svr.pamini

Montreal Time

Friday, February 4, 2011

மூன்று முட்டாள்கள் இப்ப நண்பர்களாம்......


முன்னணி இயக்குநர் ஷங்கரையும், ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தையும் ரொம்பவே வாட்டிவிட்டது தமிழ் '3 இடியட்ஸ்'.
இந்த படம் அவ்வளவுதான் என்று நினைக்கு அளவுக்கு பல சிக்கல்களை சந்தித்த ஜெமினி நிறுவனம், தற்போது அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, 'நண்பன்' என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்த தலைப்பு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பாண்டியன்' படத்துக்காக வைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்! இதனை படத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.
படத்துக்கு இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா. பாடல்கள்: நா முத்துக்குமார், கலை: முத்துராஜ். எடிட்டிங்: ஆண்டனி. நிர்வாக தயாரிப்பு: ராஜீ ஈஸ்வரன்.
தயாரிப்பு வடிவமைப்பு: விமல்ஜி. வசனம்: ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி. திரைக்கதை-இயக்கம்: ஷங்கர். கதாநாயகன் விஜய், கதாநாயகி இலியானா. மற்ற நடிகர்கள்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர்.
இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே. சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். 'சிவா மனசுல சக்தி' நாயகி அனுயா மற்றும் அஜய்ரத்னமும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்! இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தொடர்ந்து திருமண ஊர்வலம் மற்றும் பாடல் காட்சியை படமாக்குவதற்காக படப்பிடிப்பு குழுவினர் கோவை வந்தனர்.
நேற்று காலை 6 மணி முதல் ஊர்வல காட்சி அவினாசி சாலை ஜென்னி கிளப் முன்பு படமாக்கப்பட்டது. இதில் நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்தனர்.
மார்வாடி வீட்டு திருமண காட்சி போல பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. படப்பிடிப்பு ஏற்பாடுகளை கோவை பாபு செய்திருந்தார். பிப்ரவரி 25ம் தேதி முதல் 'விஜய்' நடிக்கும் பகுதிகள் படமாக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Photobucket