svr.pamini

Montreal Time

Friday, March 11, 2011

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: ஆழிப்பேரலையால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவிப்பு இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை(வீடியோ இணைப்பு)...

ஜப்பானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாரிய ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை.
ஜப்பானின் வடக்குகிழக்கு பகுதியில் 7.9 ரிச்டர் பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் மியாகி கரையோரப் பிரதேசத்தில் 20 அடி உயரமான அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டோக்கியோவில் இருந்து 250 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள இடத்தில் பூமியின் மேற்புறத்தில் இருந்து 20 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் 6.9 ரிச்டர் பரிமாண நில அதிர்வும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல வீடுகளும், கட்டிடங்களும் மற்றும் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன.  செண்டை நகரில் உள்ள ஒரு பெற்றோல் ஸ்ரேசன் தீப்பற்றியதால் பல இடங்களில் தீப்பரவலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதே வேளை ரஸ்யா மற்றும் தாய்வான் ஆகிய இடங்களுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
40 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
அவ்வாறு ஜப்பானில் உள்ள தமது உறவினர்கள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள விரும்பும் நபர்கள் 0772267929/0115743362/011-4719593 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
பிந்திய செய்தி
ஜப்பானின் வட கிழக்கு கடலோரப் பகுதிகளில் பயங்கர பூகம்பத்தின் தொடர்ச்சியாக சுனாமி தாக்கியதில் பேரழிவு ஏற்பட்டது.
செண்டாய் நகரில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி வரை 200-ல் இருந்து 300 வரையிலான உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்,
மேலும், 88 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. 349 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கிய பகுதிகளில் மீட்புப் பணிகளில் 900 வலுவான அவசரக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
டோக்கியோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 மைல்கள் ஆழத்தில் இன்று ஏற்பட்ட கடுமையான பூகம்பம், ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியிருந்தது.
கடலில் எழுந்த சுனாமிப் பேரலைகள் கப்பல்கள், கட்டடங்கள் என அடித்து துவம்சம் செய்தபடி நிலப் பகுதிகளை கடுமையாகத் தாக்கியது.
இந்த சுனாமி தாக்குதலுக்கு கடற்கரைப் பகுதியான செண்டாய் மிக அதிக பாதிப்புக்குள்ளானது.
இதன் தொடர்ச்சியாக ரஷ்யா, தைவான், இந்தோனேஷியா, ஹவாலி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டு வரும் சுனாமி காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சுனாமிப் பேரழிவால், ஜப்பான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சேதம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பசிபிக் கடலில் இருந்து எழும்பிய சுனாமிப் பேரலைகள் 13 அடி வரை மேலெழுந்து ஜப்பானின் கடலோர நகர் பகுதிகளைத் தாக்கியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அணு உலை நிலையங்கள், முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
டோக்கியோ, ஒசாகி, கியோடோ உள்ளிட்ட நகர்களில் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை இல்லை என்றும், இந்தியா, இலங்கை போன்ற ஏனைய ஆசிய நாடுகளுக்கு ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் சுனாமி... செய்தித் துளிகள்
* ஜப்பானில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் இது.
* வடகிழக்கு கடற்கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்கின.

* கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவு.
* செண்டாய் நகரில் ஒரே நாளில் 300 சடலங்கள் மீட்பு.
* ஏறத்தாழ 400 பேர் காணவில்லை என்கிறது ஜப்பான் போலீஸ்.
* ஒட்டுமொத்த அழிவை மதிப்பீடு செய்வது இப்போதைக்கு மிகக் கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.
*  சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது.
* பகுஷிமா டேய்சி அணு உலை பாதித்ததால் மூடப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த சுமார் 2000 பேர் வெளியேற்றம்.
* மியாகி பகுதியில் ஊள்ள இன்னொரு அணு உலையில் தீ விபத்து.
*  தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரிக்கை.
* பசிபிக் கடல் பகுதி நாடுகளில் சுனாமி எச்சரிக்கை. ஹவாய் தீவுகளை குறைந்த மீட்டரில் சுனாமி எழுந்ததால் பாதிப்பில்லை.
* லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலியிலும் சுனாமி எச்சரிக்கை.

1 comment:

  1. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போமாக !!!

    ReplyDelete

Photobucket