மேதகு அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகையை சில அன்பர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை,அப்துல் காலம் துரோகி என சில நண்பர்களும்,சில ஊடகங்களும் அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகின்றன,முகப் புத்தகத்தில் ஒரு அன்பர் அப்துல் கலாம் தமிழின துரோகி எனவும் அவரைப் போட்டுத் தள்ள வேண்டும் எனவும் தனது அறச் சீற்றத்தைக் கொளுத்திப் போட்டு இருந்தார் , இந்த துரோகி , தியாகி என்பதற்கு அவசியம் ஒரு டெபினிசன் வேண்டும் தனது முகப் புத்தக பிரண்ட் ரிக்குயஸ்ட்டை ஏற்றுக் கொள்ளாத ஒரு பெண்ணை துரோகி என்றும் அவளை போட்டுத் தள்ளவேண்டும் எனவும் ஒரு நண்பர் தனது சீற்றத்தைக் என்னிடம் காட்டி இருந்தார் , என்ன இழவு வாழ்க்கடா இது , ஒரு முறை என்னுடன் கதைத்த நண்பன் ஒருவன் கூறினான் மச்சான் ஒரு தமிழனால் இன்னொரு தமிழனுக்கு இலகுவாக கொடுக்க கூடிய பட்டம் துரோகிப் பட்டம் தான் என்று, ya.......off course he was correct
கூடங்குளம் அணு உலைக்கு அப்துல் கலாம் ஆதரவு தெரிவித்து இருந்தார் ,ஆகவே அப்துல் கலாம் ஒரு துரோகி என ஒரு அன்பர் எனக்கு கூறினார் ,மேலும் அப்துல் கலாம் காங்கிரஸின் அஜன்டாவிற்கு ஏற்ப செயற்படும் இத்தாலி அன்னையின் அடிவருடி எனவும் என்னிடம் கொந்தளித்து இருந்தார் ,அப்துல் கலாம் ஏதோ காங்கிரஸ் கேட்டுக் கொண்டதுக்கு ஏற்ப நேற்று திடீர் என முளைத்து அணுசக்தி மின்சாரத்தை ஆதரிக்கிறார் என கூறுவது அடி முட்டாள் தனம் ,அப்துல் கலாமை சரியாக பின் பற்றுபவர்களுக்கு தெரியும் அப்துல் கலாம் எத்தனை ஆண்டுகளாக அணு சக்தியை ஆதரித்து வருகிறார் என்று , ஒரு அணு வி ஞ்ஞனி அணு உலையை எதிர்த்தால் தான் அது அதிசயம் யாழ்ப்பாணத்தில் ஒரு கதை சொல்வார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாக்கு சென்ற சிலர் இந்தியாவில் மாருதிக் காரைப் பார்த்தவுடன் தங்களுக்குள் ஆச்சரியப்பட்டார்களாம்
அட அட டே ..........இந்தியாவிலும் மாருதிக் கார் இருக்கு என்ன ...........? ,
ஏறத் தாள இதைப் போலத் தான் இருக்கிறது,அணு மின் விவகாரத்தில் அப்துல் கலாமை துரோகி என்பவர்களின் நிலையும், அப்துல் கலாம் இன்று நேற்று அல்ல ஆண்டு ஆண்டு காலமாக அணு சக்தியை ஆதரித்து வருகிறார் , நான் பெர்சனலாக எனது அறிவுக்கு ஏற்ற படி அணு மின்சாரத்தை எதிர்கிறேன் [அணு சக்தி சம்பந்தமான எனது அறிவு பூச்சியம் என்பது வேறு விடயம்]
அணு சக்தி இந்தியர்களின் பிரச்னை அதை விடுத்து எமது மக்களின் பிரச்சனைக்கு வருவோம் ........
அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகையை யார் எதிர்கிறார்கள் என்று பார்த்தல் அவர்களில் பெரும் பாலானவர்கள் புலம் பெயர் தமிழர்கள்,இன்னும் சிலர் இந்தியாவில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்கள் , இந்தியாவில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களை விடுவோம் அவர்களுக்கு சில விடயங்கள் இந்த உலகம் அழியும் வரை விளங்காது , விளங்கப்படுத்தவும் முடியாது,அவர்களில் பெரும் பாலானவர்கள் இன்னும் சேர சோழ பாண்டிய மன்னர் காலங்களில் இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசுகின்றனர் ,அவர்களுக்கு போரின் வலி தெரியாது அவர்களில் பெரும் பாலானவர்கள் போரை விஜயின் சுறா படம் போல நினைக்கிறார்கள்,ஆனால் பெரும் பாலான புலம் பெயர் தமிழர்களுக்கு போரின் வலி தெரியும் ஆனால் அவர்கள் அதனை இலகுவாக மறந்து விடுகிறார்கள்,இவர்கள் ஈழத்தில் இன்னும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனை மறந்து விடுகிறார்கள் ,அவர்களின் பாஷையில் சொன்னால் கொடிய அரக்கன் மகிந்தவின் ஆட்சியில் ஈழத்தில் இன்னும் லட்சக் கணக்கான தமிழர்கள் இருகிறார்கள் , ஈழத்திற்கு யாருமே போகக் கூடாது என்றால் என்ன சார் நியாயம் ,ஈழத்துக்கு எவனுமே போகக் கூடாது என்ற ஒருவரிடம்
அப்ப யாராம் போறது என்று கேட்டதுக்கு
நாங்கள் லீவில போவம் தானே ,அது போதாதா என்றார் .
சுருங்க சொன்னால் இன்றைய ஈழத்து இளம் சந்ததியின் போர்க் குணத்தை மாற்றும் எந்த விஜயத்தையும் புலம் பெயர் சில அன்பர்கள் விரும்புவது இல்லை,அவர்களுக்கு எமது இளம் சந்ததி எப்போதும் போர்க் குணத்துடன் தான் இருக்க வேண்டும் ,போராட வேண்டும் சாக வேண்டும் தாம் வளமாக வாழ வேண்டும் , அவர்களுக்கு தமது பாக்கெட்டை நிரப்ப ஈழத்தில் போர் அவசியம்.
நாம் ஈழ தமிழர்கள் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் முற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடிப் பார்த்து விட்டோம் உலகின் அத் தனை துயரங்களும் ஈழத்தமிழனுக்கு தெரியும் நாம் மேற்கொண்ட நீதிக்கான போர் எமது தவறாலும் சர்வதேசத்தின் தவறாலும் படு தோல்வியில் முடிந்துள்ளது,ஆம் ஈழத்தமிழர்கள் நாம் தோற்று விட்டோம் என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்,எமக்கு முன்னால் இப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்வி தான்
அடுத்தது என்ன..............?
போராடிப் பார்த்தாகி விட்டது,முள்ளி வாய்கால் வரை எமது மக்கள் பார்த்து விட்டனர்,இனி ஒரு போராட்டம் எந்த விதத்திலும் சாத்தியம் இல்லை என்கிற உண்மை பெரும் பாலான ஈழத்தமிழனுக்கு விளங்கிவிட்டது,ஆனால் புலம் பெயர் சில புலிப் பினா மிகளுக்கும் இந்தியாவில் உள்ள சில அன்பர்களுக்கும் விளங்க வில்லை ,மாற்றிச் சொன்னால் அவர்களுக்கு உண்மை நிலை விளங்கினால் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகி விடும்,ஈழத்தமிழனை முதலாக கொண்டு செய்து வரும் பிஸினெஸ் எல்லாம் என்ன ஆகும்,ஆகவே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ "பிரபாகரன் திரும்பி வருவார்' "தமிழர் மானம்" "வீரம்" லொட்டு லொசுக்கு என்று கண்ட மேனிக்கு அடித்து வருகிறார்கள்,சில புலம் பெயர் தமிழர்களுக்கு எமது இளம் சந்ததியின் இர த்தம் இன்னும் கேட்கிறது தாம் பாதுகாப்பாக வெளி நாடுகளில் இருந்து கொண்டு எமது அப்பாவி இளைஞர்களை சாகடித்தது போதாது என்று அவர்கள் இன்னும் மனித உடல்களை பலியாக கேட்கிறார்கள்,வெளிநாடுகளில் இருந்து கொண்டு தமிழ் ஈழம் அடையாமல் வெளிக்கிருக்க மாட்டாதவர்கள் வெளிக்கிருக்காமல் இருக்கட்டும்,இல்லை என்று இன்னும் முக்குபவர்களை போராட தமிழ் ஈழம் அன்போடு வரவேற்கிறது.............................!
ஆனால் ஈழத்தில் உள்ள இன்றைய இளம் சந்ததி உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் ,இனியொரு போராட்டம் எம்மால் சாத்தியம், இல்லை ஆனாலும் நாம் போராட வேண்டும் அதுவும் முழு மூச்சாக , முன்னயதை விட தீவிரமாக,ஆனால் வேறு விதமாக
எவ்வாறு.........?
அந்தப் போராட்டம் கல்வியால் மாத்திரம் தான் முடியும்..
ஈழத்தமிழன் கல்விக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன் ,பொதுவாக எந்த இனத்தையும் விட ஈழத் தமிழர்களின் கல்வி அறிவு
அசாதாரணம் ஆனது , எம்மில் பலர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகிறார்கள் ,அவர்களை தடுக்க வேண்டும் என சிங்கள பேரினவாத அரசு கிரிமினலாக சிந்தித்து கொண்டு வந்த தரப்படுத்தல் தான் ஈழத்தில் போரை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது,இன்றும் கூட உலகின் எத்தனையோ பெரும் பதவிகளில் ஈழத்தமிழர்கள் அசால்ட்டாக இருக்கிறார்கள்,இனி நாம் எடுக்க இருக்கும் போராட்டம் அல்லது எடுக்க இருக்கும் ஆயுதம் "கல்வி"யாக இருக்க வேண்டும்.குழந்தைப் போராளிகளை , தற்கொலைப் போராளிகளை உருவாக்கியதை விடுத்து நாம் இப்போது மேதைகளை உருவாக்க வேண்டிய நிலையில் / கட்டாயத்தில் இருக்கிறோம்.எம்மால் எமது இழந்த பெருமையை மீண்டும் பெற கல்வியால் மாத்திரம் தான் முடியும் எமது அடுத்த சந்ததி தமக்கு இருக்கும் வரலாற்றுக் கடமையை உணர்த்து கல்வியில் முழு நாட்டம் செலுத்த வேண்டும்,எமது அடுத்த சந்ததியாவது சுயமாக சிந்திக்கக் கூடிய ,பிரச்சனைகளை சரியான முறையில் எதிர்கொள்ளக் கூடிய சந்ததியாக மாற வேண்டியது அல்லது மாற்ற வேண்டியது காலத்தின் அவசியம் அல்லது...இனிவரப் போகும் வரலாறுகளில் "ஈழத்தமிழர்கள் எனும் ஒரு இனக் குழுமம் இலங்கையில் இருந்தார்கள்" என பதியப் படப் போவதை யாராலும் தடுக்க முடியாது"........
நான் அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயத்தை அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வின் ஒரு படியாகத்தான் பார்க்கிறேன்,அப்துல் கலாமிற்கு எமது யாழ்ப்பாண இளைஞர்கள் கொடுத்த தடல் புடலான வரவேற்பை பார்க்கும் போது எமது இளம் சந்ததியின் மனம் சிறிதளவேனும் கல்வியின் பக்கமாக திரும்புகிறது என்பதை நினைக்க சந்தோசமாக உள்ளது,
ஒரு அட்வைஸ் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று சொல்வார்கள்,போரால் கெட்டு நொந்து சிக்கி சீரழிந்து உள்ள ஈழத்தமிழனுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லக் கூடிய தகுதி அப்துல் கலாம் எனும் பெரியவரிடம் மட்டும் தான் இருக்கிறது ஏன் என்றால் அப்துல் கலாம் தனது வாழ்வின் ஆரம்ப காலங்களில் போரை சந்திக்கா விட்டாலும் போரின் விளைவுகள் என்று சொல்லக் கூடிய வறுமை தனிமை முதலிய அனைத்தையும் அனுபவித்து தான் இன்று அப்துல் காலமாக மிளிர்கிறார்,அப்துல் காலாமின் யாழ்ப்பாண வருகை எமது இளம் சந்ததியில் ஒருவரது மனத்தை மாற்றி ,அவனது போர்க் குணத்தை மாற்றி அவனைக் கல்வியின் பக்கம் திருப்பி இருந்தால் அப்துல் கலாம் ஈழமக்களுக்கு நன்மை செய்த உத்தமர்களின் பட் டியலில் முதல் இடம் பிடிப்பார்... this post copided from Aruliniyan sivamakalinkam..thanks a lot....
No comments:
Post a Comment