svr.pamini

Montreal Time

Saturday, January 1, 2011

வா ஆண்டே புத்தாண்டே..

வா ஆண்டே
புத்தாண்டே
வசந்தங்கள் சுமந்து
வா ஆண்டே
எங்கள் புத்தாண்டே
வாடிய முகங்களில்
வசந்தங்கள் மலர
விழுந்த தலைகள்
நிமிர
வா ஆண்டே
எங்கள் புத்தாண்டே
போர் பூமி
அழித்து
பூக்கள் வளர்ப்போம்
ஜாதி மத பேதம்
தொலைத்து
ஆண்டவன் அன்பு
என்போம்
வா ஆண்டே
எங்கள் புத்தாண்டே
சுதந்திர சுவாசக்காற்றை
கருவறையில் இருந்து
வெளிவரும் போதே
சுவாசித்து கொண்டு
வெளிவருவோம்
வா ஆண்டே
புத்தாண்டே...
அனைவருக்கும் தமிழமுதத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....

2 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பா!!!!!

    ReplyDelete
  2. தமிழமுதம் logo ஆக்கித் தந்த பெருமை உம்மையே சாரும்...

    ReplyDelete

Photobucket