svr.pamini

Montreal Time

Friday, January 21, 2011

அரசியலில் ஆர்வம் உள்ளது எப்போது என இப்போது கூற முடியாது -விஜய்-

விஜய் அரசியலில் நுழைந்து விடுவார் என்பதால் தான் காவலனுக்குப் பிரச்சினை என்று நினைக்கிறீர்களா?
இந்த நொடி வரைக்கும் தெரியவில்லை. என்ன நடந்தது. எது நடந்தது. என்பதை அலசிப்பார்க்கவும் வகையில்லாமல் இருக்கிறது. எதுக்குப் பிரச்சினை யாருக்கு என் மேல் கோபம். அப்படி கோபம் ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை. யார், எப்படி என்று தெரிந்தால் நானே இறங்கிப் போராடலாம். நிறைய விடயங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இது எனக்கே புது அனுபவம். 50 படங்களில் நடித்து விட்டுத் திரும்பிப்பார்த்தால் எனக்கே ஆச்சரியம். படத்தோட வெளியீட்டுத் திகதி ஒரு நாள் தள்ளிப் போனது. எந்தப் படத்துக்கும் நடக்காத ஒன்று. நிறையப் பிரச்சினைகளை நானே கடைசி நேரத்தில் பேசி முடித்து சுமுகத் தீர்வு கண்டிருக்கிறேன். இப்போது நடந்த பிரச்சினைக்கு யார் மூல காரணம் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. அதையும் தாண்டி 350 தியேட்டர்களில் "காவலன்' வெளிவந்திருக்கிறது. நல்ல பெறுபேறு என்று சொல்கிறார்கள். புது அனுபவத்தை கற்றுத் தந்தவர்களுக்கும் அதை தந்துபோன காவலனுக்கும் நன்றி.
சினிமாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு படத்திலும் நிச்சயம் அரசியல் பொடி தூவியே ஆகவேண்டும் என்ற நிலையுள்ளது. ஆனால் உங்கள் படங்களில் அது இல்லையே ஏன்?
என் சினிமாக்களில் அரசியல் இருக்கிறது. ஆனால் ஒரேடியாக அதைத் தந்துவிட முடியாது. இப்போது இருக்கும் தலைமுறை தெளிவாக இருக்கிறார்கள். அரசியலை சினிமாவோடு இணைத்துப்பார்க்கிற, பேசுகிற மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அவர்கள் நினைத்தால் எல்லாம் எடுபடும். சினிமாவில் அரசியல் பொடி தூவி வசனம் பேசுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நேரம் கூடி வரும்போது அதை நீங்கள் பார்க்கலாம்.
அரசியலுக்கு வருவது பற்றிய முடிவுக்கு வந்து விட்டீர்களா?
அரசியலில் எனக்கு ஆர்வம் இருக்கிறது என்று எப்போதோ சொல்லி விட்டேன். ஆனால் அது எப்போது என்று இப்போது சொல்ல முடியாது. வருவேன் ஆனால், இப்ப...அப்பன்னு சொல்லிக் கொண்டே இருந்தால் மக்களுக்கே போரடித்துவிடும். எல்லோரையும் ஒன்று திரட்டி அரசியலில் இறங்கும் போது மக்கள் அதைப் பெரிசா பேச மாட்டாங்க. எனது அரசியல் பிரவேசம் பற்றி வரும் செய்திகளைப் படிக்கும் போது எனக்கே புதிதாக இருக்கிறது. முதல் மாநில மாநாட்டை திருச்சியில் கூட்டப் போகிறேன் என்றுகூட செய்தி வெளியிடுகிறார்கள். அதில் உண்மையில்லை. அது பற்றி எந்த முடிவுக்கும் வரவில்லை. இந்த விடயத்தில் என்னைச் சுற்றி இருப்பவர்களின் எண்ணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதேசமயம் காலமும், நேரமும், இடமும், சூழலும் அனுமதிக்கும்போது என்னை அந்த இடத்தில் கொண்டு போய் வைப்பேன். அப்படிச் செய்வதில் தயங்க மாட்டேன்.
கிராமத்து இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் திருப்ப ஏதாவது செய்யத் தோன்றுகிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏதாவது யோசனை இருக்கிறதா?
கிராமத்து இளைஞர்கள் எல்லோரையும் விவசாயத்தின் பக்கம் திருப்ப வேண்டுமென்று ஆசை இருக்கிறது. எல்லோருக்கும் விவசாயம் மறந்து கொண்டே வருகிறது. சென்னைக்கும் வெளிநாடுகளுக்கும் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதுக்காக இந்த நொடியில் ஒரு படத்தில் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதுதான் இப்போது என்னால் முடியும். ஆனால் அவர்களை முழுமையாக விவசாயத்தின் பக்கம் திசை திருப்ப ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது.

1 comment:

Photobucket