ஜேர்மனியில் அதிகரித்து வரும் பனியும், குளிரும் |
ஜேர்மன் நாடு முழுவதும் -20 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலை இருப்பதால் பனியும், குளிரும் அதிகமாகி வருகிறது. ஜேர்மனியில் 22,000 பேர் வீடுகளை இழந்து தெருக்களில் வசிக்கின்றனர். கிழக்குப் பகுதியிலும், கிராமப்பகுதியிலும் தெருவில் வசிப்பவர்கள் குளிரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும், பறவைகளும் கூட இந்தக் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து சென்ற கொக்கு, நாரையினங்கள் குளிர் குறைந்ததும் ஜேர்மனிக்குத் திரும்பின. இப்போது குளிர் அதிகரித்துவிட்டதால் அவை மீண்டும் தென்பகுதிக்குச் செல்லலாம் என்று இயற்கை பாதுகாப்புக் கழகத்தின்(NABU) மைக்கேல் தாம்சன் கருதுகிறார். புதன்கிழமையன்று நாட்டின் தென்கிழக்குப் பகுதிகள் -90 டிகிரி வெப்பநிலையிலும், மேற்குப்பகுதிகள் -1 டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது. பனிச்சறுக்கு விளையாட்டுக்கு வசதியாக தென்பகுதியில் அதிகம் பனி உருவாகலாம். மற்ற பகுதிகள் பனிக்காற்றினால் பாதிக்கப்படும். ரஷ்யாவிலும், ஆர்க்டிக் வடபகுதியிலும் உயர் அழுத்தம் உருவாகி இருப்பதால் உறைபனிக் காற்று வீசும் என்று ஜேர்மனியின் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஹெல்முட் மலேஸ்கிர் தெரிவித்துள்ளார். ![]() ![]() ![]() ![]() |
Thursday, February 2, 2012
சுவிட்சர்லாந்தில்,ஜேர்மனியில் வீசிய கடும் பனிப்புயல்: 58 பேர் பலி (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment