svr.pamini

Montreal Time

Friday, February 24, 2012

ஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன?(with vedeo link)

இலங்கையிலும், இலங்கையைப் பற்றிய அக்கறை உள்ள உலகின் ஏனைய இடங்களிலும் இப்போது அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விடயம்.. ஜெனீவா.

இலங்கையில் தமிழரின் இனப் பிரச்சினை + போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகின் ஒவ்வொரு இடங்கள், நகரங்கள் அதிகமாகப் பேசப்பட்டு கவனங்கள் குவியும் இடங்களாக இருந்திருக்கின்றன.

80களில் திம்பு (பூட்டான்), சென்னை, கொழும்பு, டில்லி, நல்லூர், பின்னர் 90களில் வன்னியின் பல இடங்களும் 2000களில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்த வெளிநாட்டு நகரங்களும் (குறிப்பாக ஒஸ்லோ), யுத்தங்கள் உக்கிரம் அடைந்து எங்கள் அடையாளங்கள் தொலைந்துபோன பல்வேறு சிறு ஊர்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்த செய்தி மையங்களாக மாறிப் போயின..
இறுதியாக முள்ளிவாய்க்கால்.



இப்போது தமிழரின் தலைவிதி யார் யாராலோ எழுதப்படும் வேளையில் இலங்கைக்கு தலையிடியைக் கொடுக்கின்ற ஒரு இடமாக மாறியுள்ள நகரம் ஜெனீவா.


ஜெனீவா தொடர்பில் இன்று நம்மில் பேசாதவர்கள் இல்லை. முழு தமிழ் சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் தொடர்பில்தான்.

இந்நிலையில் இலங்கையில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் இன்றைய வியாழன் விடியலில் (வழக்கமாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் நாள்) தகவல்கள், தரவுகள், பின்னணிகளைத் தேடி எடுத்து (இதில் எங்கள் செய்தி ஆசிரியர் லெனின்ராஜ் எனக்கு நிறையவே உதவி இருந்தார்) இன்று வழங்கி இருந்தேன்..

பல நண்பர்கள் + நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதைப் பதிவாகவும் தரலாம் என்று எண்ணி இந்த இடுகை.
மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள வது வருடாந்த அமர்வு பற்றிப் பார்க்க முதல் கொஞ்சம் வரலாற்றுப் பின்னணிகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.



இலங்கை அரசுக்கு கேட்டாலே ஈயத்தை காதில் ஊற்றும் ஒன்றாக இருக்கும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் இதில் முக்கியமானது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வரலாற்றில் உதித்து பரிணமித்ததே சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம்.

ஆரம்ப கால கட்டத்தில் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்களினால் அதிகமான பொது மக்கள் உயிரிழந்தனர்.
அத்துடன் உள்நாட்டு யுத்தங்களும் காணப்பட்டன.
இந்த நிலை வலுவடைந்து இனம் மற்றும் மத ரீதியான யுத்தமாக மாறின.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டம் ரீதியாக உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டதே மனித உரிமைகள் ஆணையகம் ஆகும்.

இதன் முதற்கட்டமாக ஆரம்பத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச பேச்சுவார்த்தை ஒன்று 1864 ஆம் அண்டு Jean Henri Dunant   நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று உருவாக்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் இந்த உடன்படிக்கையை ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

அத்துடன் 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையின பரிந்துரைகள் 1906 ஆம் ஆண்டு சீர்திருத்தப்படடதுடன் கடல் மார்க்க யுத்தங்களுக்கும் இவை பொருந்தும் என பரிந்துரைக்கப்பட்டது.

1929 ஆம் ஆண்டு மூன்றாவது உடன்படிக்கையின் போது யுத்தத்தை முறையாக நடத்துவது  தொடர்பான நிபந்தனைகள் இதில் சேர்க்கப்பட்டன.

இதன்போதே அனைத்து நாடுகளுக்க அதிர்ச்சியளிக்கும் இரண்டாம் உலகப்பேர் ஆரம்பமாயிற்று.
இதற்கமைய 1945 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் இரண்டாம் உலகப்போர் வலுப்பெற்று அமெரிக்காவின் ஆதிக்கம் உலக நாடுகளுக்கு விளங்கியது.

இரண்டாம் உலக போர் நிறைவின் பின்னர் அதிகமான நாடுகள் உடன்படிக்கையை மீறியதாக மனித உரிமைகள் ஆணையகம் அறிவித்தது.

தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுவீடனின் ஸ்டொக்ஹம் நகரில் இடம்பெற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்;தின் மாநாட்டில் மனித உரிமை ஆணையகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சட்டங்களில் புதிய நான்கு உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன.

குறித்த நான்கு புதிய உடன்படிக்கைகளுக்கும் 1949 இல் ஜெனீவாவில் இடம் பெற்ற மாநாட்டின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இது தான் இன்று வரை சர்வதேச யுத்தங்கள், உள்நாட்டு யுத்தங்களின்போது கடைப்பிடிக்கவேண்டிய மனிதாபிமான சட்டங்கள் அடிப்படையாகக் கொண்டுவரப்பட்டன.



இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை என அனைவராலும் தற்போதும் பேசப்படுகின்றது..

இந்த நான்காவது உடன்படிக்கையின் பிரகாரம் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் யுத்த பிரதேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருத்தல், 
தனி நபரையோ குழுக்களாகவோ பொதுமக்களை நாடுகடத்தல், 
பாலியல் ரீதியில் துன்புறுத்தல் 
உடல் உள ரீதியில் வதைத்தல், 
விசாரணையின்றி விளக்கமறியலில் வைத்தல், 
நியாமின்றி சொத்துக்களை அழித்தல், 
இன மத தேசிய ரீதியில் மற்றும் அரசியல் ரீதியிலும் பாரபட்சம் காட்டுதல் 
என்பன முற்றாக தடைசெய்யப்படல் வேண்டும் என சரத்துக்களில் பரிந்துரைக்கப்பட்டன.

எனினும் இரண்டாவது உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சி, மற்றும் விடுதலை போராட்டங்கள் காரணமாக குறித்த உடன்படிக்கை மீண்டும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலை மேலும் மோசமடைய 1977 ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 1949 உடன்படிக்கைகளுடன் மேலும் இரண்டு புதிய உடன்படிக்கைகள் இணைத்துக்கொள்ளப்பட்டன.

1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கைகளில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்தன.
உட்னபடிக்கைகள் தொடர்பில் நாம் பார்க்க வேண்டுமானால் முதலாவது உடன்படிக்கை.

1864 ல் முதலாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.
2. எல்லாத்தரப்பைச்சேர்ந்த வீரர்களுக்கும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.
3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
4. இந்த உடன்படிக்கையின் கீழ் பணிபுரியும் நபர்களையும்  உபகரணங்களையும் இனங்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்

1929 ல் மூன்றாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்துதல்.
2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கல்.
3. கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குதல்

1949 ல் நான்காவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.
2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது
3. யுத்த கைதிகளை நடாத்தும் விதம் பற்றியது
4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.

இதற்கமைய 1977 உடன்படிக்கையின் சாரம் இவ்வாறு அமைகின்றது.
சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள் (கெரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.

இது வரை குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் மனித உரிமை ஆணையகம் தோற்றம் பெற்றமைக்கு பிரதான காரணங்களாக அமைந்தவையும் மற்றும் அந்த ஆணையகத்தின் நிபந்தனைகளும். This post copied From Arv loshan.. thanks a lot loshan for those true information..

Sunday, February 19, 2012

வெளிநாட்டு மாபிள்ளை மோகம்..!!!!

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் மோகத்தால் யாழ்ப்பாணப் பெண்களின் கனவுகள், உணர்வுகள் அனைத்தையும் கொலை செய்கின்றனர் பெற்றோர்கள்.

அயல் வீட்டில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் வெளிநாட்டுப் பணம். அதனால் ஏற்படும் ஆடரம்பர வாழ்வு என்பன பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனங்களில் வெளிநாட்டு மோகம் தாண்டவம் ஆட வைக்கின்றது.

வெளிநாட்டில் உள்ள ஒரு ஆணைத் தன் பிள்ளைக்குத் திருமணம் செய்து வைப்பதன் ஊடாக அயல் வீட்டில் ஏற்பட்டிருக்கும் ஆடம்பரம், சுயநல வாழ்க்கையைத் தாங்களும் அனுபவித்துக் கொள்ளலாம் என்ற ஆசையால் தாங்கள் பெற்ற பிள்ளையின் மனங்களில் நிறைந்து கிடக்கும் உணர்வுகள், கனவுகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து விடுகின்றனர் பெற்றோர்கள்.

அயல் வீட்டில் ஏற்பட்ட வெளிநாட்டுப் பணப் புழக்கம் ஒரு பக்கம் இருக்க, நான்கு, ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் வீட்டில் தாண்டவம் ஆடும் வறுமையும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.

இதனால் வறுமையை எண்ணி சமுதாயச் சந்தையின் போட்டி வியாபாரத்தில் பருவமடையாமல் பறிக்கப்படுகின்றது யாழ்ப்பாணப் பெண்களின் வாழ்க்கை.

தான் பெற்ற பெண் பிள்ளைகளைத் தாத்தாவுக்கு வாழ்க்கைப்படத் தயாராக்குகின்றனர் பெற்றோர்கள். பெண்களுக்குள் இருக்கும் கனவுகள் விலைபேசப்படுகின்றன வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு.

பெண் பிள்ளைகளின் இதயத்தின் வலிகளைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்களால் தன் உணர்வுகளைத் தனக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டு பெற்றோரின் அற்ப ஆசைக்காகவும், வறுமைக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர் பெண் பிள்ளைகள்.

முகம், பெயர் தெரியாத ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, கண்காண இடத்தில் கடல் கடந்து சென்று, அவன் எப்படியானனோ? அல்லது அவனுக்கு அங்கு வேறு தாரம் உண்டோ? என்று தெரியாமல் அங்கு சென்று ஒரு நாதியற்றவளாய், கேட்பாரற்று நிலைதடுமாறு, தனிகுனிந்து தனது புதுவாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வாழ்க்கையால் அனுப்பி வைக்கப்படும் பணம் இங்கு அதிஉச்ச ஆடரம்பர வாழ்க்கைக்கும், சுகபோக வாழ்க்கைக்கும் செலவழிக்கப்பட, அங்கு அவளின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்படுகின்றது.

எனவே ஒட்டுமொத்தமாக அத்தனை பெற்றவர்களையும் குறை சொல்வது பொருத்துடையதன்று.

அதாவது பெற்றவர்களுக்கு முன், உறவுகளுக்கு முன் பெற்ற பெண் பிள்ளைகளை வாழ வைத்து அதில் மகிழ்ச்சி காண எத்தனையோ பெற்றோர்களுக்கு விரும்பம் இருந்தாலும் கூட,

தற்போது யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விலை போல எகிறிக் கொண்டு செல்லுகின்றது சீதனம் என்ற பெயரில் வாங்கப்படும் கப்பம்.

இதனாலும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் நிலை பெரிதும் பாதிப்படைவதுடன், சீதனம் இன்றிப் பெண் எடுக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளையே நாடி நிற்கின்றது.

அதிலும் அழகு குறைந்த பெண்ணாக இருந்தால் வெளிநாட்டு மாப்பிள்ளை விரும்ப மாட்டார். எனவே ஒட்டுமொத்தத்தில் பெண்களைப் பெற்றவர்களின் நிலை கவலைக்கிடமாகவேயுள்ளது.

Monday, February 13, 2012

மனதைக் கொள்ளை கொள்ளும் மெல்லிசையில் அமைந்த சிறந்த Top 10 காதல் பாடல்கள்..!!!

மனதைக் கொள்ளை கொள்ளும் மெல்லிசையில் அமைந்த சிறந்த காதல் பாடல்கள்.. இசைஞானி இளையராஜா, மற்றும் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான், மற்றும் யுவன்சங்கர்ராஜாவின், இசையில் அமைந்த பாடல்கள் காதலில் எற்படும் சிறிய இன்பவலிகளையும் இசையால் எமக்கு நினைவூட்டி காதல் எனும் இன்பக் கடலில் எம்மை மூழ்கச்செய்து திக்குமுக்காடவைத்திருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடம் கிடைக்காது...!!

1) தொடத் தொட மறந்ததென்ன ...பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன????









2)  எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிருகட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே....





3)  நான் வானவில்லையே பார்த்தேன்....
அது காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னல் பார்வை ஜன்னலில்.....
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்....





 4)மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும் வானம் உந்டோ சொல்........







 5)மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி.....
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி.....
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி......
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி.........

 6) இதயம் துடிப்பது நின்ற்ஆலும்
இரண்டு நிம்டம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கணம் என்னுயிர் தாங்காது









 7) விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா.........




8)  நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே.....
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே.....
ஓஹோ....ஓஹோ...ஓஹோ..ஓஹோ..ஓஹோ..

 9)மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே..
ஓ.. லட்சம் பல லட்சம்...பூக்கள் ஒன்றாக பூத்ததே...
உன் வார்த்தை தேன் வார்த்ததே...மௌனம் பேசியதே...
குளிர் தென்றல் வீசியதே...ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே...




10)  நீ இல்லை என்றால், வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்து, சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,...
ஓஹ் காதல் என்றாலும், அவ்வார்த்தை பொல்லாது,
அவ்வார்த்தை போல் என்னை, கூர் வாளும் கொல்லாது,..
அன்பே அன்பே உன் ஆடை என்று,
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று,
நீ இல்லை என்றால், வாழ்கையில் இல்லை வானவிலே???????

Sunday, February 12, 2012

காதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது? ஆய்வாளர்கள் கருத்து



காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக் கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள்.
காதலிப்பவர்களை கவர்வதற்காக இளமையின் வேகத்தில் எத்தனையோ சாகசங்களை செய்பவர்கள் ஏராளம். மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங்களை சேகரித்தாலே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாக்கலாம்.
நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் ரொமான்டிக் செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறார்கள்.
புரிதலும் விட்டுகொடுத்தலும்
காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகி விடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும். உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல் வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும்.
நீங்களும் அப்படிப்பட்டவர் எனில் காதல் வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதனை மன்மதக்காதல் என்கின்றனர் ரொமான்டிக் ஆய்வாளர்கள். இந்த வகை காதலர்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து ஆத்மார்த்தமான காதலர்களாக திகழ்வார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒருவருக்கொருவர் புரிதல் தன்மையுடனும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தும் வாழ்வார்கள். இந்த காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.
பொழுது போக்கு காதல்
காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏகப்பட்ட செயல்களை செய்து அவளை தன்வசமே வைத்திருக்கும் காதலர்கள் ஏராளமானோர் உண்டு. இத்தகைய காதல் கவன ஈர்ப்புக்காதல் என்கின்றனர்.
உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது எனவே இது முழுமையான காதல் அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள் நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள்.
அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கின்றனர் அவர்கள்.
வாழ்க்கை முழுதும் தொடரும்
காதலியின் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவள் மீது உள்ள அக்கறையினால் எண்ணற்ற செயல்களை செய்து அவளின் நன்மதிப்பினை ஏராளமாக பெறும் ஆண்கள் உண்டு. கண்ணியமான பார்வையும் நேசத்தை வெளிப்படுத்த சரியான தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலை சேமிப்புக் காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும் என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள்.
இருவரும் ஆழமான அன்பு வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.
எல்லைமீறாத காதல்
இருவருக்கும் பரஸ்பரம் பிடித்திருக்கிறது. இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டாலும் எல்லைமீறாமல் செல்கிறது உங்கள் காதல். ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை பட்டியலிட்டாலும் முட்டிக்கொள்வதில்லை. காமத்தைப் பற்றிப் பேசினாலும் விசரம் இல்லை எனில் உங்கள் காதல் திட்டமிட்டக் காதல்.
வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.
விட்டுக்கொடுக்காத காதல்
ஒருவருக்கொருவர் சீண்டிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். எல்லை மீறல்கள் இருந்தாலும், அந்த சீண்டலை அனுமதிப்பர்.
உங்களுடைய காதல் இப்படிப்பட்டது என்றால் அதனை இனிப்பு காதல் என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும்.
அதிக உணர்ச்சியும் கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார்.
இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உயிர் தரும் காதல்
காதலிக்கோ, காதலருக்கோ ஏதாவது ஒன்று என்றால் உடனே அக்கறையுடன் கவனிக்க கிளம்பிவிடுவார்கள். விளையாட்டுக்கு அழைத்தால் கூட லீவ் போட்டுவிட்டு உடனே காதலிப்பவர்களை உடனே பார்க்க கிளம்பிவிடுபவர்களா நீங்கள். அப்படியானால் ஆத்மார்த்தமான இந்த காதலை வெற்றிக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.
என்ன காதலர்களே நீங்களும் உங்கள் காதல் எப்படிப்பட்டது என்றும் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டுபிடித்து கொள்ளுங்கள்.

Friday, February 10, 2012

முழு Microsfitஐயும் மிஞ்சிய தனி iPhone வருவாய் ..!!!


Microsfitநிறுவனத்தின் முழு வருவாயையும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone வருவாய் மிஞ்சி விட்டது. பிந்திக் கிடைத்த காலாண்டு விற்பனைத் தகவல்களின்படி Microsfitநிறுவனத்தின் சகல துறைகள்( Xbox, Windows, Microsoft Office and Windows Phone) மூலமாகக் கிடைத்த வருவாய் 20.9பில்லியன் டாலர்கள் அதேவேளை ஆப்பிள் நிறுவனம் iPhone விற்பனையில் மாத்திரம் 24.4பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியுள்ளது. 37.04 பில்லியன் ஐபோன்கள் விற்பனையாகி உள்ளன. இப்போது 100பில்லியன் டாலர்கள் காசுக் கையிருப்புடன்ஆப்பிள் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.




Microsfitஇன் பதிலடி

Microsfit இன் உள்ளக காணொளிப் பதிவு ஒன்று வெளியே கசிந்ததால் அவர்களின் புதிய திட்டம் அம்பலமாகியுள்ளது.ஐபோன்களின் வெற்றிக்கு அவற்றில் பாவிக்கப்படும் செயலிகள் (applications) ஆகும். இதனால் Microsfit தனது விண்டோஸ் இல் பாவிக்கடும் செயலிகள் பாவிக்கப்படக் கூடிய வகையில் தனது விண்டோஸ் கைப்பேசிகளை மாற்றி அமைக்க விருக்கிறது. Microsfit நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து செயற்படுகிறது. அடுத்த விண்டோஸ் கைப்பேசிகள் ஆரம்பத்தில் ஒரு இலட்சம் செயலிகள் உடையதாக இருக்கும். அத்துடன் கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு விண்டோஸ் கைப்பேசி மூலம் பணத்தைச் செலுத்தும் முறைமையான NFC (near field communication) உள்ளடக்கப்பட்டிருக்கும்.




2015இல் ஐபோன்களை விண்டோஸ் கைபேசிகள் மிஞ்சும்

Microsfitஇன் புதிய திட்டங்களைப் பார்த்த தொழில்நுட்ப ஆய்வாளர்கள் 2015இல் விண்டோஸ் கைப் பேசிகள் ஐபோன்களை மிஞ்சும் என்கின்றனர். சென்ற ஆண்டு விண்டோஸ் கைப்பேசிகள் மொத்த smartphone விற்பனையில் 2% மட்டுமே. இது from veltharma post...

Wednesday, February 8, 2012

என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும்? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள் ...!!!

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.
உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:
நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம் தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.
நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.
பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.
பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது.
எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம் போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.
உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போக வேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விடயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும்? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள்.
இன்றைய 21ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வனாவது நிச்சயம்.

Thursday, February 2, 2012

சுவிட்சர்லாந்தில்,ஜேர்மனியில் வீசிய கடும் பனிப்புயல்: 58 பேர் பலி (வீடியோ இணைப்பு)

ஜேர்மனியில் அதிகரித்து வரும் பனியும், குளிரும்

ஜேர்மன் நாடு முழுவதும் -20 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலை இருப்பதால் பனியும், குளிரும் அதிகமாகி வருகிறது.
ஜேர்மனியில் 22,000 பேர் வீடுகளை இழந்து தெருக்களில் வசிக்கின்றனர். கிழக்குப் பகுதியிலும், கிராமப்பகுதியிலும் தெருவில் வசிப்பவர்கள் குளிரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும், பறவைகளும் கூட இந்தக் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து சென்ற கொக்கு, நாரையினங்கள் குளிர் குறைந்ததும் ஜேர்மனிக்குத் திரும்பின.
இப்போது குளிர் அதிகரித்துவிட்டதால் அவை மீண்டும் தென்பகுதிக்குச் செல்லலாம் என்று இயற்கை பாதுகாப்புக் கழகத்தின்(NABU) மைக்கேல் தாம்சன் கருதுகிறார்.
புதன்கிழமையன்று நாட்டின் தென்கிழக்குப் பகுதிகள் -90 டிகிரி வெப்பநிலையிலும், மேற்குப்பகுதிகள் -1 டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது.
பனிச்சறுக்கு விளையாட்டுக்கு வசதியாக தென்பகுதியில் அதிகம் பனி உருவாகலாம். மற்ற பகுதிகள் பனிக்காற்றினால் பாதிக்கப்படும்.
ரஷ்யாவிலும், ஆர்க்டிக் வடபகுதியிலும் உயர் அழுத்தம் உருவாகி இருப்பதால் உறைபனிக் காற்று வீசும் என்று ஜேர்மனியின் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஹெல்முட் மலேஸ்கிர் தெரிவித்துள்ளார்.
Photobucket