கொலிவுட்டில் கவிஞர் விவேகா எழுதிய ஆனந்தம், ரன், சமுத்திரம், வானத்தைப்போல, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படப்பாடல்கள் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் வெற்றி பாடல்களாக வலம் வந்தன.
கடந்த 2011ம் ஆண்டின் அதிகமான வெற்றிப்படங்களில் தரமான பாடல்களை கொடுத்த கொலிவுட் கவிஞராக பெருமை கொள்ளும் விவேகா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குனர் ஷங்கரின் 'நண்பன்' படத்தில் வரும் 'என் ப்ரெண்ட் போல யாரு மச்சான்' பாடல் வெற்றி பாடலாக அமைந்துள்ளது.
சமீபத்தில் விவேகா கூறியதாவது, கொலிவுட்டில் தற்போது என்னிடம் என்பதுக்கும் மேற்ப்பட்ட படங்கள் இருக்கின்றன.
சூர்யா நடிக்கும் மாற்றான், சிங்கம் -2 , சகுனி, கரிகாலன், அரவான், வல்லினம், சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு, இஷ்டம், பூலோகம் என்று வரிசையாக படங்களுக்கு பாடல்களை எழுதுகிறேன்.
என்னுடைய பாடல்கள் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வெற்றிப் பாடல்களாக ஒலிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. சமீபத்தில் என் பாடல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
என் friend-a போல யாரு மச்சான்.. அவன் trend-a யெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான் யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான் நாட்பால நம்ம நெஞ்ச தச்சான் நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்
தோழனின் தோழ்களும் அன்னை மடி அவன் தூரதில் பூத்திட்ட தொப்புல் கொடி கதலை தாண்டியும் உள்ள படி என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம் அதனாலே யாவும் பெற்றோம் மெலே மெலே சென்ட்ரொம் வான் மேகம் போலெ நின்றோம்
இலங்கைத் தீவின் தமிழ் மக்களென கூறப்படும் வடக்கு, கிழக்கு வாழ் மக்களும், புலம்பெயர் வாழ் மக்களுக்கும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் அனர்த்தத்தின் பின்னர் எல்லாமே இரண்டுபட்ட நிலையில் உள்ளனர்.
இன்று நாம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் மூன்றாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். தோல்வியின் மேல் தோல்வி. ஏமாற்றம் அதிர்ச்சி, இனிமேலும் நாம் தலைநிமிர முடியுமா என்ற கேள்விக் குறியுடன் ஏதோ, தானோ என்று வாழ்க்கை நடத்துகிறோம்.
இவ்வளவிற்கு பின்னரும் எம் இனத்திற்கு உள்ள அகங்காரம், போட்டி, பொறாமை, எரிச்சல் கீரைக் கடைக்கும் எதிர்க்கடை போடும் வழக்கம் குறைந்தபாடாய்க் காணவில்லை. எந்த விடயத்திலும் எம் இனத்திற்குள் விட்டுக்கொடுப்பு என்ற விடயத்திற்கே இடமில்லை.
அன்று நாம் சிறுவர்களாக இருக்கும்பொழுது எமது ஊர் பெரியவர்கள் அரசியல் பேசும்பொழுது, “மோட்டுச் சிங்களவரென'' கதைப்பதை நன்றாக கேட்டுள்ளோம். இது இன்று எதிர்மாறாக நாம், “மோட்டுத் தமிழரா?'' என எம்மை நாம் பார்த்து ஏளனமாக கேட்கும் நிலைக்கு எமது இனத்தின் நிலை இன்று உள்ளது.
இன்று இலங்கை அரசு பெற்றிருக்கும் அரசியல் இராணுவ வெற்றி என்பது எம்மிடையே யாவற்றையும் இரண்டு இரண்டாக பிரித்து உடைத்து எமது இனம் மீண்டும் தலைநிமிர முடியுமா என்ற நிலைக்கு இந்த மூன்று வருட காலம் தள்ளியுள்ளது.
இவற்றைப் பட்டியலிடுவதனால் இலங்கையில் தமிழர் தரப்பு இரண்டாக பிளவுபட்டுள்ளது, அத்துடன் பல இனந்தெரியாதோர் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் காவலர்களாக உருவாகியுள்ளனர். இதனால் எந்த தங்கு தடையுமற்ற சுதந்திரமான சிங்களக் குடியேற்றம், புத்தமயப்படுத்தல், மூலை முடுக்கெல்லாம் இராணுவ கடற்படை முகாம்கள் உருவாகியுள்ளன.
எல்லாமே இரண்டு
இதேவேளைஇ உள்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பேச்சுக்கு இடமில்லாதது மட்டுமல்லாது புலத்தில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் பல பிரிவாக உடைந்து தம்மிடையே தினம் சர்ச்சைகளை வளர்க்கின்றனர்.
இதே இடத்தில் இம் மூன்று வருட காலத்தில் எந்த தேவையும் அற்ற தமது பொருளாதாரங்களை வீண் விரயம் செய்து புலத்தில் எம்மிடையே இரு தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அடுத்து வருடா வருடம் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற்று வந்த ஒரே ஒரு மாவீரர் தினம், விளையாட்டுப் போட்டி யாவும் இரண்டு இரண்டு நடைபெறும் அருவருப்பான விடயத்தை காண்கிறோம்.
இது மட்டுமல்லாது இன்று அரசின் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கொடுக்கும் பொருட்டு தமக்கு பிடிக்காத ஒவ்வொரு செயற்பாட்டாளர் பற்றிய இறந்த காலச் செயற்பாடுகள் நிகழ்காலச் செயற்பாடுகள் யாவும் ஆதாரங்களுடன் பல இணைய தளங்கள், பத்திரிகைகள், வானொலிகளில் புலம் நாடுகளில் வெளியிடப்படுகின்றன.
இப்படியான நிலையிலும் கூட எமது மக்களிடையே ஒற்றுமை என்ற கதைக்கே இடமில்லை. இன்று யதார்த்த ரீதியாக பார்க்கும்பொழுது தமிழ்மக்களின் அரசியல் சமூக பொருளாதார, கலாசார உரிமைகளின் அடிப்படையில் கூறப்படும் சுய நிர்ணய உரிமை என்பது செல்லாக் காசாகியுள்ளன.
ஒவ்வொருவரும் தம்டன் ஒத்து வராதவர்களுக்கு உதைபந்தாட்டத்தில் மத்தியஸ்தர் சிவப்பு, மஞ்சள் அட்டைகள் காட்டுவது போல் “துரோகி'' பட்டம் வழங்கப்படுகின்றன.
இந் நிலை இன்னும் சில வருடங்கள் தொடருமானால் முன்பு கூறிய “தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா'' என்பது தமிழன் என்று சொன்னால் தலை நிமிர்ந்து வாழ முடியாது'' என மாற்ற வேண்டிய நிலை உருவாகும்.
ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்?
யாரை நம்புவது
1979 ஆம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சியின் பின்னர் ஈரானியர் தமது சொந்த சகோதரங்கள், குடும்பத்தவர், அயலாரையே நம்ப முடியாத நிலை ஒன்று உருவாகியதாக படித்துள்ளேன். ஈழத் தமிழர்களாகிய நாம் இன்று இப்படியான ஓர் வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறோம். நாம் குற்றவாளியோ சுற்றவாளியோ உலகில் ஒதுங்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். காரணம் நாம் மாலுமி அல்லது மாலுமிகள் அற்ற பயணத்தை மேற்கொள்கிறோம்.
இவ்விடத்தில் நாம் தேடும் மாலுமி அல்லது மாலுமிகள் யார்? என்ற கேள்வி எழுகிறது. இது யாராக இருக்க முடியும்! இவர்களுக்கு என்ன தகைமைகள் இருக்கவேண்டும். இப்படியாக இனம் காணபபடுவோரினால் என்ன செய்ய முடியும்? போன்ற கேள்விகள் இங்கு உருவாகின்றன.
எமது நீண்ட சாத்வீக போராட்டம், ஆயுதப் போராட்டம் ஆகியவை எந்த பயனையும் எமக்கு தரவில்லை. ஆகையால் நாம் தற்போதும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுவது நிச்சயமாக இராஜதந்திர போராட்டமே. இங்கு உணர்ச்சிவசமான பேச்சுகள், அணுகுமுறைகள், நடைமுறைகள் மீண்டும் எமது இனத்தை அதலபாதாளத்திற்கு தள்ளும்.
ஆகையால் இவ்வேலைத் திட்டத்தை முதிர்ந்த அனுபவம் பெற்ற, இராஜதந்திரம் தெரிந்த ஏற்கனவே நீண்ட விடுதலைப் போராட்டத்தினால் இனம் காணப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்டவர்களினால் தான் முன்னெடுக்க முடியும். அத்துடன் நிலத்தில் சகல சத்திய சோதனைகளையும் அனுபவிக்கும் மக்களின் வாழ்க்கையின் பக்கபலமாக உள்ளவர்களே முன்வர வேண்டும்.
அது மட்டுமல்லாது எமது நிலத்தில் அயலவர்களான இந்தியாவுடன் விருப்பு வெறுப்புகளை பாராது, உறவு கொள்ளக் கூடியவர்களே எமது மாலுமிகளாக இருக்க தகுதியுடையவர்கள். இது தவிர்ந்த வேறு அடையாளம் கொண்ட எவரானாலும் தமது உணர்ச்சிவச அரசியலினால் எமது அழிந்து கொண்டிருக்கும் இனத்தை அழித்தே தீருவார்கள்.
ஸ்கொட்லாந்து
இன்று பிரித்தானியாவில் உள்ள ஸ்கொட்லாந்தை பாருங்கள். அங்கு பிரித்தானியாவின் பிரதமர் ரொனி பிளேயர் பதவிக்கு வந்த பின்னர் 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம்! ஆனால் ஸ்கொட்லாந்து அரசியல்வாதிகளின் திறமையான இராஜதந்திர அணுகுமுறை ஸ்கொட்லாந்து மக்கள் 2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறுவதா இல்லையா என்பது பற்றி ஓர் வாக்கெடுப்பு நடத்தப் போகின்றனர்.
இங்கு தான் நாம் தவறவிட்ட மிக அருமையான சந்தர்ப்பமான 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை எம் முன்னே தோன்றுகின்றது. வடக்கு கிழக்கு வாழ் மக்கள் 1987 ஆம் ஆண்டு முன்வைக்ககப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை ஏற்கவில்லையென்பது சரித்திரம். ஆனால் இதன் மூலம் தமிழர் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைக்கப்படுகிறது.
தமி ழர் ஒருவர் முதலமைச்சர், அத்துடன் தமிழ் ஈழத்தின் தலைநகராக திருகோணமலையில் வடக்கு கிழக்கு மாகாண சபையின் தலைமைச் செயலகம். இத் தீர்வை அவ்வேளையில் அதாவது 1987 ஆம் ஆண்டு நாம் மனப்பூர்வமாக ஏற்றிருந்தால் இன்று ஸ்கொட்லாந்துமு தென் சூடான்மு கொசோவா ஆகியவற்றிற்கும் முன்பே நாம் அயலவரின் துணையுடன் சுதந்திரத்தை பெற்றிருப்போம்.
ஆகையால் நாம் இனி மேலும் உணர்ச்சி வச அரசியலைவிட்டு மதிநுட்ப இராஜதந்திர நகர்வுகளை சரியான திட்டமிடலுடன் முன்னெடுக்க வேண்டும்.
நாம் எமது கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் சுதந்திர தமிழீழத்திற்காக மேற்கொண்ட சகல கட்டமைப்புகள் சரியான முறையில் சரி செய்து எதிர்காலத்தை திட்டமிட வேண்டியுள்ளோம்.
தவறுகள் நடப்பது சகஜம், தவறுகள் என்பது எதிர்காலத்தின் ஓர் படிப்பினையாக அமைய வேண்டும். உலகில் பல இடங்களில் பல இனங்களின் விடுதலைப் போராட்டங்களில் வேறுபட்ட அரசியல் இராணுவ தவறுகள் இடம்பெற்றுள்ளன. சில இனங்கள் அடியோடு தொடர்ந்தும் தமது அரசியல் உமைகளை பெற முடியாதளவுக்கு அழிக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள்
நாம் எமது விடுதலைப் போராட்டத்தை வேறு இனத்தின் விடுதலைப் போராட்டத் துடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் எமது விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றனர்.
உலகில் விடுதலைப் போராட்டங்கள் நடைபெறும் ஒரு இனத்தினுடைய 500,000 மேற்பட்ட மக்களுக்கு மேல் புலம்பெயர்ந்த சர்வதேச ரீதியாக பல நாடுகளில் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவே வசிப்பவர்களானால் அது நிச்சயம் தமிழ் மக்களே என்பதில் எந்தவித ஐயமுமில்லை. அப்படியாக வாழும் எம்மால் நாம் ஆயுதப் போராட்டம் மூலம் பெற்ற ஓர் நிர்வாக அரசை தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விட்டது. இதற்கான பிரதான காரணம் எமது இராஜதந்திர நகர்வுகளில் உள்ள தவறே எனலாம்.
ஆகையால், இது போன்ற தவறை இனி மேலும் செய்யாது சரியான திட்டமிட்ட இராஜதந்திர நகர்வுகளை சர்வதேச ரீதியாக நாம் மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்பட்ட அரசியல் நகர்வுகள், மேடைப் பேச்சுகள், சவால் விடுதல் போன்றவற்றை நிறுத்தி, நேரம் பணம் மனிதவலு போன்றவற்றை வீண் விரயம் செய்யாத நகர்வுகள், வேலை திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.
ஊர்வலங்கள், செய்யும் வேளையில் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற வகையில் மனுக்கள், சுலோகங்கள், துண்டு பிரசுரங்களை வசனப் பிழை, எழுத்துப் பிழையில்லாது எழுதி வெளியிட வேண்டும்.
உரத்து சத்தம் போடுவது, ஊர்திகள் செய்வது பிரயோசனமற்ற முறையில் கூட்டங்களை நடத்துவது யாவும் நாம் எங்களை திருப்திப்படுத்துவதற்காகவும் எமது இணைய தளங்களுக்கான செய்தியாக இருக்குமே தவிர அதனால் சர்வதேச ரீதியாக நாம் ஒன்றையும் சாதிக்க மாட்டோம்.
புலம்பெயர் வாழ் மக்களிடையே திட்டமிடல் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு யாவும் இருக்குமேயானால் நாம் நிச்சயம் இழந்தவற்றை மீளப் பெறவும் எமது இனத்திற்கு ஏற்பட்ட அநியாயங்களை நீதி கேட்பதுடன் எமது தாயக பூமியில் வாழும் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வை தேடுவதற்கு நிச்சயம் உதவுவோம். இதனைச் செய்ய இப்போதே தயாராகுவோம்.
சூரியனை 121 வருடங்கள் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரி என்று யாழ்ப்பாணத்'திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம் யாழ். இந்துக் கல்லூரிக்குப் புகழாரம் சூடியுள்ளார்
மேதகு அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகையை சில அன்பர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை,அப்துல் காலம் துரோகி என சில நண்பர்களும்,சில ஊடகங்களும் அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகின்றன,முகப் புத்தகத்தில் ஒரு அன்பர் அப்துல் கலாம் தமிழின துரோகி எனவும் அவரைப் போட்டுத் தள்ள வேண்டும் எனவும் தனது அறச் சீற்றத்தைக் கொளுத்திப் போட்டு இருந்தார் , இந்த துரோகி , தியாகி என்பதற்கு அவசியம் ஒரு டெபினிசன் வேண்டும் தனது முகப் புத்தக பிரண்ட் ரிக்குயஸ்ட்டை ஏற்றுக் கொள்ளாத ஒரு பெண்ணை துரோகி என்றும் அவளை போட்டுத் தள்ளவேண்டும் எனவும் ஒரு நண்பர் தனது சீற்றத்தைக் என்னிடம் காட்டி இருந்தார் , என்ன இழவு வாழ்க்கடா இது , ஒரு முறை என்னுடன் கதைத்த நண்பன் ஒருவன் கூறினான் மச்சான் ஒரு தமிழனால் இன்னொரு தமிழனுக்கு இலகுவாக கொடுக்க கூடிய பட்டம் துரோகிப் பட்டம் தான் என்று, ya.......off course he was correct
உண்மையில் அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே,அப்துல் காலம் என்பவர் மிகப் பெரிய ஆளுமை,எத்தனையோ ஏழை இளைஞர்களுக்கு அவர் ஆதர்சனம்.இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் எனும் பெயருடைய ஒரு ஏழைச் சிறுவன்,இந்தியாவின் அணு சக்தித் துறைக்கே தந்தை எனும் நிலையை அடைந்தான் என்றால் அது incredible ,அப்துல் கலாம் தனது இன்றைய நிலையை அடைவதற்கு அவர் கடந்த நெருப்பாறுகள் அதிகம் .உண்மையில் அப்துல் கலாம் ஒரு ஜீனியஸ் ,எத்தனையோ கோடிக் கணக்கான இளைஞர்களின் ரோல் மாடல்.சில நாட்களுக்கு முன்பு I am Kalam எனும் ஒரு ஹிந்தி மூவி பார்த்தேன்,ராஜஸ்தான் பாலை வனத்தில் உள்ள ஒரு சிறிய தேநீர் கடையில் வேலை செய்யும் ஒரு ஏழைச் சிறுவன் அப்துல் காலமைப் பற்றி அறிந்து அவர் போல ஆக வேண்டும் என நினைப்பது தான் படத்தின் ஒன் லைன்,நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று,அந்தப் படத்தில் வரும் சிறுவனைப் போல எத்தனையோ இளைஞர்களை நான் பார்த்துள்ளேன். எனது ஒன்று விட்ட தம்பியின் நோட் புக்கை நான் ஒரு முறை பார்த்த போது அதில் அப்துல் கலாமின் சுய சரிதை ஆன அக்கினிச் சிறகுகளில் தனக்கு பிடித்த சுய ஆளுமை வசனங்களை குறித்து வைத்திருந்தான் அப்போது அவன் ஏழாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான் , எனக்கும் மிக மிகப் பிடித்த முதல் ஜந்து புத்தகங்களில் அக்கினிச் சிறகுகளும் ஒன்று . பெங்களூரில் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தருணுக்கு அப்துல் கலாம் தான் ஆதர்சனம்,வெட வெடக்கும் பெங்களுர் குளிரில் ஒவ்வொரு நாளும் காலை நான்கு மணிக்கு எழுந்து இருப்பான் கேட்டால் அப்துல் கலாம் நான்கு மணிக்கு எழுந்து இருப்பார் எனக் கூறுவான்,இந்தியாவின் வேறு ஒரு மூலையில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த எனது நண்பன் தருணுக்கு இந்தியாவின் இன்னொரு மூலையில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் ஆதர்சனம் என்றால் அப்துல் கலாம் எனும் மேதையைப் பற்றி நான் வார்த்தைகளால் விளங்கப்படுத்த முடியாது,அப்துல் கலாம் உண்மையில் ஒரு மாமனிதர் [அந்த மாமனிதர் அல்ல], அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகை எத்தனையோ இளைஞர்களின் சிந்தனைப் போக்கை மாற்றி இருக்கும் ஆராவது ஒருத்தனாவது அப்துல் கலாம் போல வர வேண்டும் என சபதம் பூண்டு இருப்பான்,அவ்வாறு சபதம் பூண்டு இருந்தால் மிக மிக வரவேற்கப் பட வேண்டிய விஜயம் ,அப்துல் கலாம் ஏன் புலிகள் ஆண்ட போது வர வில்லை என சிலர் லாஜிக் கேட்கிறார்கள் ,இந்தியாவின் பிரதமரைக் கொன்றவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் வர முடியாது என்பது நாலாம் கிளாஸ் படிச்சவனுக்கும் தெரியும் [இந்தியப் படைகள் ஈழத்தில் செய்த படுகொலைகள் எவ்வளவு தூரம் கண்டிக்கப்பட வேண்டியதோ அதே அளவுக்கு கண்டிக்கப்பட வேண்டியது ராஜீவ் காந்தியின் படு கொலை ],இதே போல ஒரு வாதம் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வென்ற போதும் பரவியது , என்னுடன் பேசிய ஒரு அன்பர் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் மேடையில் விடுதலைப் புலிகளை ஆதரித்து கருத்து சொல்லி இருக்க வேண்டும் என க் கூறினார் , அப்படி கூறாத ஏ ஆர் ரகுமான் துரோகி எனவும் பொங்கி இருந்தார் , வெளி உலகத்தில் அதுவும் வெளி மேடையில் விடுதலைப் புலிகளை ஆதரித்து ஒருவனும் கருத்து சொல்ல முடியாது என்கிற அளவிற்கு தான் விடுதலைப் புலிகளைப் பற்றியும் எமது போராட்டம் சார்ந்த உண்மையான நீதிகளையும் நாம் மிக கேவலமான முறையில் தான் வெளி உலகத்துக்கு கொண்டு சென்று உள்ளோம் ,எமது போராட்டம் தோற்றுப் போக மிக மிகப் பிரதான காரணமும் அது தான் ..
கூடங்குளம் அணு உலைக்கு அப்துல் கலாம் ஆதரவு தெரிவித்து இருந்தார் ,ஆகவே அப்துல் கலாம் ஒரு துரோகி என ஒரு அன்பர் எனக்கு கூறினார் ,மேலும் அப்துல் கலாம் காங்கிரஸின் அஜன்டாவிற்கு ஏற்ப செயற்படும் இத்தாலி அன்னையின் அடிவருடி எனவும் என்னிடம் கொந்தளித்து இருந்தார் ,அப்துல் கலாம் ஏதோ காங்கிரஸ் கேட்டுக் கொண்டதுக்கு ஏற்ப நேற்று திடீர் என முளைத்து அணுசக்தி மின்சாரத்தை ஆதரிக்கிறார் என கூறுவது அடி முட்டாள் தனம் ,அப்துல் கலாமை சரியாக பின் பற்றுபவர்களுக்கு தெரியும் அப்துல் கலாம் எத்தனை ஆண்டுகளாக அணு சக்தியை ஆதரித்து வருகிறார் என்று , ஒரு அணு வி ஞ்ஞனி அணு உலையை எதிர்த்தால் தான் அது அதிசயம் யாழ்ப்பாணத்தில் ஒரு கதை சொல்வார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாக்கு சென்ற சிலர் இந்தியாவில் மாருதிக் காரைப் பார்த்தவுடன் தங்களுக்குள் ஆச்சரியப்பட்டார்களாம்
அட அட டே ..........இந்தியாவிலும் மாருதிக் கார் இருக்கு என்ன ...........? ,
ஏறத் தாள இதைப் போலத் தான் இருக்கிறது,அணு மின் விவகாரத்தில் அப்துல் கலாமை துரோகி என்பவர்களின் நிலையும், அப்துல் கலாம் இன்று நேற்று அல்ல ஆண்டு ஆண்டு காலமாக அணு சக்தியை ஆதரித்து வருகிறார் , நான் பெர்சனலாக எனது அறிவுக்கு ஏற்ற படி அணு மின்சாரத்தை எதிர்கிறேன் [அணு சக்தி சம்பந்தமான எனது அறிவு பூச்சியம் என்பது வேறு விடயம்]
அணு சக்தி இந்தியர்களின் பிரச்னை அதை விடுத்து எமது மக்களின் பிரச்சனைக்கு வருவோம் ........
அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகையை யார் எதிர்கிறார்கள் என்று பார்த்தல் அவர்களில் பெரும் பாலானவர்கள் புலம் பெயர் தமிழர்கள்,இன்னும் சிலர் இந்தியாவில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்கள் , இந்தியாவில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களை விடுவோம் அவர்களுக்கு சில விடயங்கள் இந்த உலகம் அழியும் வரை விளங்காது , விளங்கப்படுத்தவும் முடியாது,அவர்களில் பெரும் பாலானவர்கள் இன்னும் சேர சோழ பாண்டிய மன்னர் காலங்களில் இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசுகின்றனர் ,அவர்களுக்கு போரின் வலி தெரியாது அவர்களில் பெரும் பாலானவர்கள் போரை விஜயின் சுறா படம் போல நினைக்கிறார்கள்,ஆனால் பெரும் பாலான புலம் பெயர் தமிழர்களுக்கு போரின் வலி தெரியும் ஆனால் அவர்கள் அதனை இலகுவாக மறந்து விடுகிறார்கள்,இவர்கள் ஈழத்தில் இன்னும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனை மறந்து விடுகிறார்கள் ,அவர்களின் பாஷையில் சொன்னால் கொடிய அரக்கன் மகிந்தவின் ஆட்சியில் ஈழத்தில் இன்னும் லட்சக் கணக்கான தமிழர்கள் இருகிறார்கள் , ஈழத்திற்கு யாருமே போகக் கூடாது என்றால் என்ன சார் நியாயம் ,ஈழத்துக்கு எவனுமே போகக் கூடாது என்ற ஒருவரிடம்
அப்ப யாராம் போறது என்று கேட்டதுக்கு
நாங்கள் லீவில போவம் தானே ,அது போதாதா என்றார் .
சுருங்க சொன்னால் இன்றைய ஈழத்து இளம் சந்ததியின் போர்க் குணத்தை மாற்றும் எந்த விஜயத்தையும் புலம் பெயர் சில அன்பர்கள் விரும்புவது இல்லை,அவர்களுக்கு எமது இளம் சந்ததி எப்போதும் போர்க் குணத்துடன் தான் இருக்க வேண்டும் ,போராட வேண்டும் சாக வேண்டும் தாம் வளமாக வாழ வேண்டும் , அவர்களுக்கு தமது பாக்கெட்டை நிரப்ப ஈழத்தில் போர் அவசியம்.
நாம் ஈழ தமிழர்கள் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் முற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடிப் பார்த்து விட்டோம் உலகின் அத் தனை துயரங்களும் ஈழத்தமிழனுக்கு தெரியும் நாம் மேற்கொண்ட நீதிக்கான போர் எமது தவறாலும் சர்வதேசத்தின் தவறாலும் படு தோல்வியில் முடிந்துள்ளது,ஆம் ஈழத்தமிழர்கள் நாம் தோற்று விட்டோம் என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்,எமக்கு முன்னால் இப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்வி தான்
அடுத்தது என்ன..............?
போராடிப் பார்த்தாகி விட்டது,முள்ளி வாய்கால் வரை எமது மக்கள் பார்த்து விட்டனர்,இனி ஒரு போராட்டம் எந்த விதத்திலும் சாத்தியம் இல்லை என்கிற உண்மை பெரும் பாலான ஈழத்தமிழனுக்கு விளங்கிவிட்டது,ஆனால் புலம் பெயர் சில புலிப் பினா மிகளுக்கும் இந்தியாவில் உள்ள சில அன்பர்களுக்கும் விளங்க வில்லை ,மாற்றிச் சொன்னால் அவர்களுக்கு உண்மை நிலை விளங்கினால் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகி விடும்,ஈழத்தமிழனை முதலாக கொண்டு செய்து வரும் பிஸினெஸ் எல்லாம் என்ன ஆகும்,ஆகவே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ "பிரபாகரன் திரும்பி வருவார்' "தமிழர் மானம்" "வீரம்" லொட்டு லொசுக்கு என்று கண்ட மேனிக்கு அடித்து வருகிறார்கள்,சில புலம் பெயர் தமிழர்களுக்கு எமது இளம் சந்ததியின் இர த்தம் இன்னும் கேட்கிறது தாம் பாதுகாப்பாக வெளி நாடுகளில் இருந்து கொண்டு எமது அப்பாவி இளைஞர்களை சாகடித்தது போதாது என்று அவர்கள் இன்னும் மனித உடல்களை பலியாக கேட்கிறார்கள்,வெளிநாடுகளில் இருந்து கொண்டு தமிழ் ஈழம் அடையாமல் வெளிக்கிருக்க மாட்டாதவர்கள் வெளிக்கிருக்காமல் இருக்கட்டும்,இல்லை என்று இன்னும் முக்குபவர்களை போராட தமிழ் ஈழம் அன்போடு வரவேற்கிறது.............................!
ஆனால் ஈழத்தில் உள்ள இன்றைய இளம் சந்ததி உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் ,இனியொரு போராட்டம் எம்மால் சாத்தியம், இல்லை ஆனாலும் நாம் போராட வேண்டும் அதுவும் முழு மூச்சாக , முன்னயதை விட தீவிரமாக,ஆனால் வேறு விதமாக
எவ்வாறு.........?
அந்தப் போராட்டம் கல்வியால் மாத்திரம் தான் முடியும்..
ஈழத்தமிழன் கல்விக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன் ,பொதுவாக எந்த இனத்தையும் விட ஈழத் தமிழர்களின் கல்வி அறிவு அசாதாரணம் ஆனது , எம்மில் பலர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகிறார்கள் ,அவர்களை தடுக்க வேண்டும் என சிங்கள பேரினவாத அரசு கிரிமினலாக சிந்தித்து கொண்டு வந்த தரப்படுத்தல் தான் ஈழத்தில் போரை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது,இன்றும் கூட உலகின் எத்தனையோ பெரும் பதவிகளில் ஈழத்தமிழர்கள் அசால்ட்டாக இருக்கிறார்கள்,இனி நாம் எடுக்க இருக்கும் போராட்டம் அல்லது எடுக்க இருக்கும் ஆயுதம் "கல்வி"யாக இருக்க வேண்டும்.குழந்தைப் போராளிகளை , தற்கொலைப் போராளிகளை உருவாக்கியதை விடுத்து நாம் இப்போது மேதைகளை உருவாக்க வேண்டிய நிலையில் / கட்டாயத்தில் இருக்கிறோம்.எம்மால் எமது இழந்த பெருமையை மீண்டும் பெற கல்வியால் மாத்திரம் தான் முடியும் எமது அடுத்த சந்ததி தமக்கு இருக்கும் வரலாற்றுக் கடமையை உணர்த்து கல்வியில் முழு நாட்டம் செலுத்த வேண்டும்,எமது அடுத்த சந்ததியாவது சுயமாக சிந்திக்கக் கூடிய ,பிரச்சனைகளை சரியான முறையில் எதிர்கொள்ளக் கூடிய சந்ததியாக மாற வேண்டியது அல்லது மாற்ற வேண்டியது காலத்தின் அவசியம் அல்லது...இனிவரப் போகும் வரலாறுகளில் "ஈழத்தமிழர்கள் எனும் ஒரு இனக் குழுமம் இலங்கையில் இருந்தார்கள்" என பதியப் படப் போவதை யாராலும் தடுக்க முடியாது"........
நான் அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயத்தை அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வின் ஒரு படியாகத்தான் பார்க்கிறேன்,அப்துல் கலாமிற்கு எமது யாழ்ப்பாண இளைஞர்கள் கொடுத்த தடல் புடலான வரவேற்பை பார்க்கும் போது எமது இளம் சந்ததியின் மனம் சிறிதளவேனும் கல்வியின் பக்கமாக திரும்புகிறது என்பதை நினைக்க சந்தோசமாக உள்ளது, ஒரு அட்வைஸ் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று சொல்வார்கள்,போரால் கெட்டு நொந்து சிக்கி சீரழிந்து உள்ள ஈழத்தமிழனுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லக் கூடிய தகுதி அப்துல் கலாம் எனும் பெரியவரிடம் மட்டும் தான் இருக்கிறது ஏன் என்றால் அப்துல் கலாம் தனது வாழ்வின் ஆரம்ப காலங்களில் போரை சந்திக்கா விட்டாலும் போரின் விளைவுகள் என்று சொல்லக் கூடிய வறுமை தனிமை முதலிய அனைத்தையும் அனுபவித்து தான் இன்று அப்துல் காலமாக மிளிர்கிறார்,அப்துல் காலாமின் யாழ்ப்பாண வருகை எமது இளம் சந்ததியில் ஒருவரது மனத்தை மாற்றி ,அவனது போர்க் குணத்தை மாற்றி அவனைக் கல்வியின் பக்கம் திருப்பி இருந்தால் அப்துல் கலாம் ஈழமக்களுக்கு நன்மை செய்த உத்தமர்களின் பட் டியலில் முதல் இடம் பிடிப்பார்... this post copided from Aruliniyan sivamakalinkam..thanks a lot....
நண்பன் திரைப்படத்தி்ன் வசூல் 100 கோடியை தாண்டும் என்று தமிழ் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் நண்பன். ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் என்பதால் நண்பன் திரைப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் 12ம் திகதியே படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் மட்டும் 625 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் முதல் வாரத்திலேயே சுமார் 40 கோடியை எட்டியுள்ளது.
படம் வெளியான முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பியதால் எதிர்ப்பார்த்தை விட நல்ல வசூல் கிடைத்துள்ளது.
எந்திரன் திரைப்படத்தினை அடுத்து அதிக திரையரங்குகள், மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு, கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமை, தெலுங்கு டப்பிங் உரிமை, இசை உரிமை, தொலைக்காட்சி உரிமை உட்பட அனைத்தையும் கணக்கிட்டால் நண்பன் திரைப்படம் 100 கோடியை தாண்டுவது உறுதி என்கிறது தமிழ் திரையுலக வட்டாரங்கள்.
இதுவரை எந்த ஒரு விஜய் திரைப்படத்திற்கும் கொடுக்காத விலையை கொடுத்து நண்பன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Saturday, January 14, 2012
நீண்ட இடைவெளியின் பின் சூப்பர்ஹிட் கொடுத்திருக்கும் விஐய்...!!!
[ Friday, 13 January 2012, 02:21.28 PM GMT +05:30 ]
நீண்ட நெடிய காலத்துக்குப் பிறகு ஒரு க்ளீன் வெற்றியை ருசித்திருக்கிறார் இளைய தளபதி விஜய்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் அனைத்து வகையிலும் ஒரு க்ளீன் என்டர்டெயின்மெண்ட் என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கொண்டாடுகின்றனர்.
பொதுவாக ஒரு சூப்பர்ஹிட் படத்தை வேறு மொழியில் ரிமேக் செய்யும்போது கசப்பான நிகழ்வுகளே ஏற்படும். முக்கியமாக ஒரிஜினலின் ஆத்மா ரிமேக்கில் மிஸ்ஸாகிவிடும். ஆனால் நண்பனில் 3 இடியட்ஸின் மேஜிக் அப்படியே ரிப்பீட்டாகியிருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுவதால் படம் மெகா ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை.
வருடத்தின் முதல் பெரிய படமே சூப்பர்ஹிட்டாகியிருப்பதால் திரையுலகே சந்தோஷத்தில் உள்ளது.
தூள் கிளப்பும் யாழ் பாட்டு தாத்தா முதல் டாடா வரை 'கொலவெறி’க்கு அடிமையாக ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டு தனுஷ் கொடி இன்று இந்தி வரை பறக்கக் காரணமும் இந்தக் 'கொலவெறி’ தான்! இதேபாடலை எம்.ஜி.ஆர். பாடினால் எப்படி இருக்கும் ... சிவாஜி உச்சரித்தால் எப்படி இருக்கும் என்று உடான்ஸ் பாட்டுக்கள் இணையத்தில் உலவும் வேளையில், யாழ்ப்பாணத்தில் இருந்து அழகுத் தமிழ் 'கொலைவெறிப் பாடல்’ ஒன்று வந்திருக்கிறது. தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலால் உச்சி குளிர்ந்து கிடக்கிறார்கள். 'என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் வரிகளே, சூட்டைக் கிளப்புகின்றன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 1.24 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்கிறார்கள். 4.26 நிமிடங்கள் ஓடுகிறது இந்த வீடியோ பாடல். போர் முடிந்த ஈழத்தில், நொந்துகிடக்கும் தமிழ் மக்களின் நெஞ்சைத் தொடும் பாடலாக இது. .
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும் தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா
உடல்நிலை சரியில்லாமல் போய்,மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலிருக்கிறது சுற்றியிருப்பவர்கள்.
முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.
அது தனுஷ் – ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது.
தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதாவும் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. ”ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது
உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமா… அல்லது நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணவா” என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது
மண்டபத்தில் தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ரஜினி.
“எப்பேர்பட்ட மனிதர் அவர்… திருமணத்தின் போது தனுஷ் செய்த அத்தனை சில்லரைத்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகும் தனுஷ் திருந்தவில்லை.
ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்றார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர்.
இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம். ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்ததும் (கமல் ஆசியுடன்), பின்னர் அவரை விட்டுப் பிரிந்து வந்ததும் நினைவிருக்கலாம்.
சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் ஐஸ்வர்யா.
இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் ட்ரிங்ஸ் பார்ட்டிக்குப் போனாராம் தனுஷ்.
இதைக் கேள்விப்பட்டு பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டாராம் ரஜினி. தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நாயகிகளின் தண்ணிப் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் தனுஷ்.
கொலவெறி பாட்டுக்கு கிடைத்த தாறுமாறான ஹிட்டும், மும்பையில் கிடைத்துள்ள புதிய சினேகிதங்களும் அவரை தலைகால் புரியாமல் ஆட வைப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கடுப்புடன் கூறுகின்றனர்
யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தபோது, நயன்தாராவுடன் ஏகத்துக்கும் நெருக்கமாகி, எல்லை மீறிப் போனதும், நயன்தாராவை கிண்டி நட்சத்திர ஓட்டலில் நிரந்தரமாகத் தங்க வைத்திருந்ததும் செய்தியாக ஏற்கெனவே வந்ததுதான்
அப்போது ரஜினி தன் பாணியில் கண்டிக்க, தனுஷ் வாலைச் சுருட்டிக் கொண்டாராம். இப்போது மீண்டும் ஸ்ருதியுடன் லீலையை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த செய்தி உண்மைதானா?அல்லது ’3′ படத்தின் பப்ளிசிட்டியின் ஒரு அங்கமா என்றும் இன்னொரு தரப்பினர் பேசிக் கொள்கிறார்கள்.
தனுசுடன் இணைத்து கிசு கிசு: ஸ்ருதி கண்டனம்
தனுசுவும், ஸ்ருதியும் '3' என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் தனுசும் ஸ்ருதியும் நெருக்கமாகி காதல் வயப்பட்டுள்ளதாகவும் இருவரும் புத்தாண்டை சேர்ந்து கொண்டாடியதாகவும் இதனால் ரஜினி அதிர்ச்சியாகி தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் வருத்தப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
துரித உணவுகளால் சிறுவர்களின் மூளை பாதிப்படையும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 06 சனவரி 2012, 02:20.35 மு.ப GMT ]
பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட பாஸ்ட் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று ஆய்வு எச்சரித்துள்ளது.
டிரான்ஸ் பேட் கொழுப்பு: தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் பேட் போதுமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் பேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எச்சரிக்கை: இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
எனவே குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், பாக்கெட் சிப்ஸ் போன்றவைகளை வழங்குவதை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறுவகைகளை உணவாக வழங்கவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை.....