svr.pamini

Montreal Time

Sunday, November 21, 2010

இன்பத்தை தேடி

மண்ணை தொட்டு
பர்ர்க்க பயமாக இருகிறது
இரத்தகறை காயாத ஈரானிலமது

பயிர்  செய்ய எண்ணி
பார்த்து வெட்டினேன்
கண்டேன் அங்கே மனித புதைக்குழி
சொந்தத்தை பார்க்க பக்கத்து ஊர் போனேன்
சோகத்தை கடனாக வாங்கிவந்தேன்
சொந்தமே இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.......
நின்மதி தேடி கோவிலுக்கு போனேன்
கோவில் வாசலிலே நின்மதி தொலைத்தேன்
பார்த்தேன் சித்தம் தொலைத்த
என் பால்ய நண்பனை......
எதுவும் வேண்டாமென வீடு வந்தேன்
வாசலில் நின்றாள் அருமை மனைவி
எட்டி பார்த்து சிரித்தது
என் அருமை குழந்தை
ஒருகோடி இன்பத்தை  உணர்தேன்
அந்த அரை நொடி பொழுதிலே....

No comments:

Post a Comment

Photobucket