அழகி என்ற இறுமாப்பு ஆபத்தானது...''ஐஸ்வர்யாராய் அன்று சொன்னது அர்த்தமுள்ளது. இந்திய அழகியாக, உலக அழகியாக, சினிமா நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். |
அவர் ஒரு சிறந்த அறிவாளி என்கின்றனர் அவருடன் பழகியவர்கள். நடிக்க வந்த புதிதில் ஐஸ்வர்யாராய் சொன்ன கருத்துக்களை சற்று உற்றுநோக்கினால், 1997 ஆகஸ்டு மாதத்தில் ஐஸ்வர்யாராய் கூறியது:- * என்னால் ராஜா ஹிந்துஸ்தானி படத்தில் நடிக்க முடியவில்லை. நடித்திருந்தால், என்னால் இந்திய அழகி மற்றும் உலக அழகி பட்டங்களை வென்றிருக்க முடியாது. நீங்கள் சில வெற்றிகளை பெறும்போது, சில இழப்புக்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். * சில நடிகைகள் பாதுகாப்பின்றி இருப்பதால், அவர்கள் தவறான பாதைக்கு திரும்பி விடுகிறார்கள். யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. சிலர் ஒழுக்க சீர்கேட்டான வேலையில் ஈடுபடும் சூழல் ஏற்படுகிறது. நான் யாரையும் பழிக்கவில்லை, யாரையும் குற்றப்படுத்தவில்லை. பொதுவாகவே சொல்கிறேன். * பாலிவுட்டில் இன்றைக்கு எல்லா நடிகைகளுமே மேக்கப் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அளவுக்கு மீறும்போது மேக்க , நமது முகத்தை அசிங்கமாக்கிவிடும். ஆதலால், மேக்க செய்வதற்கும் ஒரு எல்லை தேவை. இயற்கையான விஷயங்களே எப்போதும் நமக்கு ஏற்றது. * என்னுடைய உடல் மினுமினுப்பும், அழகும் எனக்கும் பிடிக்கும். ஆனாலும் அந்த வளையத்துக்குள் இருந்து தற்போது மீட்டுவிட்டேன். இல்லாவிட்டால் அழகு என்ற மாயைக்குள் மாட்டியிருப்பேன். அந்தி சாயும் பொன்மாலை பொழுதில் ஓடுவது, ஆடுவது எல்லாம் கேமரா முன்பு மட்டுமே... பிற சந்தோஷங்கள் வாழ்க்கையில் ஏராளம் உள்ளன! - 1997-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கூறியது:- * அழகி என்ற இறுமாப்பு என்றைக்கும் ஆபத்தானது. இன்றைக்கு வந்துள்ள புகழ் எனக்கு புதிதாக எதையும் கொடுக்கவில்லை. எனது வாழ்க்கையில் மூன்று கட்டங்களை சந்தித்து விட்டேன். முதலில் மாடலிங், அடுத்து உலக அழகி, மூன்றாவதாக சினிமா. * எனக்கு நானே நல்ல தோழி. ஒவ்வொரு நாள் இரவிலும் என்னை நானே சுய பரிசோதனை செய்து கொள்வேன். இன்றைக்கு யார் யாரை சந்தித்தோம்... அவர்களிடம் என்ன கற்றுக் கொண்டோம் என்று ஆராய்ந்து அறிந்து கொள்வேன்! - 1999-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கூறியவை:- ![]() * பள்ளி, கல்லூரி நாட்களில் என்னை போன்ற இளம்பெண்கள் பெரும்பாலும் டாம்க்ரூஸ், மெல்கி ஸன் போன்றவர்களின் போஸ்டர்களை வைத்திருப்போம். அவையெல்லாம் தேவையற்ற விஷயங்கள் என்று இப்போது நினைத்தாலும், அப்போதைக்கு அவை ஆச்சரியம் தரும் கொண்டாட்டங்கள். டாம்குரூஸை நேரில் சந்தித்து பேசும் வரை அவர் மீதான மோகம் எனக்கு குறையவே இல்லை. * சஞ்சய் லீலா பன்சாலி ஒரு சிறந்த டைரக்டர். அவர் என்ன சொன்னாலும் கேட்பேன். என்னுடைய கண்களை உற்று பார்த்து எனக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்து, அதற்கு தீர்வு கூறுவார். எனக்கு என்ன பிரச்சினை என்றாலும் அவரிடம்தான் ஓடுவேன். என்னுடைய சந்தோஷங்களில் அவருக்கும் பங்குண்டு. - 2002-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் ஐஸ்வர்யாராய் கூறியவை:- * தொடக்கத்தில் சினிமாவில் நடிக்கும்போது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பேராசை பிடித்து தீவிரமாக இருந்தேன். நானும், ஷாருக்கானும் தூக்கமின்றி இரவு, பகல் பாராமல் உழைத்தோம். அந்த நாட்களில் எனது உழைப்பின் இலக்கு இன்றைக்கு எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. * நம்பர் ஒன் இடத்தை பெற என்ன செய்தேன்? ஒன்றுமில்லை... சிறந்த இயக்குனர்கள், சிறந்த திரைக்கதை, முயற்சி, உழை பு ஆகியவையே முக்கிய காரணம். நம்பர் ஒன், டூ என்றெல்லாம் என்னை எப்போதும் நினைத்து கொள்வதில்லை... ஏனென்றால் இதெல்லாம் நிலையானது அல்ல! * தினமும் 20 முறையாவது கண்ணாடியில் என்னுடைய முகத்தை பார்த்து ஒழுங்குபடுத்துகிறேன். இதை பகட்டு என்று யாரும் கூற முடியாது. ஏனென்றால் என்னுடைய வேலையே அதுதானே? * வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் நான் பார்த்து விட்டேன். கல்லூரியில் படிக்கும்போது எனக்காக பல இளைஞர்கள் வெளியே காத்திருப்பார்கள். சிலர் என்னை பின் தொடர்ந்து வருவார்கள். இதை நான் தவறாக நினைத்து பயந்தது கிடையாது. எல்லா நிலைகளையும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன். -2010 ம் ஆண்டில் நவம்பர் மாதம் ஐஸ்வர்யாராய் கூறியது:- மேற்கூறியவகைகளை கடைப்பிடிப்பதால் தான் நான் இப்போதும் அழகாகவும் எனக்கென ஒரு இடத்தையும் தக்க வைத்துக்கொண்டிருக்க முடிகின்றது. |
Monday, November 22, 2010
அழகி என்ற இறுமாப்பு ஆபத்தானது - ''ஐஸ்வர்யா ராய்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment