100 கோடியை தாண்டும் நண்பன் |
![]() |
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் நண்பன்.![]() தமிழகத்தில் மட்டும் 625 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் முதல் வாரத்திலேயே சுமார் 40 கோடியை எட்டியுள்ளது. படம் வெளியான முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பியதால் எதிர்ப்பார்த்தை விட நல்ல வசூல் கிடைத்துள்ளது. எந்திரன் திரைப்படத்தினை அடுத்து அதிக திரையரங்குகள், மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு, கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமை, தெலுங்கு டப்பிங் உரிமை, இசை உரிமை, தொலைக்காட்சி உரிமை உட்பட அனைத்தையும் கணக்கிட்டால் நண்பன் திரைப்படம் 100 கோடியை தாண்டுவது உறுதி என்கிறது தமிழ் திரையுலக வட்டாரங்கள். இதுவரை எந்த ஒரு விஜய் திரைப்படத்திற்கும் கொடுக்காத விலையை கொடுத்து நண்பன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
Monday, January 23, 2012
நண்பன் திரைப்படத்தி்ன் வசூல் 100 கோடியை தாண்டும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment