இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததே...........

கேர்ள்பிரெண்ட், பாய்பிரெண்ட் கிடைக்கவில்லையே.. கிடைத்தாலும் நிலைக்கவில்லையே.. என்றெல்லாம் இனி கவலைப்பட தேவையில்லை. பரிசுத்தமான அன்பு செலுத்தும் ரோபோவை ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் உல்ரிச் கண்டுபிடித்திருக்கிறார்.
இதற்கு பெயர் ‘ஃபங்ஷனைடு’. வழக்கமான ரோபோ போல கை, கால், தலை, வெடுக் வெடுக் நடை இதெல்லாம் இதற்கு கிடையாது. பெரிய சைஸ் தலையணை போல இருக்கும். மடியில் வைத்துக் கொள்ளலாம். கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ளலாம். அதை சோபாவில் வைத்து அதன் ‘மடியில்’ படுத்துக் கொள்ளலாம்.
பலரைப் பற்றிய தகவல்களை இதில் சேமித்து வைக்க முடியும். தோலின் நிறத்தை வைத்து, யார் தொடுகிறார் என்பதை ஃபங்ஷனைடு தெரிந்துகொள்ளும். அணைக்கும் விதம் மற்றும் உடல் சூட்டை வைத்து சார்/மேடம் அமைதியாக இருக்கிறார்களா, கோபத்தில் இருக்கிறார்களா என்பதை உணர்ந்துகொள்கிறது. நாம் குஷி மூடில் இருந்தால் அதுவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற வகையில் தனது ‘உடலை’ வைத்துக் கொள்கிறது. நாம் சோகமாக இருக்கும் சூழ்நிலையில் அதை மடியில் வைத்துக் கொண்டால் ஆறுதலாய் உடம்பை வருடிக் கொடுக்கிறது. அதை கட்டியணைத்து படுத்துக் கொண்டால் தட்டித் தூங்க வைக்கிறாற்போல ஆறுதலாய் அணைத்துக் கொள்கிறது.
மனிதரின் உணர்ச்சியை புரிந்துகொண்டு அதற்கேற்ப ரியாக்ஷனை வெளிப்படுத்துவதற்காக மைக்ரோ சென்சார்கள், மனிதனின் தசைகள் போன்ற மென்மையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
நம்மிடம் அன்பு, பாசம் காட்டத்தான் கேர்ள்பிரெண்ட், பாய்பிரெண்டை நாடுகிறோம். ஃபங்ஷனைடுகள் வந்துவிட்டால் இதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் போய்விடும். தனிமையில் வாடும் முதியவர்கள், ஆதரவின்றி இருப்பவர்களுக்காகவே இதை உருவாக்கினேன் என்கிறார் உல்ரிச்.
No comments:
Post a Comment