Sunday, February 27, 2011
Tuesday, February 22, 2011
இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை - விஜய்
இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும். இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நாகையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் உரையாற்றும்போது நடிகர் விஜய் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரஸ்தாப கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் 4 மணிக்கு மேடைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 4 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் 5.45 மணிக்கே நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் கைகளை தூக்கி ஆரவாரம் செய்தனர். நடிகர் விஜய் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கையை அசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இதற்கிடையே நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடையில் பேசிய போது, ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பியை இழந்தால் எவ்வாறு துன்பப்படுவோமோ அதுபோல இன்று நாம் ஒன்று அல்ல, 2 அண்ணன்களை இழந்து துயரப்பட்டு உள்ளோம் என பேசிக்கொண்டு இருந்த போது மழை தூறியதாலும், ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு ஆர்ப்பரித்து வந்ததாலும் விஜயால் பேச முடியவில்லை. இதைத்தொடர்ந்து விஜய் பேச்சை நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு திரும்பினார்.
பின்னர் சுமார் அரைமணி நேரம் கழித்து மீண்டும் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது.
கடந்த சில வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
நாகை மீனவர் ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து கடலில் தூக்கி வீசி உள்ளனர்.
இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா?
இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.
இலங்கை இராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல.
நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட.
மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும்.
ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும்.
இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் என்றார்.
Sunday, February 20, 2011
பார்வதி அம்மைக்கு கண்ணீர் அஞ்சலி
பூகம்ப வீரத்தைப் பெற்றவள் இன்று
புன்னகை விட்டுக் கிடந்தனள்
வேகப் புயலொன்றைப் பெற்றவள் இன்று
விண்ணி லெழுந்து கலந்தனள்
தாகத்தின் ஊற்றினை தந்தவள் இன்று
வானதிலேறிக் கரைந்தனள்
யாகத்தின் தீயும் அணைந்ததோ ஒரு
யாத்திரையோடு முடியுதோ?!
புன்னகை விட்டுக் கிடந்தனள்
வேகப் புயலொன்றைப் பெற்றவள் இன்று
விண்ணி லெழுந்து கலந்தனள்
தாகத்தின் ஊற்றினை தந்தவள் இன்று
வானதிலேறிக் கரைந்தனள்
யாகத்தின் தீயும் அணைந்ததோ ஒரு
யாத்திரையோடு முடியுதோ?!
வீரத்தின் சின்னம் விரைந்ததோ- ஒரு
வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவள் -பெரும்
சேனை படைகளை கண்டவள்
நேர்மை தன்மானத்தை சொன்னவள் -இன்று
நித்திரைகொண்டனள் நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
பாவ உலகம் வெறுத்ததோ
வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவள் -பெரும்
சேனை படைகளை கண்டவள்
நேர்மை தன்மானத்தை சொன்னவள் -இன்று
நித்திரைகொண்டனள் நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
பாவ உலகம் வெறுத்ததோ
பேரை உலககெங்கும் சொன்னவன் -பெரும்
போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
உண்மையில் பூமி பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
வஞ்சகம செய்தினம் கொன்றது
போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
உண்மையில் பூமி பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
வஞ்சகம செய்தினம் கொன்றது
வீரத்தாயும் இதைக் கண்டனள் -உளம்
விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
கொண்டு நடந்தனள் தெய்வமே
தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
நாடகமாடி உடைத்தமோ
விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
கொண்டு நடந்தனள் தெய்வமே
தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
நாடகமாடி உடைத்தமோ
போனதுதான் திரும்புமோ -அந்த
பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பானோ- இந்த
நாடும் நமதென ஆகுமோ
தேனைத் திருநாட்டைக் காப்பமோ -நல்ல
தோள்வலி கொண்டு சுமப்பமோ
ஏனோ கலங்குது நெஞ்சமே -இந்த
ஏழைகளு கினியாரம்மா
பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பானோ- இந்த
நாடும் நமதென ஆகுமோ
தேனைத் திருநாட்டைக் காப்பமோ -நல்ல
தோள்வலி கொண்டு சுமப்பமோ
ஏனோ கலங்குது நெஞ்சமே -இந்த
ஏழைகளு கினியாரம்மா
Saturday, February 19, 2011
உலகக் கோப்பை கிரிக்கெட்: அணிகளின் பலம், பலவீனம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் கணிக்கப்பட்டுள்ளன. அணியின் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல். அவுஸ்திரேலியா பலம்: பேட்டிங்தான் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில், அதாவது அதிகமாக ரன்களை எடுத்துக் குவிக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த அணி. இளம் வீரர்கள் அதிகம் உள்ளது கூடுதல் பலம். எந்த சூழ்நிலையிலும் சமாளித்து விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் உண்டு. எதிரணிகளின் வியூகங்களை உடைத்து பேட்டிங்கில் சாதனை புரியும் ஷேன் வாட்சன் இந்த அணியின் மிகப்பெரிய பலம். மூன்றாவது முறையும் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கும். கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், டேவிட் ஹஸ்லியும், கேமரோன் வொய்ட்டும் ரன்களைக் குவிப்பதில் சமர்த்தர்கள். பலவீனம்: பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது பெரிய பலவீனம். பொலிங்கர் தவிர மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். ஆரம்பப் பந்து வீச்சில் சமர்த்தரான ஸ்விங்கர் ஷான் டெய்ட் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினரைப் பயமுறுத்தக் கூடும் என்றாலும் ஸ்பின்னர்கள் இல்லாத குறை அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலவீனம். குறிப்பிட்டுக் கூறும்படியான சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மூத்த வீரர்களான பாண்டிங், கிளார்க், பிரெட் லீ, வாட்சன் ஆகியோரின் ஆட்டத்தையே அணி பெருமளவில் சார்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் களமிறக்கப்பட்ட மோசமான "உலகக் கோப்பை அவுஸ்திரேலிய அணி' இதுதான் என்பது விமர்சகர்களின் கணிப்பு. சிறப்பு: தொடர்ந்து 2 உலகக் கோப்பையை வென்றுள்ளதால் அவுஸ்திரேலிய அணிக்கு பொறுப்பு கூடியுள்ளது. முன்பு இருந்தது போல சிறப்பான அணியாக இல்லாவிட்டாலும் ஆட்டத்தைத் திசை திருப்பும் வெற்றி வீரர்கள் இருக்கின்றனர். இறுதிச் சுற்று வரை இந்த அணி முன்னேறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா பலம்: தொடக்க, நடுவரிசை ஆட்டக்காரர் (1 முதல் 7 வரை) சிறந்த பேட்ஸ்மென்களாக உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது. பெüலிங் எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளது அனுபவம் வாய்ந்த வீரர்கள், பெரிய ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வரும் அணி. நெருக்கடியான சூழ்நிலையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தும் கேப்டன் தோனி ஆகியவை அணியின் பலம். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கெளதம் கம்பீர் மூவரும் இந்திய அணியின் துடுப்பாட்டத்திற்கு மிகப்பெரிய பலம். விராட் கோலி நான்காவது ஆட்டக்காரராகவும், யுவராஜ் சிங் ஐந்தாவதாகவும், கேப்டன் தோனி ஆறாவதாகவும், யூசுப் பதான் ஏழாவதாகவும் ஒரு பலமான ரன்களை எடுக்கும் பேட்டிங் பட்டாளம் இந்திய அணியின் தனிச் சிறப்பாக கருதப்படுகிறது. பந்துவீச்சு என்று எடுத்துக் கொண்டாலும், வேகப்பந்துவீச்சில் ஜாகீர் கானின் திறமைக்கு முன் ஆரம்ப ஆட்டக்காரர்கள் பலரும் திணறாமல் இருக்க முடியாது. ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, அஸ்வின் ஆகிய மூவரும் சுழல்பந்து வீச்சில் சமர்த்தர்கள். கடந்த இரண்டாண்டுகளாக சாவ்லா களத்தில் இல்லை என்பது பலவீனம். இருந்தாலும் புதியவரவாக இருந்தாலும் களத்தில் தனது சுழல்பந்துவீச்சால் அசத்துகிறார் என்பது கண்கூடான உண்மை. பலவீனம்: மற்ற அணிகளை ஒப்பிடும் போது விரைவாக விக்கெட்டை வீழ்த்தும் பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறை. வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்ததாதும் பலவீனம். ஹர்பஜன் சிங்கையும், அஸ்வினையும் நம்பித்தான் இந்திய அணியின் பந்துவீச்சு உள்ளது என்பது பலவீனம். சிறப்பு: முந்தைய உலகக் கோப்பை அணியைக் காட்டிலும் பலமானதாக உள்ளது. பலமான பேட்டிங் வரிசை உள்ளதால் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. தோனியின் அமைதியான, அரவணைப்பான கேப்டன்ஷிப் அணிக்கு பெரிய பிளஸ். அனைத்தும் சரியாக நடந்தால் விமர்சகர்கள் கணித்தபடி இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறும். இலங்கை பலம்: பந்து வீச்சில் உலகின் நம்பர் 1 அணி. அதே போல எக்கானமி ரேட்டிலும் முதலிடம். அனுபவ வீரர்கள், வெற்றியை நோக்கி தொடக்கத்தில் இருந்தே முன்னேறுவது, உள்ளூர் சூழலில் விளையாடுவது ஆகியவை அணிக்கு பலம் சேர்க்கிறது. லசித் மலிங்காவும், முத்தையா முரளீதரனும் பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பவர்கள். இந்திய அணி எந்த அளவுக்கு பேட்டிங்கில் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பந்துவீச்சில் பலமான அணி இலங்கை அணி. நுவன் குலசேகரா, ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆடுகளத்துக்கு ஏற்ப பந்துவீசும் ஆட்டக்காரர்கள். அதிகமாக பாராட்டப்படாவிட்டாலும் ரங்கனா ரெஹாத்தின் இடதுகைப் பந்துவீச்சு வெளியூர் அணிக்கு சவாலாக இருக்கக்கூடும். பலவீனம்: தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகளில், பேட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ள அணி இலங்கை தான். நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடத் திணறும் வீரர்கள். மோசமான ஸ்டிரைக் ரேட். சிறப்பு: 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் 2007-ல் சிறப்பாக விளையாடியது இலங்கை. ஆனாலும் இப்போது மோசமாக விளையாடி வருவது அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது. அரை இறுதி வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது. முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இங்கிலாந்து பலம்: தனிப்பட்ட சில வீரர்கள் சிறப்பாக ஆடுவது அணியின் மிகப்பெரிய பலம். முக்கியமாக நடுவரிசையில் டிராட், பீட்டர்சன், பிராட், ஸ்வான் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்கின்றனர். பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது. ஒருநாள் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ள அணி. பலவீனம்: ஸ்டிரைக் ரேட் குறிப்பிடும் வகையில் இல்லை. அணியின் கூட்டு முயற்சியாக இல்லாமல், ஒரு சில வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே வெற்றி பெறுகிறது. சிறப்பு: டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடும் இந்த அணி, ஒரு நாள் போட்டிகளில் சோபிக்கத் தவறி வருகிறது. சில தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்விகளைத் தரக்கூடிய அணியாக இருக்கிறது இங்கிலாந்து. அதிர்ஷ்டம் இருந்தால் அரை இறுதி வரை முன்னேறும், அவ்வளவே. மேற்கிந்தியத் தீவுகள் பலம்: கெய்ல், பிராவோ, சந்தார்பால் ஆகியோர் அணியின் பலம். திடீர் அதிரடியால் வெற்றி பெறும் அணி. பலவீனம்: தரவரிசையில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சும் இரண்டுமே தகராறு. எப்போது, எப்படி விளையாடிவார்கள் என்று யாருக்குமே தெரியாது. சிறப்பு: கோப்பையை வெல்ல 70 சதவீத வாய்ப்பு இந்த அணிக்கு இருப்பதாக முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். ஆனாலும் கால் இறுதி வரை முன்னேறுவதே சிரமம் என்பதுதான் விமர்சகர்களின் கருத்து. தென் ஆப்பிரிக்கா பலம்: தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவருவதும், வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருப்பதும் இந்த அணியின் முக்கிய பலம். தொடக்க பேட்ஸ்மேன்களும், நடுவில் களம் இறங்குபவர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் களம் இறங்கிச் சிறப்பாக விளையாடும் செல்லும் ஜேக்கஸ் காலிஸ், ஹஷிம் ஆம்லா வெற்றிகரமான கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோர் அணியை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றுவார்கள். பலவீனம்: நெருக்கடியான சூழ்நிலையில் காலிஸ் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடுவது இல்லை. சராசரி என்ற நிலையில் உள்ள ஸ்டிரைக் ரேட், நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாதது, சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது, காலிஸையே பெருமளவில் சார்ந்திருப்பது ஆகியவை அணியின் பலவீனம். சிறப்பு: வெல்வதற்கு சிறந்த, கடினமான அணி என்ற பெயரை பெற்றுள்ளது. இருந்த போதும் எதிரணி வலிமையானதாக இருந்தால் அதை எதிர்கொள்ளும் நிதானம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இல்லை என்பது பார்வையாளர்களின் கணிப்பு. நெருக்குதல் காரணமாக சில சமயங்களில் தோல்வி ஏற்படுகிறது. ஜாக்ஸ் காலிஸ் அணியின் நம்பிக்கை நாயகன். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நியூசிலாந்து பலம்: ஸ்டிரைக் ரேட், எகானமியில் 3-வது இடம். நெருக்கடியை சமாளித்து ஆடும் திறன். வலுவான பேட்டிங், தனிப்பட்ட முறையில் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது இவையே இந்த அணியின் முக்கிய பலம். பலவீனம்: பெரிய போட்டிகளிலோ, தொடர்களிலோ வெற்றி பெற்றதில்லை. இந்திய அணியைப் போன்றே இங்கும் விரைவில் விக்கெட்டை வீழ்ந்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை. சிறப்பு: சிறப்பாக விளையாடினால் மட்டுமே அரை இறுதி வரை முன்னேறலாம் என்று கணிக்கப்பட்டுள்ள அணி நியூஸிலாந்து. ஆனாலும் அணி சிறப்பாக இல்லாதது நியூஸிலாந்துக்கு பின்னடைவாக உள்ளது. சமீபத்திய தொடர்களில் ஏற்பட்ட படுதோல்விகள் அந்த அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது. பாகிஸ்தான் பலம்: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள போதிலும், பந்து வீச்சு பலத்தில் 3-வது இடத்தில் உள்ளது. நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடக் கூடிய அணிகளில் இதுவும் ஒன்று. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் கிடைத்துள்ள வெற்றிகளால் பெற்ற உத்வேகம் அணியின் முக்கிய பலம். பலவீனம்: சிறப்பாக ஆடாத பேட்ஸ்மேன்கள். சராசரிக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட், கூட்டு முயற்சி...இப்படியாக, தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியாமல் தவிக்கும் அணி. முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்குவதால் நெருக்கடி. சிறப்பு: களத்தில் ஆக்ரோஷம் காட்டுவதில் பாகிஸ்தான் அணிக்கு நிகர் அதுவே. சொல்லும்படியான வீரர்கள் இல்லை. ஆனாலும் அணியின் பலவீனத்தால் கால் இறுதிக்கு மேல் முன்னேறாது என விமர்சகர்கள் கணித்துள்ளனர் |
Sunday, February 13, 2011
Friday, February 11, 2011
நட்பு VS காதல் ஒரு அலசல்...
ஆண் தோழன், பெண் தோழி என்ற வித்தியாசங்கள் கடந்து, நட்பு என்ற வட்டத்தின் எல்லை கடக்கத் தூண்டும் பதின்பருவத் தீண்டல்கள்.
விரும்பியவர்களிடத்தில் மனம் சில விதிகளை மீற விரும்பும். எதிர்பாலின நட்பில் மட்டும் மனம் ஆயிரம் ஜாலம் காட்டும். நட்புக்கும் காதலுக்கும் எது எல்லைக் கோடு? எதைக் கடந்தால் காதல்? உறக்கம் தொலைக்கவைக்கும் உணர்வை, உறவை, உளவியலைப் பற்றிச் உளவியல் நிபுணர்கள் என்ன சொல்கின்றார்களெனில்,
'' 'இவையிவைதான் நட்பின் கட்டுப்பாடுகள் அல்லது எல்லைக் கோடுகள்’ என்று ஆண்-பெண் உறவைத் தெளிவாக வரையறுக்க முடியாது. பலருக்கு நட்பும் காதலும் பாலும் நீரும் போலக் கலந்திருப்பதால் குழப்பத்திலேயே திளைப்பார்கள். ஓரளவுக்கு நெருங்கிப் பழகிய பிறகு தெரியாத நபரைவிட, தெரிந்த நபரே நல்லது என்று பெண்கள் உணர்கிறார்கள்.
நண்பர்களிடையே காதல் பூப்பதற்கு அடிப்படை நான்கு காரணங்கள்.
முதல் காரணம், நெருக்கம். மிக அருகருகே இருப்பதால், அடிக்கடி பார்ப்பதால், பேசுவதால் காதல் ஏற்படும்.
இரண்டாவது காரணம்... நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான கருத்து ஒத்திசைவால் ஏற்படும் காதல். பரஸ்பர உதவி, அக்கறை காரணமாக ஏற்படுவது.
மூன்றாவது காரணம். உதாரணத்துக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம்.
நான்காவதாக, இரு பாலினத்தவரும் எதிர் பாலினத்தவர் மீது வைத்திருக்கும் உடல் ரீதியான கவர்ச்சி, அழகுணர்ச்சி ஆகிய காரணங்கள்.
முதல் காரணம், நெருக்கம். மிக அருகருகே இருப்பதால், அடிக்கடி பார்ப்பதால், பேசுவதால் காதல் ஏற்படும்.
இரண்டாவது காரணம்... நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான கருத்து ஒத்திசைவால் ஏற்படும் காதல். பரஸ்பர உதவி, அக்கறை காரணமாக ஏற்படுவது.
மூன்றாவது காரணம். உதாரணத்துக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம்.
நான்காவதாக, இரு பாலினத்தவரும் எதிர் பாலினத்தவர் மீது வைத்திருக்கும் உடல் ரீதியான கவர்ச்சி, அழகுணர்ச்சி ஆகிய காரணங்கள்.
பொதுவாக ஆண்கள், அழகான பெண்களைத்தான் காதலிப்பார்கள். நேர் எதிராகப் பெண்களோ, தன்மேல் அன்பாக, அக்கறையாக, மனம் குதூகலிக்கப் பேசுபவனாக, தனக்குப் பாதுகாப்பாக இவன் இருப்பான் என்று எந்த ஆணை நினைக்கிறார்களோ அவர்களைத்தான் காதலிப்பார்கள். பெண்ணின் அழகைப் பார்த்து ஆணுக்குக் காதல் அரும்ப, ஆணின் அரவணைக்கும் குணமே பெண்ணுக்குக் காதலைத் தூண்டும் சக்தியாக இருக்கிறது.
ஆண் இன்னொரு ஆணுடன் பழகும்போது நட்புக்காகப் பணம், வேலை ஏன் உயிரையே கொடுக்கலாம். பெண் அதிகபட்சமாகத் தன்னையே கொடுக்க முடிவெடுப்பாள். வசதியான பெண், நன்றாகப் படிக்கும் ஏழைப் பையனுக்கு உதவ வேண்டும் என்று பரிதாபத்தில் பழகினால்கூட, 'உன் மேல இவ்ளோ அன்பு வெச்சிருக்காளே. மச்சான், இது சத்தியமா காதல்தான்டா’ என்று அவனது நண்பர்களின் தூண்டுதலை அவனே நம்பத் தொடங்குவான். இது பெண்ணுக்குத் தெரிந்தால் அவளுக்குப் பேரதிர்ச்சிதான் மிஞ்சும்.
ஆண் காதல் சொல்லி பெண் ஏற்கவில்லை எனில், சொறி...இனிமே ஃப்ரெண்ட்ஸாவே பழகலாம்’ என்று சொல்லி மறுத்தாலும், அது அவன் அடிமனதில் வண்டல் மண் போலத் தேங்கி இருக்கும். அடுத்தடுத்து தொடர்ச்சியாகத் தன் காதலை சமயம் கிடைக்கும்போது எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். இறுதி வரை ஆணின் எண்ணம் மாறாது.
ஆண் - பெண் நட்பு கம்பி மேல் நடப்பதற்குச் சமம். அந்த நட்பில் அதிகம் பேசப் பேச நெருக்கம் அதிகமாகும். நட்பு, காதலாகும் என்ற உண்மையை, அதில் இருக்கும் நல்லது கெட்டதுகளை உணர்ந்து, இறுதி வரை நட்பாகவே இருக்கலாம். அல்லது அந்த நட்பு காதலாக உருமாறும் சமயம் அது உங்களுக்கு உண்மையாக, நம்பிக்கையான வாழ்நாள் துணையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு தொடரலாம்!''
ஆதலினால், நட்பின் கணவாய் வழியே காதல் தேசம் புகுதல் சரி/தவறு. உங்கள் தேர்வு எது என்பது உங்கள் கையில்!
Tuesday, February 8, 2011
அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்...........
அழகுப் பெண்களுக்கு சில `அபூர்வ' குணங்களும் இருக்கும். அவர்கள் மனதின் ஆழத்தை அவ்வளவு எளிதாக அளந்து சொல்லிவிட முடியாது. பெண்களின் குணநலன் பற்றி ஆராய்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், ....
`பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்' என்று கண்டுபிடித்துள்ளார்.
இங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு தனது ஆராய்ச்சி முடிவாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள்...
பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல்லை என்பதுதான் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிïட்டும் உண்மை!
ஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது மூன்றாம் வகையினர்.
பெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல மாட்டார்கள். `செல்போன் பில் அதிகம் வருகிறது' என்று கணவர் கண்டித்தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்குப் பிறகு சிடுசிடுப்பாகி `சீப்'பான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம். அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் `என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே இருக்கிறது' என்று கேட்டால், `அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது' என்று மழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம். ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு கொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்.
இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ கிடையாதாம். ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கணவன்- மனைவி உறவை வலுப்படுத்துவதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
Monday, February 7, 2011
எகிப்து ஆர்ப்பாட்டங்களும் உலக மாற்றங்களும்.....
ஏமாற்று ஆட்சியாளரின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாகிறது. ஆயுள்பரியந்த வம்ச ஆட்சிகள் தூக்கி வீசப்படும் உலகப் புதிய காற்று வீசுகிறது. உலகில் உள்ள எந்த ஆய்வாளரும் முன் எதிர்வு கூறாத பாரிய மக்கள் பேரலை கடல்கோள்போல உலகின் பல பாகங்களிலும் எழும்ப ஆரம்பித்துள்ளது. பொருளாதார மந்தம்,விக்கிலீக்ஸ் உண்மைகள்,ஆட்சியில் இருப்போரால் இனியும் ஏமாற்ற முடியாத அரசியல் மக்களின் புரிதல் யாவும் புதிய எழுச்சிகளை கிளப்பிவிட்டுள்ளன. இதற்கு முதல் எடுத்துக்காட்டு இந்த வாரம் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள தாஹிர் பிளேசில் கூடியுள்ள மக்கள் எழுச்சியாகும்.
சென்ற ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் பல உண்மைகளை உலக மக்கள் மன்றில் போட்டுடைத்துப் போயிருக்கிறது. விக்கிலீக்ஸ் தகவல்கள் அனைத்தையும் வகுத்தும் தொகுத்தும் பார்த்தால் இன்று ஆட்சியில் உள்ளவர்கள் மக்களுக்கான ஜனநாயகத்தை நடத்துகிறார்களா என்ற கோபமான கேள்வியையே சாதாரண மக்கள் மனதில் ஏற்படுத்தும்.விக்கிலீக்ஸ் தகவல்கள் ஓர் இடத்திலாவது தலைவர்கள் மக்களின் நலனுக்காகச் சிந்தித்ததாகக் கூறவில்லை.
பல ஆட்சித் தலைவர்கள் மக்களை மந்தைகளாக்கி தங்கள் பிள்ளைகளை எதிர்கால ஆட்சித் தலைவர்களாக நியமிக்க முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். பல நாடுகளில் சாகும்வரை ஆட்சிக்கட்டிலில் இருக்கப் பல தலைவர்கள் முயற்சியெடுத்து வருகிறார்கள். ஜனநாயகத்தில் உள்ள பெரும்பான்மை என்ற ஓட்டையைப் பயன்படுத்தி உலக மக்கள் வாழ்வை கிழிந்த கந்தையாக்கிய தலைவர்களே இன்று அதிகமாகவுள்ளார்கள். இந்த உண்மைகளை விக்கிலீக்ஸ் கிழித்துப்போட்டது.
இப்போது உலகத்தில் நீண்டகாலம் ஆட்சிக்கட்டிலில் இருந்து சுகபோகங்களை அனுபவித்து வரும் ஆட்சியாளரை அகற்ற மக்கள் வீறுகொண்டு வீதிக்கு வரும் புதிய பருவம் ஆரம்பமாகியிருக்கிறது. எகிப்தில் அன்வர் சதாத் படுகொலைக்குப்பின் ஆட்சிக்கு வந்த கொஸ்னி முபாரக் இன்றுவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கவில்லை. அமெரிக்காவோடு கைகோர்த்து இஸ்ரேலுக்கு வசதியான களம் அமைத்து இவர் நடத்திய ஊழல் ஆட்சி இப்போது விளிம்பிற்கு வந்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர் அமெரிக்கக் கொடியையும் தீயிட்டுக் கொழுத்தியதை அவதானிக்க முடிகிறது.
எகிப்தில் உருவான புரட்சிகர எழுச்சி இன்று யேமனுக்கு பரவியுள்ளது. யேமன் நாட்டின் அதிபர் அலி அப்பதுல்லா சலா ஆயுள் பரியந்தம் ஆட்சிக் கட்டிலில் இருக்க ஆசைகொண்ட ஒருவர். அவருடைய ஊழலுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியபோது 2013 இல் ஆட்சிக் கட்டிலில் இருந்து வெளியேறுவேன் என்று தெரிவித்திருந்தார். இன்று அதிகாலை அவரை பதவி விலகும்படி கோரி சுமார் 20 ஆயிரம் மக்கள் யேமன் நாட்டின் வீதிக்கு வந்துள்ளார்கள். ஆபிரிக்கா,மத்தியகிழக்கு, ஆசியா,தென்னாபிரிக்கா கண்டங்களில் போலி ஜனநாயக முத்திரையில் வகை தொகையின்றி நிறைந்து கிடக்கும் ஆட்சித் தலைமைகள் படிப்படியாகக் கிளர்ச்சிகளைச் சந்திக்க நேரிடும் காலம் உருவாகியுள்ளது. இன்று உலகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களை வீதிக்கு இறங்கக்கூடிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே உலகம் விரும்பியோ, விரும்பாமலோ பல புதிய மாற்றங்களைச் சந்திக்கப்போகிறது.
உலகத்தின் சொத்துகளும் உடைமைகளும் சிறிய குழுவினரிடம் இருக்க பெருந்தொகை மக்கள் ஏழைகளாக உள்ள இன்றைய உலகின் பொருளாதார சமமின்மை மீது பலத்த அடி விழப்போவதும் தெரிகிறது. நேற்றுவரை மக்களின் ஜனநாயக ஆர்ப்பாட்டங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யமாட்டோம் என்று போலி நாடகமாடிய எகிப்திய இராணுவம் இன்று தொலைக்காட்சியில் தோன்றி ஆர்ப்பாட்டக்காரரைக் கலைந்துபோகும்படி கூறியுள்ளது. நேற்று கொஸ்னி முபாரக் ஏவிவிட்ட குண்டர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலவரங்களை ஏற்படுத்தி இரத்தக்களரியை உண்டு பண்ணினார்கள். இன்றிலிருந்து நிலைமை அடி தலையாக மாறுவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். எகிப்தின் தாஹிர் பிளேஸ் பெரும் இரத்தக் களரியாக மாறப்போவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இது இவ்விதமிருக்க எகிப்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் மிரண்டுபோன இஸ்ரேல் ஏற்கனவே எகிப்து தன்னுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மாற்றக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தான் மறுபடியும் தேர்தலில் நிற்கப்போவதில்லை. வரும் செப்டெம்பர் தேர்தல் நடக்கும் என்று கொஸ்னி முபாரக் கொடுத்த இற்றுப்போன கயிற்றை ஆர்ப்பாட்டக்காரர் அடையாளம் கண்டுவிட்டனர். இன்று இராணுவம் கொடுத்த எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தில் முபாரக் ஏற்படுத்திய கலவரம் யாவும் அவருடைய வாக்குறுதியின் கபடத்தன்மையையே காட்டுவதாயுள்ளது. அமெரிக்காவும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாது தனது நலன்களைத் தக்க வைக்க நாடகமாடி வருகிறது.
ஆனால், மகத்தான ஒன்று உலக அரங்கில் இருந்து மறைய ஆரம்பிக்கிறது என்பதை இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் எடுத்துரைக்கின்றன. மக்கள் ஆட்சி வரலாற்றில் அல்லது ஜனநாயகத்தின் வரலாற்றில் புதிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. உலகளவில் ஏற்படும் இந்த மாற்றங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த அதிர்வுகள் வருங்காலத்தில் ஐ.நா.வை அடிதலையாக மாற்றியமைக்க வேண்டிய நிலைமையையும் ஏற்படுத்தலாம். அன்று முதலாவது உலக யுத்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச சங்கம் விட்ட அத்தனை தவறுகளும் இன்றைய ஐ.நா.வின் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ளது. பிரான்சியப் புரட்சிபோல உலக மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான பேரசைவு நகர ஆரம்பித்துள்ளதை தற்போது உணர முடிகிறது. இதற்கு ஐ.நா. வின் தப்பான அரசியலும் ஒரு காரணமாகும்.
இன்று எகிப்திய ஆர்ப்பாட்டங்களை முதன்மைப்படுத்தி செய்தி வெளியிட வேண்டாமென பல நாடுகள் தடைவிதித்து வருவதும் எகிப்தின் ஆர்ப்பாட்டங்கள் இணையம் மூலம் தடுக்கப்படுவதும் பல நாடுகளில் பரவலாக நடைபெறுகிறது.
விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய உண்மைகள்,உலகப் பொருளாதார மந்தம்,ஆட்சியில் சாகும்வரை இருக்கலாம் என்ற தலைவர்களின் நீர்த்துப்போன கனவுகள், வறுமையாலும் ஏமாற்று அரசியலாலும் நொந்துபோன உலக மக்கள், ஐ.நா.வின் பொறுப்பற்ற செயலால் வெந்துபோன உள்ளங்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மாற்றமடைய வேண்டிய உலகப் பொருளாதாரம் ஆகிய ஆறு அம்சங்களும் ஆறுபோல பெருகி உலகை ஓர்ஆட்டு ஆட்டுவிக்கக் கூடிய அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று போலி முழக்கமிட்ட பல நாட்டுத் தலைவர்கள் அந்த மகேசனின் தீர்ப்பைச் சுவைக்கும் பருவம் ஆரம்பித்துள்ளது
Sunday, February 6, 2011
எச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட் (with vedio link)
கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டு பெருமையுடன் ஸ்விப் பண்ணும் ஆசாமிகள் இனி தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும்.
அந்த எளிய முறைக்கும் ஆப்பு தயாராகி விட்டது. உங்களின் கிரெடிட் கார்டுகளை கண்களால் காணாமல், கைகளால் கூட எடுக்காமல் அதனை அப்படியே ஸ்கேன் செய்து காப்பி அடிக்கும் நவீன சாதனங்களும் வந்துவிட்டன.
கிரெடிட் கார்டு என்றில்லாமல்,பாஸ்போர்ட் போன்ற அதி முக்கியமான தகவல்களையும் இம்முறையில் எளிதாக திருடலாம்.
Friday, February 4, 2011
மூன்று முட்டாள்கள் இப்ப நண்பர்களாம்......
முன்னணி இயக்குநர் ஷங்கரையும், ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தையும் ரொம்பவே வாட்டிவிட்டது தமிழ் '3 இடியட்ஸ்'. |
இந்த படம் அவ்வளவுதான் என்று நினைக்கு அளவுக்கு பல சிக்கல்களை சந்தித்த ஜெமினி நிறுவனம், தற்போது அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, 'நண்பன்' என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்த தலைப்பு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பாண்டியன்' படத்துக்காக வைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்! இதனை படத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை வெளியிட்டுள்ளார். படத்துக்கு இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா. பாடல்கள்: நா முத்துக்குமார், கலை: முத்துராஜ். எடிட்டிங்: ஆண்டனி. நிர்வாக தயாரிப்பு: ராஜீ ஈஸ்வரன். தயாரிப்பு வடிவமைப்பு: விமல்ஜி. வசனம்: ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி. திரைக்கதை-இயக்கம்: ஷங்கர். கதாநாயகன் விஜய், கதாநாயகி இலியானா. மற்ற நடிகர்கள்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர். இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே. சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். 'சிவா மனசுல சக்தி' நாயகி அனுயா மற்றும் அஜய்ரத்னமும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்! இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தொடர்ந்து திருமண ஊர்வலம் மற்றும் பாடல் காட்சியை படமாக்குவதற்காக படப்பிடிப்பு குழுவினர் கோவை வந்தனர். நேற்று காலை 6 மணி முதல் ஊர்வல காட்சி அவினாசி சாலை ஜென்னி கிளப் முன்பு படமாக்கப்பட்டது. இதில் நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்தனர். மார்வாடி வீட்டு திருமண காட்சி போல பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. படப்பிடிப்பு ஏற்பாடுகளை கோவை பாபு செய்திருந்தார். பிப்ரவரி 25ம் தேதி முதல் 'விஜய்' நடிக்கும் பகுதிகள் படமாக்கப்படவுள்ளது. |
Subscribe to:
Posts (Atom)