svr.pamini

Montreal Time

Thursday, March 29, 2012

பேஸ்புக்கி​ல் படங்களை முழுத்திரை​யில் பார்ப்பதற்​கு

பேஸ்புக்கி​ல் படங்களை முழுத்திரை​யில் பார்ப்பதற்​கு

நண்பர்கள் வட்டத்தை பெருக்குவதில் முன்னணி வகிக்கும் சமூகத்தளமான பேஸ்புக்கில் பகிரப்படும் படங்களை முழு அளவிலான திரையில் பார்ப்தற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக Google+ photo viewer இனை மேம்படுத்திய பதிப்பான Revamped Photo Veiwer எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் படங்களை சாதாரண அளவில் இருந்து நான்கு மடங்கு பெரிதானதாக பார்வையிட முடியும். எனினும் இது பயன்படுத்தப்படும் கணணியின் திரையை பொறுத்து வேறுபடலாம்.
இதனை இரு முறைகளில் செயற்படுத்தலாம்.
முறை 1: பேஸ்புக் பக்கத்தில் உள்ள படம் ஒன்றை கிளிக் செய்யவும், பின் அதன் மேல் சுட்டியை(mouse) அழுத்தியவாறு வலது, இடது அம்புக்குறி விசைகளை(keys) அழுத்துக.
அப்போது படத்தின் வலதுபக்க மேல் மூலையில் இரண்டு தலைகளைக் கொண்ட அம்புக்குறி வடிவம் தோன்றும். அதன் மேல் அழுத்தியதும் குறித்த படம் முழுத்திரை அளவிற்கு பெரிதாகும்.
முறை 2: பெரிதாக்க வேண்டிய படத்தின் மேல் கிளிக் செய்து பின் அப்படத்தின் கீழ் காணப்படும் option பொத்தானை அழுத்தி அதில் காணப்படும் Enter Fullscreen என்பதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த படத்தை பெரிதாக்க முடியும்.

Monday, March 26, 2012

சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயார் - விஜய்

சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயார் - விஜய்

சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த படமான நண்பன் வெற்றியடைந்துள்ளது. நண்பன் படம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. நண்பன் படத்திற்கு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அவ்வப்போது நண்பன் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களுடன் பேசுகிறார்.


 மதுரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற விஜய் அங்கு ரசிகர்களிடம் பேசிவிட்டு மதுரை களவாசலில் உள்ள ஓட்டல் ஒன்றில் மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுடன் பேசினார். அதன் பின் ஆதரவற்ற பெண்கள் இருவருக்கு வாழ்வில் முன்னேற நிதி உதவியும் அளித்தார்.

 அதன் பின் நிரூபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது விஜய் “ அரசியல் பற்றிய கேள்விகள் இங்கு வேண்டாம்.சினிமா பற்றி மட்டும் இப்போது பேசுவோம். நண்பன் படம் போலவே இன்னொரு கதை அமைந்தால் கண்டிப்பாக இரண்டு ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன். 

ஒரு படம் ஓடுவதும் ஓடாததும் கதை மற்றும் திரைக்கதையின் கையில் தான் உள்ளது. அந்த கதைகளுக்கு நாங்களும் ரசிகர்களாகவே இருக்கிறோம். ஒரு ரசிகனாக அதை உங்களிடம் சேர்க்கிறோம்.

 சூர்யாவுடன் நான் இணைந்து நடித்த படத்தின் கதையைப் போல் அமைந்தால் கண்டிப்பாக சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன். இப்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

 சிறிய பட்ஜட் படங்கள் புதுமுகங்களுடன் வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் புதுமுகமாக அறிமுகமானவன் தான்.” என்று கூறினார்.

Wednesday, March 21, 2012

குற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ள அமெரிக்கா



குற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தாக்குவது போன்ற செயல்களுக்காக அமெரிக்கா புது வித அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ளது.
இந்த ஆயுதம் ஒரு கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும். இதனால் உடலில் காயங்கள் ஏதும் ஏற்படாது, ஆனால் உடல் தீப்பிடித்தது போல எரியும்.
ஆனால் இந்த ஆயுதத்தின் மூலம் சில சமயம் மக்களும் காயம் அடைகின்றனர். இதனால் இதற்கான மாற்று தீர்வை கண்டறியும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது.

“ஆக்டிவ் டினையல் சிஸ்டம்”(ஏடிஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள மைக்ரோவேவ் கதிர்வீச்சு ஆயுதத்தை அமெரிக்க இராணுவம் உருவாக்கியுள்ளது.
 வர்ஜீனியா மாநிலம் குவான்டிகோ நகரில் உள்ள இராணுவ தளத்தில் 2 வாரம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு இந்த ஆயுதம் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது செயல்பாடு குறித்து இராணுவ அதிகாரிகள் கூறியதாவது: மரணம் ஏற்படுத்தாத வகையில் தாக்குதல் நடத்தும் ஆயுத ஆராய்ச்சியில் அமெரிக்கா நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது.
15 ஆண்டு முயற்சிக்கு பிறகு ஏடிஎஸ் ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளிப்படுவது போல, ஏடிஎஸ் கருவியில் இருந்து மைக்ரோவேவ் ரேடியோ கதிர்வீச்சு வெளிப்படும்.
வீட்டு உபயோக பொருட்களில்(மைக்ரோவேவ் ஓவன்) இருக்கும் கதிர்வீச்சைவிட இது 100 மடங்கு வலுவாக இருக்கும்.
 சக்தி வாய்ந்த லென்ஸ் கருவி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரியைக்கூட துல்லியமாக குறிபார்த்து சுட முடியும்.
கருவியில் இருந்து 95 ஜிகா ஹெர்ட்ஸ் என்ற அளவுக்கு கதிர்வீச்சு பாயும். சாதாரண நிலையில் மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட். 2 வினாடிக்கு இந்த கதிர்வீச்சு உடலில் பாய்ந்தாலே 130 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பாயும். உடல் எரியும்.
அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் கதிர்வீச்சு எதிரியை தாக்குவதால் உடல் முழுவதும் பற்றியெரிவது போல எரிச்சல் ஏற்படும். எதிரி நிலைகுலைந்து விடுவார்.
ஆனால் தோலில் மிக மிக சொற்பமான ஆழத்துக்கு(ஒரு இஞ்ச்சில் 64-ல் ஒரு பங்கு) மட்டுமே கதிர்வீச்சு இறங்கும் என்பதால் காயம் ஏற்படாது.
மனிதர்கள் மீது 11 ஆயிரத்துக்கும் அதிகமான முறை இந்த கதிர்வீச்சு பாய்ச்சி சோதனை செய்யப்பட்டது. அதில் 2 முறை மட்டுமே லேசான காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே இது மிகவும் பாதுகாப்பானது. ஆப்கான் போரின் போது ஏடிஎஸ் ஆயுதம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் ஒருமுறைகூட பயன்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

Tuesday, March 20, 2012

பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதா? தேவலோகத்தில் அவசர மாநாடு!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அமெரிக்காவால் கொண்டு வரப்படும் இத் தீர்மானம் நிறைவேறக் கூடாது என்பதற்காக இலங்கை அரசு ஆர்ப்பாட்டங்களையும் பேரணி களையும் நடத்தி வருகின்றது. இதற்கு மேலாக, இறைவழிபாடும் நடைபெறுகின்றது. இலங்கை அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் வழிபாடு தொடர்பில் கடவுளர்கள் என்ன முடிபு எடுப்பார்கள். இப்படியயாரு கற்பனை நம் உள்ளத்தில் தோன்றியது.
வன்னிப் போரின்போது யுத்தத்திற்குள் சிக் குப்பட்ட தமிழ் மக்களும் இறைவா...இறைவா... என்று வழிபாடாற்றினர். அதேவேளை முட்கம்பி வேலிக்குள் அடைபட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்கவும், போரில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் தமிழர் பிரதேசங்களில் இறைவழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இப்போது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசின் ஏற்பாட்டில் பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களில் பூசைகளும் வழி பாடுகளும் பிரார்த்தனைகளும் நடந்தாகின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி ஜெனிவாக் கூட்டத் தொடர் முடிபடை வதற்குள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு முடிந்துவிடும்.
எனவே இலங்கையில், ஆளுந்தரப்பினர் நடத்தும் வழிபாடு தொடர்பில் உடனடியாக முடிபெடுக்க வேண்டிய தேவையிருப்பதால், தேவலோகத்தில் அவசரமாக சர்வமதக் கடவுள்களின் மாநாடு கூடியது. சிவன், விநாயகர், முருகன், சக்தி, புத்தர், யேசு பிரான்... என மதத் தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். ஜெனிவாத் தீர்மானத்திற்கு முன்னதாக தேவலோகத்தில் நடைபெறும் சர்வமத மாநாட்டில் ஒவ்வொரு மதத் தலைவர்களும் நடந்து வந்ததைப் பார்த்தபோது, ஐ.நா. சபைக்கு உலகத் தலைவர்கள் நடந்துவந்தது போல இருந்தது.
முருகப் பெருமான், அத்வானியின் வேகத்தில் நடந்து வந்தார். விநாயகர் வாஜ்பாய் போல நடக்க, சிவன் ஒபாமா போன்று நடந்தார். சக்தியின் வருகை, மிகவும் வேகமாக இருந்தது. ஹிலாரி கிளின்டனின் நடைபோல அது அமைந்திருக்க, யேசு பிரான் மன்னார் மாவட்ட ஆயரின் நடையிலும், கெளதம புத்தபிரான் விக்கிரமபாகு கருணாரட்னவின் விறுவிறுப்பிலும் நடந்து வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். மாநாடு உடனடியாகவே ஆரம்பமானது.
மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், கிருஸ்ண பரமாத்மா, ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் இம்மாநாடு நடப்பதாக அறிவித்ததோடு, வட பகுதிக்கு விசேட விசாரணை நடத்தச் சென்ற விநாயகர் தனது கருத்துக்களை முன்வைப்பார் என அறிவிக்க,
விநாயகர் எழுந்து தனது அறிக்கையை மாநாட்டில் வாசித்தார்.
thanks for வலம்புரி 

Thursday, March 15, 2012

தூய தமிழ் பேசும் ஒரு தமிழனும் இல்லாத இலங்கை கிரிக்கெட் அணிக்கு இன்னும் தமிழராகிய நாம் இன்னும் ஆதரவளிப்பது அவசியம் தானா?


தூய தமிழ் பேசும் ஒரு தமிழனும் இல்லாத இலங்கை கிரிக்கெட் அணிக்கு இன்னும் தமிழராகிய நாம் இன்னும் ஆதரவளிப்பது அவசியம் தானா? சனல் 4 தொலைக் காட்சியே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்று தொடர் அவசியம் தானா என கேட்டிருக்கும் போது சற்று யோசிக்க வேண்டிய விடயமே
   இருத்தி எழுப்பவும், அடக்கி ஆளவும் ஒரு பொம்மைச் சமூகமாக எம்மை தம் உள்ளங்கைக்குள் வைத்து கசக்கி பிழிய நினைத்தவர்களுக்கு முன்னால்- வேங்கை நெருப்பாக நின்று காட்டியவன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உலகம் முணுமுணுத்த ஒரே ஒரு பெருமைக்குரியவனாய் வாழ்ந்து நின்று நிலைத்து தன் நிழலைக்கூட எவரும் தொடமுடியாத விர வரலாற்றை எழுதியவன்.
எமக்கான அரசியலை உலக அரங்கில் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு. ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒற்றைக்குடைக்குள் நிற்க வைக்க நாம் செய்ய வேண்டிய பணி ஏராளமாய் காத்து கிடக்கின்றது. கழுத்தறுப்பு அரசியலை கைவிட்டு விட்டு புனிதமான செயலில் புறப்பட தயாராக வேண்டும்.
இத்தனைக்கும் மத்தியில் துதிபாடிக்கொண்டு பலபெயர்களில் பல அறிக்கைகளை விட்டுக்கொண்டு ஈழவிடுதலை உணர்வோ கனவோ இன்றி வெறும் பணத்திற்காக பற்சோந்தித் தனமாக மாரடிக்கும் பேர்வழி எதைச்சொன்னாலும் செய்யும்! எழுதும் தமக்கென இலட்சியமோ,குறிக்கோளோ இப் பிறவிகளுக்கில்லை செக்கென்ன சிவலிங்கமென்ன எல்லாம் ஒன்றுதான் என்று வாழாமல் மக்களின் விடுதலைக்காக, விடிவுக்காக எல்லோரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
Photobucket