svr.pamini

Montreal Time

Monday, November 29, 2010

நீயா நானா

சின்னத்திரையிலே நாடகத் தொடர்கள் தான் கதியெனக் கிடந்த மக்களைப் புதிய நிகழ்ச்சிகள் மூலம் வேறுபரிமாணத்தை அடையவைத்த பெருமை விஜை டீவியையேசாரும்.
அந்த வகையில் தான் பல சுவாரஸ்யமான விவாதப் பொருள்களை எடுத்து விவாதிக்க களம் அமைக்கும் ஒரு நிகழ்ச்சியே கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி....
"இவ் நவீன யுகத்தில் தங்களை அதிகம் மெருகூட்டிக்கொள்பவர்கள் ஆண்களா? அல்லது பெண்களா?

Friday, November 26, 2010

மிருகமே குழந்தை என்றால் மனம் இரங்குகிறது



வேட்டையாடும் குணம் கொண்ட புலி ஒன்று தனக்கு எதிரியாக நினைத்த குரங்கு ஒன்றைக் கொண்று விட்டது, அவ்வுடலை கொண்டு செல்லும் போது தான் இறந்த தாய்க் குரங்கோடு பின்னிப் பிணைந்திருக்கும் குட்டிக் குரங்கை அது தற்செயலாக அவாதானிக்கிறது. உடனே அக் குட்டிக் குரங்கை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறது அந்தப் புலி. இரவு பகலாக அதனோடு உறவாடும் புலி அது தவறிக் கூடக் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளதை இந்தக் காணொளியில் காணலாம். இரவில் கூட தன்னருகில் அணைத்து வைத்து அக் குரங்கு குட்டியுடன் தூங்குகிறது.

அனால் சிங்களமோ திட்டமிட்டே செஞ்சோலை சிறுவர் இல்லம்மேல் குண்டு மழை போழிந்தது. நவாலியில் சர்ச்சில் கூடியிருந்த குழந்தைகளைக் கொண்றது, துடிக்கத் துடிக்க முள்ளிவாய்க்காலில் பலரை செல்போட்டுக் கொண்றது. பசி பட்டினியால் வாடிய சிறுவர்களுக்கு கஞ்சி கொடுக்கும் போது வரிசையில் நின்றவர்களைக் கூட விட்டுவைக்கவில்லையே இந்தச் சிங்களம். மிருகங்களைக் காட்டிலும் கோரமானவன் சிங்களவன் என எனக்கு உணர்த்தி நிற்கிறது

Thursday, November 25, 2010

வை-பை கதிர்கள் மனிதர்களை தாக்குகின்றதா?



வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர். 

இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. 

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

Monday, November 22, 2010

அறிவியல்

இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததே...........

இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததே..  முதல் முறை காதல் ரோபோ அழைத்ததே.. 

கேர்ள்பிரெண்ட், பாய்பிரெண்ட் கிடைக்கவில்லையே.. கிடைத்தாலும் நிலைக்கவில்லையே.. என்றெல்லாம் இனி கவலைப்பட தேவையில்லை. பரிசுத்தமான அன்பு செலுத்தும் ரோபோவை ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் உல்ரிச் கண்டுபிடித்திருக்கிறார்.

இதற்கு பெயர் ‘ஃபங்ஷனைடு’. வழக்கமான ரோபோ போல கை, கால், தலை, வெடுக் வெடுக் நடை இதெல்லாம் இதற்கு கிடையாது. பெரிய சைஸ் தலையணை போல இருக்கும். மடியில் வைத்துக் கொள்ளலாம். கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ளலாம். அதை சோபாவில் வைத்து அதன் ‘மடியில்’ படுத்துக் கொள்ளலாம்.

பலரைப் பற்றிய தகவல்களை இதில் சேமித்து வைக்க முடியும். தோலின் நிறத்தை வைத்து, யார் தொடுகிறார் என்பதை ஃபங்ஷனைடு தெரிந்துகொள்ளும். அணைக்கும் விதம் மற்றும் உடல் சூட்டை வைத்து சார்/மேடம் அமைதியாக இருக்கிறார்களா, கோபத்தில் இருக்கிறார்களா என்பதை உணர்ந்துகொள்கிறது. நாம் குஷி மூடில் இருந்தால் அதுவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற வகையில் தனது ‘உடலை’ வைத்துக் கொள்கிறது. நாம் சோகமாக இருக்கும் சூழ்நிலையில் அதை மடியில் வைத்துக் கொண்டால் ஆறுதலாய் உடம்பை வருடிக் கொடுக்கிறது. அதை கட்டியணைத்து படுத்துக் கொண்டால் தட்டித் தூங்க வைக்கிறாற்போல ஆறுதலாய் அணைத்துக் கொள்கிறது.

மனிதரின் உணர்ச்சியை புரிந்துகொண்டு அதற்கேற்ப ரியாக்ஷனை வெளிப்படுத்துவதற்காக மைக்ரோ சென்சார்கள், மனிதனின் தசைகள் போன்ற மென்மையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

நம்மிடம் அன்பு, பாசம் காட்டத்தான் கேர்ள்பிரெண்ட், பாய்பிரெண்டை நாடுகிறோம்.  ஃபங்ஷனைடுகள் வந்துவிட்டால் இதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் போய்விடும். தனிமையில் வாடும் முதியவர்கள், ஆதரவின்றி இருப்பவர்களுக்காகவே இதை உருவாக்கினேன் என்கிறார் உல்ரிச்.

அழகி என்ற இறுமாப்பு ஆபத்தானது - ''ஐஸ்வர்யா ராய்"

அழகி என்ற இறுமாப்பு ஆபத்தானது...''ஐஸ்வர்யாராய் அன்று சொன்னது அர்த்தமுள்ளது. இந்திய அழகியாக, உலக அழகியாக, சினிமா நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.
அவர் ஒரு சிறந்த அறிவாளி என்கின்றனர் அவருடன் பழகியவர்கள். நடிக்க வந்த புதிதில் ஐஸ்வர்யாராய் சொன்ன கருத்துக்களை சற்று உற்றுநோக்கினால்,
1997 ஆகஸ்டு மாதத்தில் ஐஸ்வர்யாராய் கூறியது:-
* என்னால் ராஜா ஹிந்துஸ்தானி படத்தில் நடிக்க முடியவில்லை. நடித்திருந்தால், என்னால் இந்திய அழகி மற்றும் உலக அழகி பட்டங்களை வென்றிருக்க முடியாது. நீங்கள் சில வெற்றிகளை பெறும்போது, சில இழப்புக்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
* சில நடிகைகள் பாதுகாப்பின்றி இருப்பதால், அவர்கள் தவறான பாதைக்கு திரும்பி விடுகிறார்கள். யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. சிலர் ஒழுக்க சீர்கேட்டான வேலையில் ஈடுபடும் சூழல் ஏற்படுகிறது. நான் யாரையும் பழிக்கவில்லை, யாரையும் குற்றப்படுத்தவில்லை. பொதுவாகவே சொல்கிறேன்.
* பாலிவுட்டில் இன்றைக்கு எல்லா நடிகைகளுமே மேக்கப் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அளவுக்கு மீறும்போது மேக்க , நமது முகத்தை அசிங்கமாக்கிவிடும். ஆதலால், மேக்க செய்வதற்கும் ஒரு எல்லை தேவை. இயற்கையான விஷயங்களே எப்போதும் நமக்கு ஏற்றது.
* என்னுடைய உடல் மினுமினுப்பும், அழகும் எனக்கும் பிடிக்கும். ஆனாலும் அந்த வளையத்துக்குள் இருந்து தற்போது மீட்டுவிட்டேன். இல்லாவிட்டால் அழகு என்ற மாயைக்குள் மாட்டியிருப்பேன். அந்தி சாயும் பொன்மாலை பொழுதில் ஓடுவது, ஆடுவது எல்லாம் கேமரா முன்பு மட்டுமே... பிற சந்தோஷங்கள் வாழ்க்கையில் ஏராளம் உள்ளன!
- 1997-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கூறியது:-
* அழகி என்ற இறுமாப்பு என்றைக்கும் ஆபத்தானது. இன்றைக்கு வந்துள்ள புகழ் எனக்கு புதிதாக எதையும் கொடுக்கவில்லை. எனது வாழ்க்கையில் மூன்று கட்டங்களை சந்தித்து விட்டேன். முதலில் மாடலிங், அடுத்து உலக அழகி, மூன்றாவதாக சினிமா.
* எனக்கு நானே நல்ல தோழி. ஒவ்வொரு நாள் இரவிலும் என்னை நானே சுய பரிசோதனை செய்து கொள்வேன். இன்றைக்கு யார் யாரை சந்தித்தோம்... அவர்களிடம் என்ன கற்றுக் கொண்டோம் என்று ஆராய்ந்து அறிந்து கொள்வேன்!
- 1999-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கூறியவை:-
* பள்ளி, கல்லூரி நாட்களில் என்னை போன்ற இளம்பெண்கள் பெரும்பாலும் டாம்க்ரூஸ், மெல்கி ஸன் போன்றவர்களின் போஸ்டர்களை வைத்திருப்போம். அவையெல்லாம் தேவையற்ற விஷயங்கள் என்று இப்போது நினைத்தாலும், அப்போதைக்கு அவை ஆச்சரியம் தரும் கொண்டாட்டங்கள். டாம்குரூஸை நேரில் சந்தித்து பேசும் வரை அவர் மீதான மோகம் எனக்கு குறையவே இல்லை.
* சஞ்சய் லீலா பன்சாலி ஒரு சிறந்த டைரக்டர். அவர் என்ன சொன்னாலும் கேட்பேன். என்னுடைய கண்களை உற்று பார்த்து எனக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்து, அதற்கு தீர்வு கூறுவார். எனக்கு என்ன பிரச்சினை என்றாலும் அவரிடம்தான் ஓடுவேன். என்னுடைய சந்தோஷங்களில் அவருக்கும் பங்குண்டு.
- 2002-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் ஐஸ்வர்யாராய் கூறியவை:-
* தொடக்கத்தில் சினிமாவில் நடிக்கும்போது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பேராசை பிடித்து தீவிரமாக இருந்தேன். நானும், ஷாருக்கானும் தூக்கமின்றி இரவு, பகல் பாராமல் உழைத்தோம். அந்த நாட்களில் எனது உழைப்பின் இலக்கு இன்றைக்கு எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
* நம்பர் ஒன் இடத்தை பெற என்ன செய்தேன்? ஒன்றுமில்லை... சிறந்த இயக்குனர்கள், சிறந்த திரைக்கதை, முயற்சி, உழை பு ஆகியவையே முக்கிய காரணம். நம்பர் ஒன், டூ என்றெல்லாம் என்னை எப்போதும் நினைத்து கொள்வதில்லை... ஏனென்றால் இதெல்லாம் நிலையானது அல்ல!
* தினமும் 20 முறையாவது கண்ணாடியில் என்னுடைய முகத்தை பார்த்து ஒழுங்குபடுத்துகிறேன். இதை பகட்டு என்று யாரும் கூற முடியாது. ஏனென்றால் என்னுடைய வேலையே அதுதானே?
* வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் நான் பார்த்து விட்டேன். கல்லூரியில் படிக்கும்போது எனக்காக பல இளைஞர்கள் வெளியே காத்திருப்பார்கள். சிலர் என்னை பின் தொடர்ந்து வருவார்கள். இதை நான் தவறாக நினைத்து பயந்தது கிடையாது. எல்லா நிலைகளையும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன்.
-2010 ம் ஆண்டில் நவம்பர் மாதம் ஐஸ்வர்யாராய் கூறியது:-
மேற்கூறியவகைகளை கடைப்பிடிப்பதால் தான் நான் இப்போதும் அழகாகவும் எனக்கென ஒரு இடத்தையும் தக்க வைத்துக்கொண்டிருக்க முடிகின்றது.

Sunday, November 21, 2010

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகிய எந்திரன் இன்று ஐம்பதாவது நாளைக் கடந்துள்ளது

ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1-ம் திகதி வெளியாகி வசூலில் புதிய சரித்திரம் படைத்தது. உள்நாடு, வெளிநாடு இரண்டிலும் சேர்த்து இந்தப் படம் பல கோடிகளை குவித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் மட்டுமல்ல... இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமும் எந்திரனே.

வட இந்தியாவில் மொழிமாற்றம் செய்து வெளியான திரைப்படத்தில் ரோபோவின் வசூல் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள ரோபோ, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மகதீரா படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரோபோ.

குஜராத்இ ஹரியானா போன்ற வெளி மாநிலங்கள், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் எந்திரன் படத்தை ஜப்பானில் வெளியிடும் முயற்சிகளில் உள்ளது சன் பிக்சர்ஸ்.

இன்பத்தை தேடி

மண்ணை தொட்டு
பர்ர்க்க பயமாக இருகிறது
இரத்தகறை காயாத ஈரானிலமது

பயிர்  செய்ய எண்ணி
பார்த்து வெட்டினேன்
கண்டேன் அங்கே மனித புதைக்குழி
சொந்தத்தை பார்க்க பக்கத்து ஊர் போனேன்
சோகத்தை கடனாக வாங்கிவந்தேன்
சொந்தமே இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.......
நின்மதி தேடி கோவிலுக்கு போனேன்
கோவில் வாசலிலே நின்மதி தொலைத்தேன்
பார்த்தேன் சித்தம் தொலைத்த
என் பால்ய நண்பனை......
எதுவும் வேண்டாமென வீடு வந்தேன்
வாசலில் நின்றாள் அருமை மனைவி
எட்டி பார்த்து சிரித்தது
என் அருமை குழந்தை
ஒருகோடி இன்பத்தை  உணர்தேன்
அந்த அரை நொடி பொழுதிலே....
Photobucket