அலட்டிக் கொள்ளாமல் நடிப்பதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு நிகர் அஜீத் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் படி வெளிவந்திருக்கும் படம் தான் பில்லா 2. |
இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்கு வரும் டேவிட் பில்லா, அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகிறார். அகதிகள் முகாமில் இருக்கும் டேவிட் பில்லாவிற்கு ரஞ்சித் உள்ளிட்ட 3 பேர் நண்பர்களாகின்றனர்.![]() சென்னைக்கு மீன் ஏற்றிச் செல்லும் லாரியில் வைரத்தை வைத்து கடத்தும் கும்பலிடம் அஜித்தை சிக்கவைத்து, பழிவாங்க எண்ணுகிறார். மீனை ஏற்றிச் செல்லும் பொறுப்பை ரஞ்சித்தும், பில்லாவும் ஏற்கிறார். வழியில் சாதுர்யமாக தப்பித்துக் கொள்ளும் இருவரும், அதிலுள்ள வைரத்தை சென்னையின் பிரபல கடத்தல்காரரான செல்வராஜிடம் கொண்டு சேர்க்கின்றனர். இவர்களின் விசுவாசத்தை புரிந்து கொண்ட செல்வராஜ், இவர்களுக்கு சென்னையிலேயே சில கடத்தல் வேலைகளை கொடுக்கிறார். ![]() கைமாற்றுவதில் ஏற்படும் தகராறில் ஒரு கொள்ளைக் கும்பலை அடித்து துவம்சம் செய்து விட்டு, கோட்டியின் தலைவனான அப்பாஸியிடம் நேரடியாக அந்த டீலை முடிக்கிறான் பில்லா. அதன்பிறகு அப்பாஸியிடம் சேர்ந்து கொண்டு சர்வதேச அளவில் கடத்தல் தொழிலில் கில்லாடியாகிறார் பில்லா. சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் டிமிட்ரியின் பல கோடி ரூபாய் ஆயுதங்கள் இந்தியாவில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்கிறது. அதனை பில்லாவை வைத்து கைப்பற்றி கொடுத்து டிமிட்ரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறும் அப்பாஸியை தன்னுடைய நாடான பரோவியாவிற்கு அழைப்பு விடுக்கிறான். அப்பாஸிக்கு பதிலாக கோட்டியும், பில்லாவும் பரோவியா செல்கின்றனர். அங்கு நடக்கும் பேச்சுவார்த்தையில் அப்பாஸியிடம் கலந்தாலோசிக்காமல் ஆயுத ஒப்பந்தத்தை முடிக்கிறான் பில்லா. ![]() இதற்கு உதவும் சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் டிமிட்ரியையே ஒரு கட்டத்தில் பில்லா எதிர்க்கிறான். இதனால் ஆத்திரமடைந்த டிமிட்ரி அரசியல்வாதி மற்றும் அப்பாஸியின் உதவியாளர் கோட்டியுடன் கைகோர்த்துக் கொண்டு பில்லாவை தீர்த்துக் கட்ட எண்ணுகிறான். முடிவில் பில்லா அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கினாரா? இல்லை அவர்களை துவம்சம் செய்தாரா? என்பதே மீதிக்கதை. அஜித் என்றாலே அழகுதான். அந்த அழகுக்கு அழகு சேர்ந்தார்போல் கொஞ்சம் தாடி மற்றும் மீசை மற்றும் தாடியை மலித்த தோற்றம் என இரண்டிலும் தல கலக்கலாக இருக்கிறார். சினிமாவில் இப்போது இருக்கும் ஹீரோக்களில் கோட் சூட் போட்டு ஹேண்ட்சம்மாக இருப்பவர்களில் இவருக்கே முதல் இடம். உண்மையிலே இவர் செம பர்சனாலிட்டி ஹீரோதான். படத்தில் வித்தியாசமான முறையில் வசனம் பேசியிருக்கிறார் தல. தேவைப்படும் இடத்துல மட்டும் டயலாக். மற்ற இடங்களில் முகபாவணைகளிலேயே பேசுகிறார். ![]() இன்னொரு நாயகியாக புருனா அப்துல்லா, அவ்வப்போது கவர்ச்சியில் வருகிறார். சென்னை கடத்தல் தலைவனாக இளவரசு, கோவா கடத்தல் கும்பல் தலைவனாக சுதன்சு பாண்டே, சர்வதேச கடத்தல் கும்பல் தலைவர் வித்யூத் ஜம்வல் ஆகியோர் தங்கள் வேலைகளை மட்டும் செய்துவிட்டு போய்விடுகிறார்கள். படத்தோட ரியல் ஹீரோ வசனகர்த்தா முருகன்தான். படத்தில் அஜித் பேசுகின்ற வசனங்கள் ஒவ்வொன்றும் அப்லாஸ்தான். குறிப்பாக “உக்காந்து வேலை வாங்குறவனுக்கும், உயிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு” மற்றும் “போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம்தான்... போராடிட்டு இருக்கிறவன் தோத்துட்டா அவன் தீவிரவாதி, ஜெயிச்சுட்டா அவன் போராளி” என்பன போன்ற வசனங்கள் தியேட்டர்களில் கைதட்டல்களை அள்ளிச் செல்கின்றன. மொத்தத்தில் பில்லா-2 மிரட்டல். நடிகர்: அஜீத். நடிகை: பார்வதி ஓமனக்குட்டன். இயக்குனர்: சக்ரி டோலட்டி. இசை: யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர். |
Friday, July 13, 2012
பில்லா-2 | திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment