் சுகமானது' என்று நீங்களாகவே பாடிக் கொண்டிருக்காதீர்கள்.

இதோ இப்படிச் சொல்லிப் பாருங்களேன்...

* காதலைச் சொல்லச் செல்லும் முன்பாக சிறிதாக ஒத்திகை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக உங்கள் காதலியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் காதலை சொல்லும் வேளையில் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

* அவர், இயல்பான குணத்தில் இருக்கும் சாதாரண வேளைதான் உங்கள் அன்பை காதலாக மாற்றும் தருணமாகும். எனவே அவர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலைச் சொல்லத் தொடங்குங்கள்.

* காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். எந்தவித குணமுடைய பெண்ணாக இருந்தாலும் தனிமையில் சாந்தமாக இருப்பார்கள்.

* `நான் உங்களை காதலிக்கிறேன்' என்று நேரடியாக விஷயத்தை ஆரம்பிக்கக்கூடாது. எனக்கு உங்களைப் பிடிக்கும், உங்கள் சிரிப்பு பிடித்திருக்கிறது, பல சிந்தனைகளில் நமது கருத்து ஒத்துப்போகிறது, உங்களது உதவும் குணம், எல்லோர் மீதும் பாசமாக இருப்பது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்புகிறேன் என்று கூறி பிறகு `நான் உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்லலாம்.

* கையில் பூவுடன் செல்லுங்கள். அவள் நிற்கும்போது நீங்கள் காலை மண்டியிட்டு நின்று அவளது முகம் பார்த்து கைகளை நீட்டி பூவைக் கொடுத்து `ஐ லவ் மை ஸ்வீட் பேபி' என்று சொல்லலாம். இப்படிச் சொல்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நாணம் மிகுந்த பெண், உள்ளார்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் பெண்களிடம் இந்த முறையில் காதலைச் சொல்லக்கூடாது. அவர்கள் திகைப்படைந்துவிடுவார்கள்.

* வார்த்தைகளை `வளவள'வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக்கூடாது. பெண்கள் சாமர்த்தியசாலிகள். உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். இழுத்து இழுத்து பேசினால் விரும்ப மாட்டார்கள்.

* எல்லாப் பெண்களுக்கும் பூக்களைப் பிடிக்கும். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு (பொக்கே) கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. `உன்னோடு மட்டுமே இனி என் வாழ்வு கழிவதை விரும்புகிறேன்' என்று உளமாறக் கூறுங்கள். அவருக்கும் உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

* பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது ராணுவ வீரன் போலவோ, இன்டர்விïவில் மேலதிகாரி முன்பு நிற்பதுபோலவோ விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயா னவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, `அன்பே உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்லுங்கள். சொல்லும்போது உங்கள் மனம் உருகி கண்கள் செருகினால் கூட தவறில்லை. முழுக்க அவருக்கு பாதுகாப்பு அளிப் பது போலவும், உங்கள் வாழ்வு முழுவதும் அவரை சார்ந்திருப்பதுபோலவும் உங்கள் பேச்சும், உடல் அசைவுகளும் இருக்க வேண்டும். அவரைச் சுற்றி வந்து பேசுவது அதிகப்படியான காதலைக் குறிக்கும். ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண் கள்தான் காதல்

வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

* புகழ்ச்சி எல்லோரையும் கவரக்கூடியதாகும். பெண்களுக்கு அவர்களின் அழகை வர்ணிப்பது மிகவும் பிடிக்கும்

Sunday, January 2, 2011

தமிழ் திரைப்பட நட்சத்திரங்களின் கார் கலண்டர் 2011......

ஸ்ரேயா
ஜெனிலியா
ஸ்ருதி காஸன்
திரிசா
தமன்னா
நயநதாரா

நாகர்ஜுன்
ஆர்யா
கார்த்தி
சிம்பு
சூர்யா
வட இந்தியாவிலே பொலிவூட் நட்சத்திரங்களின் கலண்டர் வருடம்தோறும் வெளிவருவதுண்டு.அதனை தமிழ்நாட்டிலே அறிமுகப்படுத்தியவர் வெங்கட்ராம் என்கிற புகைப்படபிடிப்பாளர்.1930,1960 ஆண்டு காலப்பகுதியில் இருந்த கார்களுக்கு பக்கத்தில் நம் திரை நட்சத்திரங்களை நிறுத்தி வர்ணமயமான புகைப்படத்தொகுப்பை வெளியிட்டுள்ளார்...இதிலெ சூர்யா,ஆர்யா,திரிசா,ஸ்ரேயா,ஸ்ருதிகாசன் வித்தியாசமான் தோற்றங்களுடன் காட்சி தருகிண்றனர்..வெங்கட்ராம் தமிழ்சினிமாவை அடுத்த பரிமாணத்துக்கு கொண்டுபோயுள்ளார் என்று தான்சொல்லவேண்டும்..இயக்குனர் மணிரத்தினம் இக் கலண்டர் தொகுப்பை வெளியிட்டுவைத்தார்......
விக்ரம்
சூர்யா

Saturday, January 1, 2011

வா ஆண்டே புத்தாண்டே..

வா ஆண்டே
புத்தாண்டே
வசந்தங்கள் சுமந்து
வா ஆண்டே
எங்கள் புத்தாண்டே
வாடிய முகங்களில்
வசந்தங்கள் மலர
விழுந்த தலைகள்
நிமிர
வா ஆண்டே
எங்கள் புத்தாண்டே
போர் பூமி
அழித்து
பூக்கள் வளர்ப்போம்
ஜாதி மத பேதம்
தொலைத்து
ஆண்டவன் அன்பு
என்போம்
வா ஆண்டே
எங்கள் புத்தாண்டே
சுதந்திர சுவாசக்காற்றை
கருவறையில் இருந்து
வெளிவரும் போதே
சுவாசித்து கொண்டு
வெளிவருவோம்
வா ஆண்டே
புத்தாண்டே...
அனைவருக்கும் தமிழமுதத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....

Photobucket