ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1-ம் திகதி வெளியாகி வசூலில் புதிய சரித்திரம் படைத்தது. உள்நாடு, வெளிநாடு இரண்டிலும் சேர்த்து இந்தப் படம் பல கோடிகளை குவித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் மட்டுமல்ல... இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமும் எந்திரனே.
வட இந்தியாவில் மொழிமாற்றம் செய்து வெளியான திரைப்படத்தில் ரோபோவின் வசூல் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள ரோபோ, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மகதீரா படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரோபோ.
குஜராத்இ ஹரியானா போன்ற வெளி மாநிலங்கள், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் எந்திரன் படத்தை ஜப்பானில் வெளியிடும் முயற்சிகளில் உள்ளது சன் பிக்சர்ஸ்.
No comments:
Post a Comment