டில்சான், தரங்க சதம் : இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு தகுதி |
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்த இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்றது. ஜொனதன் ட்ரொட் 86 ஓட்டங்களையும் மோர்கன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை பந்துவீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, திலகரட்ன தில்ஷான் இருவரும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். திலகரட்ன தில்ஷான் 108 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றார். இது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்ற 10 ஆவது சதமாகும். இந்த உலகக்கிண்ணத் தொடரில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும். உபுல் தரங்க 102 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றார். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 11 ஆவது சதமாகும். எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக டில்சான் தெரிவு செய்யப்பட்டார். ![]() |
Saturday, March 26, 2011
இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு தகுதி.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment