svr.pamini

Montreal Time

Friday, November 26, 2010

மிருகமே குழந்தை என்றால் மனம் இரங்குகிறது



வேட்டையாடும் குணம் கொண்ட புலி ஒன்று தனக்கு எதிரியாக நினைத்த குரங்கு ஒன்றைக் கொண்று விட்டது, அவ்வுடலை கொண்டு செல்லும் போது தான் இறந்த தாய்க் குரங்கோடு பின்னிப் பிணைந்திருக்கும் குட்டிக் குரங்கை அது தற்செயலாக அவாதானிக்கிறது. உடனே அக் குட்டிக் குரங்கை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறது அந்தப் புலி. இரவு பகலாக அதனோடு உறவாடும் புலி அது தவறிக் கூடக் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளதை இந்தக் காணொளியில் காணலாம். இரவில் கூட தன்னருகில் அணைத்து வைத்து அக் குரங்கு குட்டியுடன் தூங்குகிறது.

அனால் சிங்களமோ திட்டமிட்டே செஞ்சோலை சிறுவர் இல்லம்மேல் குண்டு மழை போழிந்தது. நவாலியில் சர்ச்சில் கூடியிருந்த குழந்தைகளைக் கொண்றது, துடிக்கத் துடிக்க முள்ளிவாய்க்காலில் பலரை செல்போட்டுக் கொண்றது. பசி பட்டினியால் வாடிய சிறுவர்களுக்கு கஞ்சி கொடுக்கும் போது வரிசையில் நின்றவர்களைக் கூட விட்டுவைக்கவில்லையே இந்தச் சிங்களம். மிருகங்களைக் காட்டிலும் கோரமானவன் சிங்களவன் என எனக்கு உணர்த்தி நிற்கிறது

No comments:

Post a Comment

Photobucket