svr.pamini

Montreal Time

Saturday, March 26, 2011

இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு தகுதி.....

டில்சான், தரங்க சதம் : இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்த இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்றது.
ஜொனதன் ட்ரொட் 86 ஓட்டங்களையும் மோர்கன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, திலகரட்ன தில்ஷான் இருவரும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.
திலகரட்ன தில்ஷான் 108 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றார். இது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்ற 10 ஆவது சதமாகும். இந்த உலகக்கிண்ணத் தொடரில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.
உபுல் தரங்க 102 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றார். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 11 ஆவது சதமாகும்.
எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகனாக டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.

Thursday, March 24, 2011

விஜயகாந்த்தை விளாசிக்கட்டிய வண்டுமுருகன்......



திருவாரூர் தெற்கு ரதவீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு, இந்த பூமிக்குள் வரும்போது இந்த மண்ணை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டு தான் வந்தேன். அப்படி ஒரு மண். இந்த மண். நான் திரையில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் ஒரு மனிதனுக்கு எது தேவைப்படுகிறது.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது. நான் மக்களில் ஒருவனாக பேசுகிறேன். கலைஞர் போட்ட திட்டங்களை கேட்டபோது, கண்ண கட்டுது. எதிர் அணி மிரண்டு கிடக்கிறது. எல்லா பக்கமும் அணைகட்டி வைத்துவிட்டார் கலைஞர்.
கர்ப்பிணி பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கருவில் உள்ள குழந்தையும் பயன் அடைகிறது. நான் 25 வயதுக்கு மேல் தான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால் கருவில் உள்ள குழந்தை மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது. நேற்று ஒருவர் கட்சியை ஆரம்பித்துவிட்டு, நாளைக்கு முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். என்னவென்றால் அவர் கல்யாண மண்டபத்தின் இடையில் இரண்டு தூண் வந்துவிட்டதாம். அதற்கு ஒரு கட்சியை ஆரம்பித்து, நான் அடுத்த முதல் அமைச்சர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. அந்த பதவி என்ன சாதாரண பதவியா. கல்யாண மண்டபத்தில் இரண்டு தூண் வந்ததற்கு, உடனே கட்சியை ஆரம்பித்து முதல் அமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர். நீங்கள் பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி, நீங்கள் ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா.
ஒருத்தர் என்னிடம் கேட்டார். ஏங்க அவர (விஜயகாந்த்) எதிர்த்து நிற்க போறேன் என்று சொன்னீர்களே, நிற்க போறீங்களா என்றார். அவரை எதிர்த்து நின்றால் எனக்குத் தான் கேவலம். மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட் வாங்க போனீர்களே. அங்க என்ன முதல் அமைச்சர் பதவி கொடுப்பார்களா. மிகப்பெரிய வீராப்பா பேசினீங்க. அந்த கட்சி பெயர் கூட வாயில் வர மாட்டேங்குது. நாக்கு மூக்காவா, மூக்கு முக்காவா, தேக்கு மூக்கா ஏதோ சொல்றாங்க.
முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதே போல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு. நான் இந்த அணிக்கு வர காரணம் அண்ணன் அழகிரி மற்றும் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களும்தான்.
கலைஞர் ஆட்சிக்கு வந்தால் அவர் சொன்னதை செய்வார். நமக்கு என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் கேட்டு பெறலாம் என்றார்.

Friday, March 18, 2011

மர்ம நகரமான அட்லாண்டிஸ் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு) ...


பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இவர்கள் இந்நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள், டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.

கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ(கி.மு 428/427-348/347) தமது "திமேயஸ்" மற்றும் "கிரேட்டஸ்" எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.

அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச் செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.

அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்(கி.மு.384-322) கற்பனையானவை எனக் கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.

மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Sunday, March 13, 2011

கொலையும் செய்யும் காதல்

காதல் என்பது இருமனிதர்கள் சந்தித்துக் கொள்ளும் தருணத்தில் மூளைக்குள் மின்னி மறையும் உணர்வுதான். அது ஆண், பெண்ணுக்கு இடைப்பட்டதாகவோ அல்லது இரு ஓரினப் பாலினருக்குஇடைப்பட்டதாகவோ அமைந்துவிடுகின்றது. மின்னி மறையும் நொடியில் ஏற்படுத்தப்படும் ஈர்ப்பின் ஆழத்திலேயும், நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு காதல் வயப்படும் நபர்களிடம் இருக்கும் சாதகத் தன்மைகளிலேயுமே அந்தக் காதலின் புனிதத்தன்மை இருக்கிறது. அதன் நிலைத்திருப்பும், உண்மைத் தன்மையும் அடங்கியிருக்கின்றன

ஆனால் அண்மைக்காலமாக யாழ்ப்பாணப்பத்திரிகைகள் வெளியிடும் காதல் தொடர்பான செய்திகள் அதிர்ச்சி தருவனவாயுள்ளன. தொடர்ச்சியாகப் பிறந்த சூடு ஆறும் முன்னேயே அழகான சிசுக்கள் தெருக்களில் எறியப்படுகின்றன. பற்றைக்காடுகளுக்குள் உரப்பைகளில் சுற்றிப் போடப்படுகின்றன. வீட்டுக்கோடிகளில் புதைக்கப்படுகின்றன. இந்த நிலைமை நல்ல பண்பாடுமிக்க சமூகமொன்றுக்கு விழுந்த சாபக்கேடாகவும் நோக்கப்படவேண்டும்.
 
கடந்த ஆண்டு வெளியான யாழ்ப்பாணப் பெண்கள் பற்றிய தரவு அறிக்கையொன்றில் 250 இற்கும் மேற்பட்ட பெண்கள் தந்தையின் பெயர் தெரியாத குழந்தைகளை வைத்திருப்பவர்களாக இருக்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைகளில் வெளியிடும் தகவல்களைவிட சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பில் ஈடுபடும் திருமணமாகாத இளம் பெண்களின் தொகை பல மடங்காக அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் உயர்தரப் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர் நிலையைக் கடக்காத பெண்பிள்ளைகளே இந்த நடவடிக்கைகளில்  ஈடுபட்டுவருவது கவலையளிக்கின்றது. இக் கவலையளிக்கும் செய்திகளில் இருந்துதான் யாழ்ப்பாணத்தில் காதல் பிறக்கும் தருணங்கள் பற்றிச் சிந்திக்க வைத்தது. இன்றைய இளைஞர், யுவதிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட கைத்தொலைபேசி, Face Bokk போன்றன எல்லா எல்லைகளையும் கடந்து உறவைப்பேண வைக்கிறது. அந்த  உறவு கர்ப்பப்பைவரை ஊடுருவி அதனை நிரப்பிவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் வரை நிலைத்திருக்கும் வகையில் பின்னப்படுகிறது, பிணைப்பில் ஈடுபடுகிறது என்பதே இங்குள்ள சோகம். இதற்கு அதிவேகமாகப் பரவிக் கொள்ளும் காதல் காய்ச்சல்தான் பிரதான காரணம்.யாழ்ப்பாணத்து நகர்ப்புறங்களிலும் உள்ளகப் பகுதிகளிலும் இருக்கும் வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் போன்றன அதிகளவில் பெண் உழைப்பாளர்களை நம்பியே வாழ்கின்றன. அந்த நிலையங்களில் பொருள் விற்கப்படுகிறதோ இல்லையோ பெண் உடலங்கள் இலகுவாக விற்கப்பட்டுவிடுகின்றன.
வணிகமயப்பட்டுப் போன கல்வி, சாதாரணதரம் படிக்கும் பிள்ளையைக்கூட நகரம் நோக்கி இழுக்கிறது. இந்த ஈர்ப்புக்கள் முகம் முன்தெரியா, பின்தெரியா நபர்களோடு தொடர்பினை உருவாக்கி வருகிறது. இதில் பல நன்மைகள் இருப்பினும் கட்டுரையின் பிரதான கருப்பொருளுக்கு அமைவான காரணிகளும் இருக்கின்றன. தனியார் கல்வி நிலையங்களில் வேலியே பயிரை மேயும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. மாணவியையே காதலித்துத் திருமணம் செய்து பிரச்சினைப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதுபோல் பேருந்து நடத்து நர்கள் மீதும் இந்தக் குற்றங்கள் சுமத்தப்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் காதலின் கலைக்களஞ்சியமாக மாறிவிட்டது போலவே காட்சியளிக்கிறது. முதலாம் வருட மாணவர் தொடக்கம் முதுநிலை விரிவுரையாளர்கள்வரை புரியும் லீலைகள் யாழ்ப்பாணத்து மக்கள் அறியாத செய்தியல்ல. பல்லினப் பண்பாடுகளுடன் வரும் ஆண்களும் பெண்களும் பெரும் கற்பனைகளோடும் கனவுகளோடும் உள்நுழைகின்றனர். இடைக்காலத்தில் தொற்றிக்கொள்ளும் காதல் மயக்கம் கொஞ்ச நாள்களுக்குள்ளேயே தோலுக்கானதாகவும், தசைக்கானதாகவும் மாறிவிடுகிறது. வெறும் பொழுது போக்குக்காகவும் சுகங்களுக்காகவும் காதல் வயப்படுகின்றனர். 4 வருடமும் ஒரே காதல் சோடியாய் எங்கும் திரிபவர்கள் பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறியவுடன் வேறொரு வரை நலன்களின் அடிப்படையில் திருமணம் செய்துகொள்கின்றனர்.
 
ஆனாலும் பல்கலைக்கழகச் சூழலிலும், தமிழ்ச் சமூகத்திலும் கற்பு என்பது பிரதான ஒழுக்கப்பண்பாகவே பேசப்படுகிறது. பேருந்துகளிலும்,பேருந்து நிலையங்களிலும் காதல்படும்  பாட்டை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பேருந்தின் பின் இருக்கைகளின் முன் இருக்கும் இருக்கைகளில் பின்பக்கம் பெரும்பாலும் கைத்தொலைபேசி இலக்கங்கள் பொறிக்கப்படாமல் இருப்பதேயில்லை. 

பேருந்துக்குள் நிற்கும் சில இளைஞர்யுவதிகள் பயணச் சிட்டைகளையும் நாணயத் தாள்களையும் காதலைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகமாகவே  கையாளுகின்றனர்.  இந்தத் தொடர்புகளால் உருவாகும் பிணைப்பின் உச்சத்தில் இளைஞர்களும் யுவதிகளும் நடந்து கொள்ளும் முறைகள் பஸ்ஸினுள் பயணிப்பவர்களைக் கூடக் கவனிக்காத அளவுக்குச் சென்றுவிடுகிறது. அந்த லீலைகள் அவர்களின் பெற்றோருக்குச் சமமானவர்களையோ, கற்பித்த ஆசிரியரையோ, மதிப்பதில்லை. பேருந்து நிலையம் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
யாழ்ப்பாண பெருநகரத்தில் அடிக்கடி ஒழுங்குபடுத்தப்படும் களியாட்டங்களும் நிகழ்ச்சிகளும் அதிகமாக மேய்ந்தது பெண் உடலங்களைத்தான். நிகழ்வு முடிந்து மறுநாள் காலை அந்த இடத்தைப் போய்ப் பார்த்தால் அங்குள்ள மறைவான இடங்களில் அதிகமாகச் சிதறிக்கிடப்பவை ஆணுறைகளும் உள்ளாடைகளும்தான்.
இந்தக் கட்டுக் கடங்காச் சுய கட்டுப்பாட்டு மீறல்கள்தான் நம் இடங்களைச் சிசுக்களை எறியும் குப்பை மேடுகளாக மாறவைக்கின்றன. 

காதல் என்பது ஓர் உணர்வு. அது தவறாகப் பேசுவதற்கு அருவருப்பான ஒன்றில்லை. தமது சமூகப் பெறுமதியையும் அதன் உயர்தரமான பண்பாட்டையும் கவனத்திலெடுத்து காதலைக் காதலிக்க வேண்டும். இல்லையேல் அநாதைச் சிசுக்களின் எண்ணிக்கையும் தந்தை தெரியாத பிள்ளைகளுடன் இளம் தாய்மார்களது எண்ணிக்கையும் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.
 

Friday, March 11, 2011

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: ஆழிப்பேரலையால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவிப்பு இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை(வீடியோ இணைப்பு)...

ஜப்பானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாரிய ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை.
ஜப்பானின் வடக்குகிழக்கு பகுதியில் 7.9 ரிச்டர் பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் மியாகி கரையோரப் பிரதேசத்தில் 20 அடி உயரமான அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டோக்கியோவில் இருந்து 250 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள இடத்தில் பூமியின் மேற்புறத்தில் இருந்து 20 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் 6.9 ரிச்டர் பரிமாண நில அதிர்வும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல வீடுகளும், கட்டிடங்களும் மற்றும் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன.  செண்டை நகரில் உள்ள ஒரு பெற்றோல் ஸ்ரேசன் தீப்பற்றியதால் பல இடங்களில் தீப்பரவலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதே வேளை ரஸ்யா மற்றும் தாய்வான் ஆகிய இடங்களுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
40 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
அவ்வாறு ஜப்பானில் உள்ள தமது உறவினர்கள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள விரும்பும் நபர்கள் 0772267929/0115743362/011-4719593 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
பிந்திய செய்தி
ஜப்பானின் வட கிழக்கு கடலோரப் பகுதிகளில் பயங்கர பூகம்பத்தின் தொடர்ச்சியாக சுனாமி தாக்கியதில் பேரழிவு ஏற்பட்டது.
செண்டாய் நகரில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி வரை 200-ல் இருந்து 300 வரையிலான உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்,
மேலும், 88 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. 349 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கிய பகுதிகளில் மீட்புப் பணிகளில் 900 வலுவான அவசரக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
டோக்கியோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 மைல்கள் ஆழத்தில் இன்று ஏற்பட்ட கடுமையான பூகம்பம், ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியிருந்தது.
கடலில் எழுந்த சுனாமிப் பேரலைகள் கப்பல்கள், கட்டடங்கள் என அடித்து துவம்சம் செய்தபடி நிலப் பகுதிகளை கடுமையாகத் தாக்கியது.
இந்த சுனாமி தாக்குதலுக்கு கடற்கரைப் பகுதியான செண்டாய் மிக அதிக பாதிப்புக்குள்ளானது.
இதன் தொடர்ச்சியாக ரஷ்யா, தைவான், இந்தோனேஷியா, ஹவாலி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டு வரும் சுனாமி காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சுனாமிப் பேரழிவால், ஜப்பான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சேதம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பசிபிக் கடலில் இருந்து எழும்பிய சுனாமிப் பேரலைகள் 13 அடி வரை மேலெழுந்து ஜப்பானின் கடலோர நகர் பகுதிகளைத் தாக்கியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அணு உலை நிலையங்கள், முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
டோக்கியோ, ஒசாகி, கியோடோ உள்ளிட்ட நகர்களில் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை இல்லை என்றும், இந்தியா, இலங்கை போன்ற ஏனைய ஆசிய நாடுகளுக்கு ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் சுனாமி... செய்தித் துளிகள்
* ஜப்பானில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் இது.
* வடகிழக்கு கடற்கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்கின.

* கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவு.
* செண்டாய் நகரில் ஒரே நாளில் 300 சடலங்கள் மீட்பு.
* ஏறத்தாழ 400 பேர் காணவில்லை என்கிறது ஜப்பான் போலீஸ்.
* ஒட்டுமொத்த அழிவை மதிப்பீடு செய்வது இப்போதைக்கு மிகக் கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.
*  சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது.
* பகுஷிமா டேய்சி அணு உலை பாதித்ததால் மூடப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த சுமார் 2000 பேர் வெளியேற்றம்.
* மியாகி பகுதியில் ஊள்ள இன்னொரு அணு உலையில் தீ விபத்து.
*  தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரிக்கை.
* பசிபிக் கடல் பகுதி நாடுகளில் சுனாமி எச்சரிக்கை. ஹவாய் தீவுகளை குறைந்த மீட்டரில் சுனாமி எழுந்ததால் பாதிப்பில்லை.
* லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலியிலும் சுனாமி எச்சரிக்கை.

Friday, March 4, 2011

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது iPad 2...

                                                  இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலத்திரனியல் சாதனமான அப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 2 டெப்லட் கணனி நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
i pad 2
இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்விற்காகஅப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர் ஸ்டீவ் ஜொப்ஸ் தனது சுகயீனத்தையும் பொருட்படுத்தாமல் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ பேட் & ஐ பேட் 2
அப்பிளின் முதல் ஐ பேட்கள் உலகம் முழுவதும் சுமார் 15 மில்லியன் விற்பனையாகியதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

Tuesday, March 1, 2011

லிபியா அதிபர் கடாபியும் அவரது பெண் பாதுகாவலர்களும்......

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் ராணுவத்தின் ஒரு பிரிவினர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பென்காசி உள்ளிட்ட 2 நகரங்கள் போராட்டக்காரர்கள் பிடித்தனர்.

அதன் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது, “மிசுரதா” என்ற 3-வது நகரத்தையும் போராட்டக்காரர்கள் பிடித்துள்ளனர். இது தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நகரத்தை விட்டு அதிபர் கடாபியின் ஆதரவு படைகள் ஓடிவிட்டன. இந்த நகரின் சிறு பகுதி மட்டுமே ஆதரவு ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. 

இதையொட்டியுள்ள பாப் ஆல்- அஷிஷியா நகரமும் போராட்டக்காரர்கள் வசம் செல்லும் நிலை உள்ளது. எனவே, அதை காப்பாற்றிக் கொள்ள கடாபி தனது டாங்கி படைகளை அரண்போல் நிறுத்தி வைத்துள்ளார். இதுவரை லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு அதிபர் கடாபியை 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. மேலும், கடாபி அரசுக்கு ஆயுதத்தடை விதித்தும், கடாபியின் சொத்துக்களை முடக்கியும், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை தடை செய்யும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போராட்டத்தின்போது கடாபி அரசால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் விசாரிக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிபர் கடாபி லிபியாவை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, அதிபர் கடாபியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். எனவே, அவர் மேலும் ரத்தம் சித்தாமல், வன்முறையை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் பேர் லிபியாவில் இருந்து துனிசியாவுக்கு சென்றுவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தை சேர்ந்தவர்கள். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை தெரிவித்துள்ளது
Photobucket