svr.pamini

Montreal Time

Sunday, February 20, 2011

பார்வதி அம்மைக்கு கண்ணீர் அஞ்சலி

பூகம்ப வீரத்தைப் பெற்றவள் இன்று
  புன்னகை விட்டுக் கிடந்தனள்
வேகப் புயலொன்றைப் பெற்றவள்  இன்று
   விண்ணி லெழுந்து கலந்தனள்
தாகத்தின் ஊற்றினை தந்தவள் இன்று
   வானதிலேறிக் கரைந்தனள்
யாகத்தின் தீயும் அணைந்ததோ ஒரு
  யாத்திரையோடு முடியுதோ?!
வீரத்தின் சின்னம் விரைந்ததோ- ஒரு
 வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவள் -பெரும்
  சேனை படைகளை கண்டவள்
நேர்மை தன்மானத்தை சொன்னவள் -இன்று
   நித்திரைகொண்டனள் நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
    பாவ உலகம் வெறுத்ததோ
பேரை உலககெங்கும் சொன்னவன் -பெரும்
  போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
  நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
  உண்மையில் பூமி  பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
   வஞ்சகம செய்தினம் கொன்றது
வீரத்தாயும் இதைக் கண்டனள் -உளம்
  விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
   நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
   தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
  கொண்டு நடந்தனள் தெய்வமே

தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
  தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
   ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
   தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
  நாடகமாடி உடைத்தமோ
போனதுதான் திரும்புமோ -அந்த
 பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பானோ- இந்த
 நாடும் நமதென ஆகுமோ
தேனைத் திருநாட்டைக் காப்பமோ -நல்ல
  தோள்வலி கொண்டு சுமப்பமோ
ஏனோ கலங்குது நெஞ்சமே -இந்த
   ஏழைகளு கினியாரம்மா

No comments:

Post a Comment

Photobucket