svr.pamini

Montreal Time

Tuesday, March 20, 2012

பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதா? தேவலோகத்தில் அவசர மாநாடு!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அமெரிக்காவால் கொண்டு வரப்படும் இத் தீர்மானம் நிறைவேறக் கூடாது என்பதற்காக இலங்கை அரசு ஆர்ப்பாட்டங்களையும் பேரணி களையும் நடத்தி வருகின்றது. இதற்கு மேலாக, இறைவழிபாடும் நடைபெறுகின்றது. இலங்கை அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் வழிபாடு தொடர்பில் கடவுளர்கள் என்ன முடிபு எடுப்பார்கள். இப்படியயாரு கற்பனை நம் உள்ளத்தில் தோன்றியது.
வன்னிப் போரின்போது யுத்தத்திற்குள் சிக் குப்பட்ட தமிழ் மக்களும் இறைவா...இறைவா... என்று வழிபாடாற்றினர். அதேவேளை முட்கம்பி வேலிக்குள் அடைபட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்கவும், போரில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் தமிழர் பிரதேசங்களில் இறைவழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இப்போது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசின் ஏற்பாட்டில் பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களில் பூசைகளும் வழி பாடுகளும் பிரார்த்தனைகளும் நடந்தாகின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி ஜெனிவாக் கூட்டத் தொடர் முடிபடை வதற்குள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு முடிந்துவிடும்.
எனவே இலங்கையில், ஆளுந்தரப்பினர் நடத்தும் வழிபாடு தொடர்பில் உடனடியாக முடிபெடுக்க வேண்டிய தேவையிருப்பதால், தேவலோகத்தில் அவசரமாக சர்வமதக் கடவுள்களின் மாநாடு கூடியது. சிவன், விநாயகர், முருகன், சக்தி, புத்தர், யேசு பிரான்... என மதத் தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். ஜெனிவாத் தீர்மானத்திற்கு முன்னதாக தேவலோகத்தில் நடைபெறும் சர்வமத மாநாட்டில் ஒவ்வொரு மதத் தலைவர்களும் நடந்து வந்ததைப் பார்த்தபோது, ஐ.நா. சபைக்கு உலகத் தலைவர்கள் நடந்துவந்தது போல இருந்தது.
முருகப் பெருமான், அத்வானியின் வேகத்தில் நடந்து வந்தார். விநாயகர் வாஜ்பாய் போல நடக்க, சிவன் ஒபாமா போன்று நடந்தார். சக்தியின் வருகை, மிகவும் வேகமாக இருந்தது. ஹிலாரி கிளின்டனின் நடைபோல அது அமைந்திருக்க, யேசு பிரான் மன்னார் மாவட்ட ஆயரின் நடையிலும், கெளதம புத்தபிரான் விக்கிரமபாகு கருணாரட்னவின் விறுவிறுப்பிலும் நடந்து வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். மாநாடு உடனடியாகவே ஆரம்பமானது.
மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், கிருஸ்ண பரமாத்மா, ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் இம்மாநாடு நடப்பதாக அறிவித்ததோடு, வட பகுதிக்கு விசேட விசாரணை நடத்தச் சென்ற விநாயகர் தனது கருத்துக்களை முன்வைப்பார் என அறிவிக்க,
விநாயகர் எழுந்து தனது அறிக்கையை மாநாட்டில் வாசித்தார்.
thanks for வலம்புரி 

No comments:

Post a Comment

Photobucket