பொதுவாக காதல் யாரிமிருந்து எப்படி வரும் என்பதை யாராலும் அறிய முடியாது. காதலுக்கு கண்ணில்லை என்று கூறுபவர்களின் மத்தியில், ஒருவர் தனது நண்பரை காதலிப்பவர்களை மட்டும் தவறு என்று கூற முடியாது.
சிலரைப் பார்த்ததும் காதல் வரலாம் அல்லது பேசிப் பழகி நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையே காதல் மலரலாம். ஆனால் நண்பர்களுக்குள் காதல் வருவது மிகப்பெரிய அவஸ்தை தான்.
தனது நண்பரைக் காதலிக்கும் ஒருவர் அதனை உணர்வதற்கே சில காலங்கள் ஆகும். அவ்வாறு தனது நண்பரை தான் காதலிக்கிறோம் என்ற எண்ணமே முதலில் குற்ற உணர்ச்சியாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
அதையும் மீறி, அவரும் தன்னை காதலிக்கிறாரா என்பதை ஆராய மனது அலைபாயும். இதற்கிடையே அவர் வேறு யாரையும் காதலித்து விடக் கூடாதே என்றும் மனம் பதபதைக்கும்.
ஒருவர் தன் நண்பரைக் காதலிக்கத் துவங்கியதும் செய்ய வேண்டிய விடயம், தனது காதலை வெளிப்படுத்துவது அல்ல. அவரது மனதில் தன் மீது காதல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா இல்லை அதற்கு முன் வேறு எவரேனும் அவரைக் காதலிக்கிறார்களா அல்லது இவர் எவரேனும் காதலிக்கிறாரா என்பதை அறிந்து கொள்வது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும்.
அவரது மனதில் காதல் ஏற்படவே இல்லை, தன்னை மிகவும் நல்ல நண்பராக நினைக்கிறார் என்று உறுதியாகத் தெரிந்த பின்பு காதலிக்க வைப்பதற்கான வழிகளில் ஈடுபடலாம்.
ஆனால் நாம் காதலிக்கும் நமது நண்பர், வேறு ஒருவரை காதலிக்கிறார் என்று உங்களுக்கு தெரிய வந்தால் உங்கள் காதலை கடலில் தூக்கிப் போடத் தயங்கக் கூடாது. அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
உங்கள் காதலைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஏதேனும் உங்களுக்குப் பிடித்த வேலையில் முழு நேரமும் ஈடுபடுங்கள். காலம் எதையுமே மாற்றும் சக்தி படைத்தது. இப்படி எல்லலாம் நாம் இருந்திருக்கிறோமா என்று எண்ணி சிரிக்க வைக்கவும் இந்த காலத்தால் முடியும்.
அதே காலம் உங்கள் காதலை மறக்க வைக்க முடியும். ஆனால் உங்களுக்காக உங்கள் நண்பர் உங்களுடன் இருப்பார். ஒரு வேளை உங்கள் காதலை நீங்கள் அவசரப்பட்டு வெளிப்படுத்தி, அவரது மனதை அது பாதிக்குமானால், நீங்கள் இழப்பது ஒரு காதலியை அல்ல, நல்ல நண்பரை.
ஒரு வேளை நீங்கள் காதலை வெளிப்படுத்தியதும், அது அவருக்குப் பிடிக்காமல் போனால், நீங்கள் இவ்வளவு காலமும் நண்பரைப் போல இருந்தது வெறும் நடிப்பாக அவருக்குத் தோன்றலாம். இதனால் உங்களுக்கு இடையே எந்த பந்தமும் இல்லாமலேயே போகலாம்.
காதலை மனதில் அடக்கி வைத்துக் கொள்வது கடினமான விடயமாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு பெரிதல்ல. உங்களுக்கு எந்த பிரச்சினையிலும் தோள் கொடுக்க உங்தகளுக்காக ஒரு நண்பர் உங்ளகளுடன் இருப்பார். அதை விட வேறு என்ன வேண்டும் உலகத்தில்?
No comments:
Post a Comment