உலகமெங்கும் இன்று தீபாவளிக் கொண்டாட்டமாக இளைய தளபதியின் நடிப்பில் துப்பாக்கி வெடித்துள்ளது.தீபாவளிக் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்களுக்கு துப்பாக்கி அதிரடியான இசைக் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பின்னிப் பெடலெடுக்கின்றன. ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த நட்சத்திர ஹீரோவை சரியாக கையாண்டுருக்கிறார்
ஏ.ஆர்.முருகதாஸ்.
தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு போன்ற படங்களிலிருந்து துப்பாக்கியை வேறொரு கோணத்தில் பார்க்கலாம்.
விறுவிறுப்பான கதைக்களத்தில் தொடங்கும் துப்பாக்கியின் கதை, ஒரு இராணுவ வீரனின் விறுவிறுப்பான செயல்கள் மூலம் தீவிரவாதிகளை பிடிப்பது.இராணுவத்தில் இருக்கும் விஜய் மும்பைக்கு விடுமுறையில் வருகிறார். அங்கே பொலிஸில் இருக்கும் சத்தியனுடன் ஊர் சுற்றுவது தான் வேலை.ஒரு முறை இவர்கள் பயணம் செய்த வண்டியில் ஒரு தீவிரவாதி வேறேங்கோ கொண்டு செல்ல முற்பட்ட குண்டு வெடிக்கிறது.
ஆனால் அத்தீவிரவாதியை பிடித்து பொலிசில் கொடுக்கிறார்.
அவன் ஒரு பொலிசாராலேயே தப்பிக்க வைக்கப்பட இவரது வேட்டை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தவறான பொலிசாரைக் கூட தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு இருக்கிறது.கதையில் பெரியளவு வித்தியாசத்தைக் காணமுடியாவிட்டாலும் விஜயின் வழமையான பாணியில் இருந்து பெரிதும் மாறுபட்டதாகவும் அளவுக்கதிகமான ஹீரோயிசம் இல்லாமலும் கில்லியில் பார்த்த விஜயின் இன்னும் ஒரு புதிய தோற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது.நடனத்துக்காக தினேசும், சிறீதரும் விஜயை நன்றாகப் புழிந்து விட்டார்கள் என்பது அவரது நடன அசைவுகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.காஜல் அகர்வால் அழகு விருந்து படைத்தாலும் திரில் நிறைத்த கதைப் பகுதிக்குள் நுழைக்கப்படவே இல்லை என்பதால் ஆரம்பத்தில் மட்டும் ஒரு சில காட்சிகளால் மனதுக்குள் பதிந்ததோடு மறைந்து போய் விடுகிறார்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும் இடத்திலும், தீவிரவாதிகளை அவர்கள் இடத்திலேயே தங்கையை பணயமாக வைத்து அழிக்கும் இடத்திலும் விஜய் ஸ்டைலில் ஒரு கலக்குக் கலக்கி விடுகிறார்.துப்பாக்கி சுழற்றலக்காகவே அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும்காட்சியும் அதற்காக விஜயின் கெட்டப்பும் ஃபாக்ஸ், ஏ. எக். என் இல் ஒளிபரப்பான பிரபல தொடரான 24 மணிநேரத்தையும் அதில் நடித்த ஜக் பவர் ஐயும் அப்படியே நினைவுபடுத்திச் செல்கிறது.
அதே போல கையில் சிப்ஸ் பதித்துச் செல்லும் இடத்திலும் மிசன் இம்பாஸிபிள் ஐ நினைவூட்டுவது போல உள்ளது.சந்தோஷ் சிவன் தனது ஒளிப்பதிவை திறம்படச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பஸ் மற்றும் கப்பல் குண்டு வெடித்தால் காட்சிகள் மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.விஜய் இப்படத்திலும் இரு தங்கைகள் மூலம் தங்கை சென்டிமென்டை கையாண்டிருக்கிறார். அனைவரும் எதிர் பார்த்தது போல படத்தில் அலட்டல் அலப்பாறைகள் நிறைந்த எந்நவொரு பஞ்ச் வசனத்தையும் விஜய் பேசவில்லை.
அதே போல ஹரிசின் இசையும் விஜயின் ஸ்டைலுக்கும் படத்தின் விறுவிறுப்புகம்கும் பெரிதும் ஒத்துப் போவது மிகப் பெரிய பிளசான விடயமாக இருக்கின்றது.நண்பனுக்கு பின்னர், விஜய்யும் சத்யனும் துப்பாக்கியில் இணைந்து நடித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
காஜல் அகர்வால் முதன் முறையாக விஜய்யுடன் நடித்தாலும் நடிப்பில் கவரச்சியில் வாங்கும் சம்பளத்திற்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.
நடிகர்: விஜய்
நடிகை: காஜல் அகர்வால்
இயக்குனர்: ஏ.ஆர்.முருகதாஸ்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: சந்தோஷ்சிவன்
மணிரத்தினத்தின் இயக்கத்தில் தயாராகிவரும் கடல் படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், நெஞ்சுக்குள்ள உம்மை... என்ற ஒரு பாடலினை எம்.டீ.வி அன்பிளக்ட் நிகழ்ச்சியில் வெளியிட்டு வைத்துள்ளார்.
இசை வெளியீட்டுக்கு முதல் சிங்கிள் ட்ரெக் ஒன்றினை யூடியூப்பில் வெளியிட்டு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் வழக்கத்தினை இப்பாடல் மூலம் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ளார்.
இதற்கு சமூகவலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன் யூடியூப்பில் ஏராளமான இசை ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர்.
எந்திரனுக்கு பிறகு தமிழில் ரஹ்மான் இசையமைத்துள்ள படம் கடல் என்பதனால் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுவதை பூர்த்தி செய்யும் வகையில் இப்பாடல் வெளியீடு அமைந்துள்ளது. மேலும் பாடல் வெளியீட்டின் போது 'இது ஒரு மகிழ்ச்சியான தருணம்' என தனது மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டார் ஒஸ்கார் நாயகன்.
இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள அந்த பாடல் இதோ...
ஈரான் மீது எந்நேரமும் போர் தொடுப்போம்: அமெரிக்க தூதர் சூசன் ரைஸ்
ஈரான் நியூக்ளியர் குண்டுகள் பெறுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா எடுக்கும் என ஐ.நா அமைப்பிற்கான அமெரிக்காவின் மூத்த தூதரான சூசன் ரைஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஈரான் நியூக்ளியர் ஆயுதங்கள் பெறுவதை அமெரிக்க அனுமதிக்காது. இவ்விடயத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா மிகத் தெள்ளத் தெளிவான முடிவில் உள்ளார்.
அவ்வாறு நடப்பதை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து முடிவுகளும் அந்நாட்டிற்கு எதிராக தயாராக உள்ளன.
இது ஒரு நசுக்கும் கொள்கையாக இருக்கவில்லை. ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது அமெரிக்காவின் ஒரு கொள்கையாக உள்ளது.
இதை ஜனாதிபதி பலமுறை வலியுறுத்தியும் சொல்லி வந்து இருக்கிறார். இது தான் இறுதி முடிவு. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதையே அவர்களுக்கான ரெட் லைன் என்றும் கூறிவருகிறார்.
இது குறித்து இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் கொள்கை அதிகாரிகள் அனைவருடனும் தொடர்ந்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை என்றால், அந்நாட்டின் மீது எந்நேரமும் படையெடுக்கும் ஆணையை பிறப்பிக்க தேவையான அதிகாரத்தை ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
எங்களை தாக்கினால் இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறோம்.. இஸ்ரேலில் எதுவுமே மிச்சமிருக்காது.
அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்குமேயானால் மேற்குலக நாடுகளும், அமெரிக்காவும் ஒரு பக்கமும் நாங்கள் ஒருபக்கமுமாக நிற்போம். இது இயற்கையானது. அதேபோல் போர் நடைபெறும் போது ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதுவம் இயல்பான ஒன்றானதுதான்.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்கெனவே இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளனர். எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துமாறு ஹிஸ்புல்லா அமைப்பை கேட்டுக் கொள்வோம். அப்புறம் இஸ்ரேலில் எதுவுமே எஞ்சியிருக்காது என்றார்.
ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இப்படி விரிவாக பதிலடித் தாக்குதல் பற்றி பேசுவது இதுவே முதல்முறை என்பதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பொதுவாக காதல் யாரிமிருந்து எப்படி வரும் என்பதை யாராலும் அறிய முடியாது. காதலுக்கு கண்ணில்லை என்று கூறுபவர்களின் மத்தியில், ஒருவர் தனது நண்பரை காதலிப்பவர்களை மட்டும் தவறு என்று கூற முடியாது.
சிலரைப் பார்த்ததும் காதல் வரலாம் அல்லது பேசிப் பழகி நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையே காதல் மலரலாம். ஆனால் நண்பர்களுக்குள் காதல் வருவது மிகப்பெரிய அவஸ்தை தான்.
தனது நண்பரைக் காதலிக்கும் ஒருவர் அதனை உணர்வதற்கே சில காலங்கள் ஆகும். அவ்வாறு தனது நண்பரை தான் காதலிக்கிறோம் என்ற எண்ணமே முதலில் குற்ற உணர்ச்சியாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
அதையும் மீறி, அவரும் தன்னை காதலிக்கிறாரா என்பதை ஆராய மனது அலைபாயும். இதற்கிடையே அவர் வேறு யாரையும் காதலித்து விடக் கூடாதே என்றும் மனம் பதபதைக்கும்.
ஒருவர் தன் நண்பரைக் காதலிக்கத் துவங்கியதும் செய்ய வேண்டிய விடயம், தனது காதலை வெளிப்படுத்துவது அல்ல. அவரது மனதில் தன் மீது காதல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா இல்லை அதற்கு முன் வேறு எவரேனும் அவரைக் காதலிக்கிறார்களா அல்லது இவர் எவரேனும் காதலிக்கிறாரா என்பதை அறிந்து கொள்வது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும்.
அவரது மனதில் காதல் ஏற்படவே இல்லை, தன்னை மிகவும் நல்ல நண்பராக நினைக்கிறார் என்று உறுதியாகத் தெரிந்த பின்பு காதலிக்க வைப்பதற்கான வழிகளில் ஈடுபடலாம்.
ஆனால் நாம் காதலிக்கும் நமது நண்பர், வேறு ஒருவரை காதலிக்கிறார் என்று உங்களுக்கு தெரிய வந்தால் உங்கள் காதலை கடலில் தூக்கிப் போடத் தயங்கக் கூடாது. அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
உங்கள் காதலைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஏதேனும் உங்களுக்குப் பிடித்த வேலையில் முழு நேரமும் ஈடுபடுங்கள். காலம் எதையுமே மாற்றும் சக்தி படைத்தது. இப்படி எல்லலாம் நாம் இருந்திருக்கிறோமா என்று எண்ணி சிரிக்க வைக்கவும் இந்த காலத்தால் முடியும்.
அதே காலம் உங்கள் காதலை மறக்க வைக்க முடியும். ஆனால் உங்களுக்காக உங்கள் நண்பர் உங்களுடன் இருப்பார். ஒரு வேளை உங்கள் காதலை நீங்கள் அவசரப்பட்டு வெளிப்படுத்தி, அவரது மனதை அது பாதிக்குமானால், நீங்கள் இழப்பது ஒரு காதலியை அல்ல, நல்ல நண்பரை.
ஒரு வேளை நீங்கள் காதலை வெளிப்படுத்தியதும், அது அவருக்குப் பிடிக்காமல் போனால், நீங்கள் இவ்வளவு காலமும் நண்பரைப் போல இருந்தது வெறும் நடிப்பாக அவருக்குத் தோன்றலாம். இதனால் உங்களுக்கு இடையே எந்த பந்தமும் இல்லாமலேயே போகலாம்.
காதலை மனதில் அடக்கி வைத்துக் கொள்வது கடினமான விடயமாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு பெரிதல்ல. உங்களுக்கு எந்த பிரச்சினையிலும் தோள் கொடுக்க உங்தகளுக்காக ஒரு நண்பர் உங்ளகளுடன் இருப்பார். அதை விட வேறு என்ன வேண்டும் உலகத்தில்?
அலட்டிக் கொள்ளாமல் நடிப்பதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு நிகர் அஜீத் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் படி வெளிவந்திருக்கும் படம் தான் பில்லா 2.
இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்கு வரும் டேவிட் பில்லா, அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகிறார். அகதிகள் முகாமில் இருக்கும் டேவிட் பில்லாவிற்கு ரஞ்சித் உள்ளிட்ட 3 பேர் நண்பர்களாகின்றனர். அப்பகுதி பாதுகாப்பு அதிகாரி சக அகதிகள் மீது நடத்தும் அடவாடித்தனத்தை கண்டிக்கும் டேவிட் பில்லா பாதுகாப்பு அதிகாரிக்கு எதிரியாகிறார். இதனால் பில்லாவை பழிவாங்க நினைக்கிறார்.
சென்னைக்கு மீன் ஏற்றிச் செல்லும் லாரியில் வைரத்தை வைத்து கடத்தும் கும்பலிடம் அஜித்தை சிக்கவைத்து, பழிவாங்க எண்ணுகிறார்.
மீனை ஏற்றிச் செல்லும் பொறுப்பை ரஞ்சித்தும், பில்லாவும் ஏற்கிறார். வழியில் சாதுர்யமாக தப்பித்துக் கொள்ளும் இருவரும், அதிலுள்ள வைரத்தை சென்னையின் பிரபல கடத்தல்காரரான செல்வராஜிடம் கொண்டு சேர்க்கின்றனர்.
இவர்களின் விசுவாசத்தை புரிந்து கொண்ட செல்வராஜ், இவர்களுக்கு சென்னையிலேயே சில கடத்தல் வேலைகளை கொடுக்கிறார். இந்நிலையில் கோவாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த போதைப் பொருளை சென்னையில் கைமாற்றிக் கொடுக்க செல்வாரஜை அணுகுகிறார் கோட்டி. அப்பொருளை கைமாற்ற தான் உதவி செய்வதாக பில்லா அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
கைமாற்றுவதில் ஏற்படும் தகராறில் ஒரு கொள்ளைக் கும்பலை அடித்து துவம்சம் செய்து விட்டு, கோட்டியின் தலைவனான அப்பாஸியிடம் நேரடியாக அந்த டீலை முடிக்கிறான் பில்லா. அதன்பிறகு அப்பாஸியிடம் சேர்ந்து கொண்டு சர்வதேச அளவில் கடத்தல் தொழிலில் கில்லாடியாகிறார் பில்லா.
சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் டிமிட்ரியின் பல கோடி ரூபாய் ஆயுதங்கள் இந்தியாவில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்கிறது.
அதனை பில்லாவை வைத்து கைப்பற்றி கொடுத்து டிமிட்ரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறும் அப்பாஸியை தன்னுடைய நாடான பரோவியாவிற்கு அழைப்பு விடுக்கிறான்.
அப்பாஸிக்கு பதிலாக கோட்டியும், பில்லாவும் பரோவியா செல்கின்றனர். அங்கு நடக்கும் பேச்சுவார்த்தையில் அப்பாஸியிடம் கலந்தாலோசிக்காமல் ஆயுத ஒப்பந்தத்தை முடிக்கிறான் பில்லா. இது துளியும் திருப்தியில்லாத அப்பாஸி பில்லாவை தீர்த்துக்கட்ட நினைக்கிறான். இதிலிருந்து தப்பிக்கும் பில்லா முடிவில் அப்பாஸியையே தீர்த்துக் கட்டுகிறான். அதன்பிறகு ரஞ்சித் - பில்லா இருவரும் தனியாக இந்த பிசினஸை செய்ய முடிவெடுத்து களத்தில் குதிக்கிறார்கள்.
இதற்கு உதவும் சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் டிமிட்ரியையே ஒரு கட்டத்தில் பில்லா எதிர்க்கிறான். இதனால் ஆத்திரமடைந்த டிமிட்ரி அரசியல்வாதி மற்றும் அப்பாஸியின் உதவியாளர் கோட்டியுடன் கைகோர்த்துக் கொண்டு பில்லாவை தீர்த்துக் கட்ட எண்ணுகிறான்.
முடிவில் பில்லா அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கினாரா? இல்லை அவர்களை துவம்சம் செய்தாரா? என்பதே மீதிக்கதை.
அஜித் என்றாலே அழகுதான். அந்த அழகுக்கு அழகு சேர்ந்தார்போல் கொஞ்சம் தாடி மற்றும் மீசை மற்றும் தாடியை மலித்த தோற்றம் என இரண்டிலும் தல கலக்கலாக இருக்கிறார்.
சினிமாவில் இப்போது இருக்கும் ஹீரோக்களில் கோட் சூட் போட்டு ஹேண்ட்சம்மாக இருப்பவர்களில் இவருக்கே முதல் இடம். உண்மையிலே இவர் செம பர்சனாலிட்டி ஹீரோதான்.
படத்தில் வித்தியாசமான முறையில் வசனம் பேசியிருக்கிறார் தல. தேவைப்படும் இடத்துல மட்டும் டயலாக். மற்ற இடங்களில் முகபாவணைகளிலேயே பேசுகிறார். அஜித்தின் அக்கா மகளாக வரும் பார்வதி ஓமனக்குட்டன் சில காட்சிகளே வருகிறார். அவருக்கு காதல் பண்ணுவதற்கும், நடிப்பதற்கும் வாய்பில்லாமல் போய்விட்டது.
இன்னொரு நாயகியாக புருனா அப்துல்லா, அவ்வப்போது கவர்ச்சியில் வருகிறார்.
சென்னை கடத்தல் தலைவனாக இளவரசு, கோவா கடத்தல் கும்பல் தலைவனாக சுதன்சு பாண்டே, சர்வதேச கடத்தல் கும்பல் தலைவர் வித்யூத் ஜம்வல் ஆகியோர் தங்கள் வேலைகளை மட்டும் செய்துவிட்டு போய்விடுகிறார்கள்.
படத்தோட ரியல் ஹீரோ வசனகர்த்தா முருகன்தான். படத்தில் அஜித் பேசுகின்ற வசனங்கள் ஒவ்வொன்றும் அப்லாஸ்தான்.
குறிப்பாக “உக்காந்து வேலை வாங்குறவனுக்கும், உயிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு” மற்றும் “போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம்தான்... போராடிட்டு இருக்கிறவன் தோத்துட்டா அவன் தீவிரவாதி, ஜெயிச்சுட்டா அவன் போராளி” என்பன போன்ற வசனங்கள் தியேட்டர்களில் கைதட்டல்களை அள்ளிச் செல்கின்றன.
மொத்தத்தில் பில்லா-2 மிரட்டல். நடிகர்: அஜீத். நடிகை: பார்வதி ஓமனக்குட்டன். இயக்குனர்: சக்ரி டோலட்டி. இசை: யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்.
அப்பிள் சென்பிரான்சிஸ்கோவில் நடத்திய தனது வருடாந்த டெவலப்பர் மாநாட்டில் (Worldwide Developers Conference) புதிய மெக்புக் புரோ மற்றும் ஐ.ஓ.எஸ் இன் புதிய தொகுப்பு உட்பட சிலவற்றை அறிமுகப்படுத்தியது. The New Macbook Pro
இப்புதிய மெக்புக் புரோவின் சிறப்பம்சம் என்னவெனில் அதன் திரையாகும். அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ பேட் சாதனங்கள் கொண்டுள்ள 'ரெடினா' திரையை புதிய மெக்புக் புரோ கொண்டுள்ளது. இதன் அளவு 15.4 அங்குலமாகும்.
மேலும் இது வெறும் 0.71 அங்குலம் தடிப்பனானது.
இதனைவிட குவாட்கோர் புரசசர், 16 ஜிபி வரையான ரெம், 768 ஜிபி பிளாஸ் ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
இதன் பெட்டரி சுமார் 7 மணித்தியாலங்கள் நீடிக்கக்கூடியதாகும்.
எனினும் இதன் ஆரம்ப விலை 2,199 அமெரிக்க டொலர்களாகும்.
iOS6
பல மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளுடன் iOS6 வெளியாகியுள்ளது.
சுமார் 200 க்கும் அதிகமான புதிய வசதிகளை இது உள்ளடக்கியுள்ளதாக அப்பிள் தெரிவித்துள்ளது.
அவையாவன.
அப்பிளின் குரல்கட்டளைக்கு ஏற்ப செயற்படும் 'சைரி' வசதியானது நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஐபேட் 2 மற்றும் 3 இலும் ஐ சைரி இனிமேல் செயற்படும்.
'சைரி' கன்டோனீஸ், கொரியன்,கனேடியன் போன்ற மொழிகளிலும் செயற்படும்
டுவிட்டரில் டுவிட் செய்ய, பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்ய, முன்பதிவுகளை மேற்கொள்ளவும் சைரி இனிமேல் உதவி செய்யும்.
பேஸ்புக் முற்றிலுமாக இணைக்கப்பட்டுள்ளது. அப்ளிகேசன், சைரி ஊடாகவும் பேஸ்புக்கினுள் நுழையமுடியும்.
தியேட்டர் மற்றும் விமான டிக்கெட்டுக்களை கையாள்வதற்கென ' பாஸ்புக்' எனும் விசேட அப்ளிகேசன்.
முற்றிலும் புதிய தோற்றத்துடன் கூடிய 'மெப்' அப்ளிகேசன்.
"do not disturb" எனும் உள்வரும் அழைப்புகளுக்கு மெசேச் மூலமாக பதில் வழங்கக்கூடிய வசதி.
மேம்படுத்தப்பட்ட மின்னஞ்சல் அப்ளிகேசன் மற்றும் சபாரி அப்ளிகேசன்.
பிரபல சமூக வலைத்தளமான யூடியூப் தனது 7வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் புரூனோ என்ற இடத்தை மையமாக கொண்டு செயற்படும் யூடியூப் பெப்ரவரி 15, 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இதையடுத்து இந்த இணையத்தை அக்டோபர் மாதம் 2006ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் வாங்கியது. இதில் 6.1 மில்லியன் காணொளிகள் உள்ளன.
இந்நிலையில் தனது 7வது பிறந்தநாளை முன்னிட்டு யூடியூப் வெளியிட்டுள்ளதாவது, எங்களது சமூக வலைதளம் 7 ஆண்டு மைல் கல்லை அடைந்துள்ளது. உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் யூடியூப்பை பகிர்ந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளது.
பேஸ்புக் அப்ளிகேஷன்கள் குறித்து, அதன் பாவனையாளர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், தற்போது பேஸ்புக் புதிதாக Facebook App Center-ஐ உருவாக்க உள்ளது.
அப்ளிகேசன்கள் மற்றும் கேம்ஸ்களை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே கூகுள், ஆப்பிள், நோக்கியா போன்ற செல்போன் நிறுவனங்கள் கடைகள்(stores) திறந்துவிட்டது.
தற்போது பேஸ்புக் நிறுவனமும் Facebook App Center என்ற பெயரில் கடை திறக்கப் போகிறது.
ஏற்கனவே கடைகளை திறந்திருக்கும் கூகுள்(ஆன்ட்ராய்ட்), ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தனக்கென்ற தனி இயங்குதளங்களை வைத்திருக்கின்றன.
அதனால் அவற்றுக்கான பிரத்யேகமான அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டுக்களை விற்பனை செய்து வருகின்றன. அதில் இலவசமாகவும் கிடைக்கின்றன. ஆனால் பேஸ்புக் என்பது சமூக வலையமைப்பு தளமாகும். அதற்கென்று தனி இயங்குதளம் கிடையாது.
உண்மையில் Facebook App Center என்பது கணணி, ஆன்ட்ராய், ஐபோன் மென்பொருள்களை காட்சிப்பொருளாக(Showcase) வைக்க போகிறது. அதாவது ஆண்ட்ராய்ட், ஐபோன்களுக்கான சமூக அப்ளிகேசன்களை(Social Apps) தேடுவதற்கான தளமாக இது அமையுமென பேஸ்புக் நிறுவனம் கூறுகிறது.
அதுவும் பேஸ்புக் மூலம் உள்நுழையும்(Facebook Login Button) வசதியை கொண்ட அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டுக்களை மட்டுமே காட்சிப்படுத்தப் போகிறது. இதனால் பேஸ்புக் தளமும் வளர்ச்சி அடையும்.
மேலும் இயங்குதளம் சாராத, எந்த இயங்குதளத்திலும் பயன்படுத்தக் கூடிய அப்ளிகேசன்களை விற்பனைக்கு வைக்க போகிறது.
தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் இன்று தனது 41 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய 41 துளிகள் இங்கே...
1 தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.
2 தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.
3 தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.
4 அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.
5 1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.
6 அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.
7 தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண். அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.
8 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜீத்.
9 அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.
10 வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.! ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.
11 மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.
12 இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.
13 கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.
14 சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான். அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.
15 பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.
' 16 நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.
17 அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
18 சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
19 தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் நடித்தது நெகட்டிவ் ரோலில் மட்டுமே.
20 சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.
21 அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
22 தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!
23 வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!
24 சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!
25 வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!
26 உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!
27 சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!
28 ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!
29 ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!
30 தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!
'31 இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!
32 பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!
33 அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!
34 உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!
35 எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!
36 படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்காகான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!
37 மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!
38 அனோஷ்கா, தந்தையை 'அஜீத் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!
39 மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!
40 தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!
'தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்’ என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது.
'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். இவ்வாறு ஜூனியர் விகடன் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. ''ஆற்ற முடியாத காயங்களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவருடைய திடீர் 'தமிழீழ’ ஆர்வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ?
இறுதிப்போர் நடந்துகொண்டு இருந்தபோது, 'ஈழம் இனி சாத்தியம் இல்லை’ என பேசினீர்கள். 'மத்திய அரசின் நிலைப்பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு’ என்றீர்கள்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாகச் சொன்னார். 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வலிமையான கட்சியை நடத்தும் கலைஞரின் முழக்கமே 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதுதான். அதையே அவரால் அடைய முடியவில்லை.
இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இலங்கை ஜனநாயக நாடே இல்லை. அது, பௌத்த மதத் தீவிரவாத நாடு. அங்கு ஒரு சிங்கள பௌத்தனைத் தவிர யாருமே தலைமை அமைச்சராக வரமுடியாது.
அங்கே எப்படி மாநில சுயாட்சி கிடைக்கும்? இதை உணராத கலைஞர், மாநில அதிகாரம் பெற வேண்டும் என்று ஈழத் தமிழனுக்கு அறிவுரை சொன்னார். இப்போது, 'ஈழத்தை அடையும் வரை ஓயமாட்டேன்’ என்று சொல்கிறார். நியாயப்படி, அவர், 'ஈழத்தை அழிக்கும் வரை ஓயமாட்டேன்’ என்றுதான் சொல்லி இருக்க வேண்டும்!
அண்ணன் திருமாவளவன், சென்னையில் ஈழ ஆதரவு மாநாடு நடத்தியபோது, அதற்கான விளம்பரங்களில் 'ஈழம்’ என்ற வார்த்தையைக் காவல்துறையைக் கொண்டு அழித்தவர் நீங்கள். அதை மறைக்க முடியுமா? ஈழம் என்ற சொல் இருக்கக் கூடாது என்பதற்காக, இலங்கைத் தமிழர்... இலங்கைத் தமிழர் என்று பேசிவந்தவர். தொடர்ச்சியாக, என்னை ஐந்து முறை சிறைப்படுத்தினீர்களே, நான் என்ன பேசினேன்?
இன்றைக்கு நீங்கள் பேசியிருப்பதைத்தானே, அன்றைக்கு நான் பேசினேன்? 'இறுதிப்போர் காணொளி காட்சியைப் பார்க்க முடியவில்லை’ என்கிறீர்கள். இந்தக் காணொளிக் காட்சியை, அச்செடுத்து, வீடுவீடாகக் கொடுத்தபோது, கொடுத்தவர்களைத் தேடித்தேடி சிறைப்பிடித்தீர்களே ஏன்?
நீங்கள் இன்றைக்குச் சொல்லும் ஈழ விடுதலைக்காகத்தானே தம்பி முத்துக்குமார் தீக்குளித்தான்? ஏன் நீங்கள் அவனுக்காக ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை? அவன் மரணத்துக்காகத் திரண்ட இளைஞர்களின் எழுச்சியை, கல்லூரி விடுதிகளை மூடி ஏன் அடக்கினீர்கள்?
பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்? இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடினார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள்?
'ஈழம் அடையும்வரை ஓயமாட்டேன்’ என்று, என் தலைவர் பிரபாகரன், அந்த ஈழ மண்ணில் கருவியோடு நின்றுகொண்டு இருந்தபோது, ஏன் நீங்கள் சொல்லவில்லை? பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது என்று இப்போது சொல்கிற நீங்கள், 'மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டினதைவிட வேற காரியத்துல கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்று அப்போது சொன்னது ஏன்?
'தேவையில்லாமல் ஈழத்தைப் பற்றிப் பேசி தமிழகத்தில் வீணாக அரசியல் செய்கிறார்கள்’ என நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பேசினீர்களா, இல்லையா? அந்த மக்களின் மீது இவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டிருக்கிற நீங்கள், போர்க்குற்ற வீடியோவை உங்களின் ஊடகத்தின் மூலம் வெளியிடாதது ஏன்? இறுதிப் போரிலே, எதிரியால் உருக்குலைக்கப்பட்ட தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழகம் முழுவதும் குருவி சேர்த்ததுபோல, அத்தியாவசிய மருந்துப் பொருட்களைச் சேகரித்தார்களே, தமிழ் இளைஞர்கள். அவர்களை எல்லாம் வேட்டையாடி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்தீர்களே, ஏன்?
'சிங்களர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது’ என்று அப்போது சொன்னீர்கள். இன்று, நீங்கள் ஈழத்துக்காகப் பேசுவதற்கு கோத்தபாய ராஜபக்ச கோபப்படுகிறாரே?
ஈழத் தமிழர்களுக்காக கண்ணீராக வருகிறது என இன்று சொல்கிறீர்களே. அன்று இறுதிப் போரில் தமிழ்க் குழந்தைகள் கரிக்கட்டையாகக் கிடந்த படங்கள் வரும்போது, பத்திரிகையின் அதே பக்கங்களில், உங்கள் பிள்ளை மதுரையில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய படமும் வந்ததே ஐயா? மறக்க முடியுமா எங்களால்?
இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா? அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒன்றாக இருக்க முடியுமா? எம்.ஜி.ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?
ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.
உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.
அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று பாஸ்ட் பார்வர்டு கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.
இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.
குறிப்பாக சந்தானம். மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த ஓகே ஓகே.
ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்.
மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது. தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார். ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!
முந்தைய மூன்று படங்களை விட இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை. பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.
உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் ஓகே.
ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கி விட்டார்கள். ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது. குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோன்ற படங்களில் குறைதேடிக் கொண்டிருந்தால், படத்தை ரசிக்க முடியாது.
ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக அழகே அழகே, வேணாம் மச்சான். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.
வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.
விஜய் டிவியில் நடிகர் சூர்யா தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
இந்த நிகழ்ச்சியில் சூர்யா கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடையளிப்பதன் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர் ஒரு கோடியை வெல்வார். இந்நிகழ்ச்சியில் (03.04.12) நடிகை ஸ்ருதிஹாஸன் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதை பற்றி தனது ட்விட்டர் சமூக இணையதளத்தில் ட்வீட் செய்த்திருக்கும் ஸ்ருதிஹாஸன் � நாளை 8 மணிக்கு சூர்யாவின் NVOK நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறேன்.
எனக்கு பிடித்த நடிகரான சூர்யாவின் அறிவுப்பூர்வமான(!) கேள்விகளுக்கு அரட்டையடித்துக் கொண்டு பதிலளிக்கப் போகிறேன்.
மறக்காமல் பாருங்கள்� என்று கூறியுள்ளார். சூர்யாவும் ஸ்ருதிஹாஸனும் இதற்கு முன்னர் ஏழாம் அறிவு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஸ்ருதி காஸன் பங்குபற்றி 640000 இந்திய ரூபாய் நிதியை வென்றெடுத்து அதை சமூக நல நிதிக்காக அன்பளிப்பு செய்துள்ளார்..தந்தை வழியில் அவரது சமூக சேவை எல்லோராலும் வியந்து பாராட்டப்பட்டது...!!
பேஸ்புக்கில் படங்களை முழுத்திரையில் பார்ப்பதற்கு
நண்பர்கள் வட்டத்தை பெருக்குவதில் முன்னணி வகிக்கும் சமூகத்தளமான பேஸ்புக்கில் பகிரப்படும் படங்களை முழு அளவிலான திரையில் பார்ப்தற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக Google+ photo viewer இனை மேம்படுத்திய பதிப்பான Revamped Photo Veiwer எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் படங்களை சாதாரண அளவில் இருந்து நான்கு மடங்கு பெரிதானதாக பார்வையிட முடியும். எனினும் இது பயன்படுத்தப்படும் கணணியின் திரையை பொறுத்து வேறுபடலாம்.
இதனை இரு முறைகளில் செயற்படுத்தலாம்.
முறை 1: பேஸ்புக் பக்கத்தில் உள்ள படம் ஒன்றை கிளிக் செய்யவும், பின் அதன் மேல் சுட்டியை(mouse) அழுத்தியவாறு வலது, இடது அம்புக்குறி விசைகளை(keys) அழுத்துக.
அப்போது படத்தின் வலதுபக்க மேல் மூலையில் இரண்டு தலைகளைக் கொண்ட அம்புக்குறி வடிவம் தோன்றும். அதன் மேல் அழுத்தியதும் குறித்த படம் முழுத்திரை அளவிற்கு பெரிதாகும்.
முறை 2: பெரிதாக்க வேண்டிய படத்தின் மேல் கிளிக் செய்து பின் அப்படத்தின் கீழ் காணப்படும் option பொத்தானை அழுத்தி அதில் காணப்படும் Enter Fullscreen என்பதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த படத்தை பெரிதாக்க முடியும்.
சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த படமான நண்பன் வெற்றியடைந்துள்ளது. நண்பன் படம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. நண்பன் படத்திற்கு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அவ்வப்போது நண்பன் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களுடன் பேசுகிறார்.
மதுரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற விஜய் அங்கு ரசிகர்களிடம் பேசிவிட்டு மதுரை களவாசலில் உள்ள ஓட்டல் ஒன்றில் மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுடன் பேசினார். அதன் பின் ஆதரவற்ற பெண்கள் இருவருக்கு வாழ்வில் முன்னேற நிதி உதவியும் அளித்தார்.
அதன் பின் நிரூபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது விஜய் “ அரசியல் பற்றிய கேள்விகள் இங்கு வேண்டாம்.சினிமா பற்றி மட்டும் இப்போது பேசுவோம். நண்பன் படம் போலவே இன்னொரு கதை அமைந்தால் கண்டிப்பாக இரண்டு ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன்.
ஒரு படம் ஓடுவதும் ஓடாததும் கதை மற்றும் திரைக்கதையின் கையில் தான் உள்ளது. அந்த கதைகளுக்கு நாங்களும் ரசிகர்களாகவே இருக்கிறோம். ஒரு ரசிகனாக அதை உங்களிடம் சேர்க்கிறோம்.
சூர்யாவுடன் நான் இணைந்து நடித்த படத்தின் கதையைப் போல் அமைந்தால் கண்டிப்பாக சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன். இப்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன்.
சிறிய பட்ஜட் படங்கள் புதுமுகங்களுடன் வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் புதுமுகமாக அறிமுகமானவன் தான்.” என்று கூறினார்.
குற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தாக்குவது போன்ற செயல்களுக்காக அமெரிக்கா புது வித அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ளது.
இந்த ஆயுதம் ஒரு கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும். இதனால் உடலில் காயங்கள் ஏதும் ஏற்படாது, ஆனால் உடல் தீப்பிடித்தது போல எரியும்.
ஆனால் இந்த ஆயுதத்தின் மூலம் சில சமயம் மக்களும் காயம் அடைகின்றனர். இதனால் இதற்கான மாற்று தீர்வை கண்டறியும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது.
“ஆக்டிவ் டினையல் சிஸ்டம்”(ஏடிஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள மைக்ரோவேவ் கதிர்வீச்சு ஆயுதத்தை அமெரிக்க இராணுவம் உருவாக்கியுள்ளது.
வர்ஜீனியா மாநிலம் குவான்டிகோ நகரில் உள்ள இராணுவ தளத்தில் 2 வாரம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு இந்த ஆயுதம் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது செயல்பாடு குறித்து இராணுவ அதிகாரிகள் கூறியதாவது: மரணம் ஏற்படுத்தாத வகையில் தாக்குதல் நடத்தும் ஆயுத ஆராய்ச்சியில் அமெரிக்கா நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது.
15 ஆண்டு முயற்சிக்கு பிறகு ஏடிஎஸ் ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளிப்படுவது போல, ஏடிஎஸ் கருவியில் இருந்து மைக்ரோவேவ் ரேடியோ கதிர்வீச்சு வெளிப்படும்.
வீட்டு உபயோக பொருட்களில்(மைக்ரோவேவ் ஓவன்) இருக்கும் கதிர்வீச்சைவிட இது 100 மடங்கு வலுவாக இருக்கும்.
சக்தி வாய்ந்த லென்ஸ் கருவி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரியைக்கூட துல்லியமாக குறிபார்த்து சுட முடியும்.
கருவியில் இருந்து 95 ஜிகா ஹெர்ட்ஸ் என்ற அளவுக்கு கதிர்வீச்சு பாயும். சாதாரண நிலையில் மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட். 2 வினாடிக்கு இந்த கதிர்வீச்சு உடலில் பாய்ந்தாலே 130 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பாயும். உடல் எரியும்.
அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் கதிர்வீச்சு எதிரியை தாக்குவதால் உடல் முழுவதும் பற்றியெரிவது போல எரிச்சல் ஏற்படும். எதிரி நிலைகுலைந்து விடுவார்.
ஆனால் தோலில் மிக மிக சொற்பமான ஆழத்துக்கு(ஒரு இஞ்ச்சில் 64-ல் ஒரு பங்கு) மட்டுமே கதிர்வீச்சு இறங்கும் என்பதால் காயம் ஏற்படாது.
மனிதர்கள் மீது 11 ஆயிரத்துக்கும் அதிகமான முறை இந்த கதிர்வீச்சு பாய்ச்சி சோதனை செய்யப்பட்டது. அதில் 2 முறை மட்டுமே லேசான காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே இது மிகவும் பாதுகாப்பானது. ஆப்கான் போரின் போது ஏடிஎஸ் ஆயுதம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் ஒருமுறைகூட பயன்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அமெரிக்காவால் கொண்டு வரப்படும் இத் தீர்மானம் நிறைவேறக் கூடாது என்பதற்காக இலங்கை அரசு ஆர்ப்பாட்டங்களையும் பேரணி களையும் நடத்தி வருகின்றது. இதற்கு மேலாக, இறைவழிபாடும் நடைபெறுகின்றது. இலங்கை அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் வழிபாடு தொடர்பில் கடவுளர்கள் என்ன முடிபு எடுப்பார்கள். இப்படியயாரு கற்பனை நம் உள்ளத்தில் தோன்றியது. வன்னிப் போரின்போது யுத்தத்திற்குள் சிக் குப்பட்ட தமிழ் மக்களும் இறைவா...இறைவா... என்று வழிபாடாற்றினர். அதேவேளை முட்கம்பி வேலிக்குள் அடைபட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்கவும், போரில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் தமிழர் பிரதேசங்களில் இறைவழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இப்போது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசின் ஏற்பாட்டில் பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களில் பூசைகளும் வழி பாடுகளும் பிரார்த்தனைகளும் நடந்தாகின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி ஜெனிவாக் கூட்டத் தொடர் முடிபடை வதற்குள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு முடிந்துவிடும். எனவே இலங்கையில், ஆளுந்தரப்பினர் நடத்தும் வழிபாடு தொடர்பில் உடனடியாக முடிபெடுக்க வேண்டிய தேவையிருப்பதால், தேவலோகத்தில் அவசரமாக சர்வமதக் கடவுள்களின் மாநாடு கூடியது. சிவன், விநாயகர், முருகன், சக்தி, புத்தர், யேசு பிரான்... என மதத் தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். ஜெனிவாத் தீர்மானத்திற்கு முன்னதாக தேவலோகத்தில் நடைபெறும் சர்வமத மாநாட்டில் ஒவ்வொரு மதத் தலைவர்களும் நடந்து வந்ததைப் பார்த்தபோது, ஐ.நா. சபைக்கு உலகத் தலைவர்கள் நடந்துவந்தது போல இருந்தது. முருகப் பெருமான், அத்வானியின் வேகத்தில் நடந்து வந்தார். விநாயகர் வாஜ்பாய் போல நடக்க, சிவன் ஒபாமா போன்று நடந்தார். சக்தியின் வருகை, மிகவும் வேகமாக இருந்தது. ஹிலாரி கிளின்டனின் நடைபோல அது அமைந்திருக்க, யேசு பிரான் மன்னார் மாவட்ட ஆயரின் நடையிலும், கெளதம புத்தபிரான் விக்கிரமபாகு கருணாரட்னவின் விறுவிறுப்பிலும் நடந்து வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். மாநாடு உடனடியாகவே ஆரம்பமானது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், கிருஸ்ண பரமாத்மா, ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் இம்மாநாடு நடப்பதாக அறிவித்ததோடு, வட பகுதிக்கு விசேட விசாரணை நடத்தச் சென்ற விநாயகர் தனது கருத்துக்களை முன்வைப்பார் என அறிவிக்க,
விநாயகர் எழுந்து தனது அறிக்கையை மாநாட்டில் வாசித்தார். thanks for வலம்புரி
தூய தமிழ் பேசும் ஒரு தமிழனும் இல்லாத இலங்கை கிரிக்கெட் அணிக்கு இன்னும் தமிழராகிய நாம் இன்னும் ஆதரவளிப்பது அவசியம் தானா? சனல் 4 தொலைக் காட்சியே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்று தொடர் அவசியம் தானா என கேட்டிருக்கும் போது சற்று யோசிக்க வேண்டிய விடயமே இருத்தி எழுப்பவும், அடக்கி ஆளவும் ஒரு பொம்மைச் சமூகமாக எம்மை தம் உள்ளங்கைக்குள் வைத்து கசக்கி பிழிய நினைத்தவர்களுக்கு முன்னால்- வேங்கை நெருப்பாக நின்று காட்டியவன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உலகம் முணுமுணுத்த ஒரே ஒரு பெருமைக்குரியவனாய் வாழ்ந்து நின்று நிலைத்து தன் நிழலைக்கூட எவரும் தொடமுடியாத விர வரலாற்றை எழுதியவன்.
எமக்கான அரசியலை உலக அரங்கில் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு. ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒற்றைக்குடைக்குள் நிற்க வைக்க நாம் செய்ய வேண்டிய பணி ஏராளமாய் காத்து கிடக்கின்றது. கழுத்தறுப்பு அரசியலை கைவிட்டு விட்டு புனிதமான செயலில் புறப்பட தயாராக வேண்டும்.
இத்தனைக்கும் மத்தியில் துதிபாடிக்கொண்டு பலபெயர்களில் பல அறிக்கைகளை விட்டுக்கொண்டு ஈழவிடுதலை உணர்வோ கனவோ இன்றி வெறும் பணத்திற்காக பற்சோந்தித் தனமாக மாரடிக்கும் பேர்வழி எதைச்சொன்னாலும் செய்யும்! எழுதும் தமக்கென இலட்சியமோ,குறிக்கோளோ இப் பிறவிகளுக்கில்லை செக்கென்ன சிவலிங்கமென்ன எல்லாம் ஒன்றுதான் என்று வாழாமல் மக்களின் விடுதலைக்காக, விடிவுக்காக எல்லோரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
இலங்கையிலும், இலங்கையைப் பற்றிய அக்கறை உள்ள உலகின் ஏனைய இடங்களிலும் இப்போது அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விடயம்.. ஜெனீவா.
இலங்கையில் தமிழரின் இனப் பிரச்சினை + போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகின் ஒவ்வொரு இடங்கள், நகரங்கள் அதிகமாகப் பேசப்பட்டு கவனங்கள் குவியும் இடங்களாக இருந்திருக்கின்றன.
80களில் திம்பு (பூட்டான்), சென்னை, கொழும்பு, டில்லி, நல்லூர், பின்னர் 90களில் வன்னியின் பல இடங்களும் 2000களில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்த வெளிநாட்டு நகரங்களும் (குறிப்பாக ஒஸ்லோ), யுத்தங்கள் உக்கிரம் அடைந்து எங்கள் அடையாளங்கள் தொலைந்துபோன பல்வேறு சிறு ஊர்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்த செய்தி மையங்களாக மாறிப் போயின..
இறுதியாக முள்ளிவாய்க்கால்.
இப்போது தமிழரின் தலைவிதி யார் யாராலோ எழுதப்படும் வேளையில் இலங்கைக்கு தலையிடியைக் கொடுக்கின்ற ஒரு இடமாக மாறியுள்ள நகரம் ஜெனீவா.
ஜெனீவா தொடர்பில் இன்று நம்மில் பேசாதவர்கள் இல்லை. முழு தமிழ் சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் தொடர்பில்தான்.
இந்நிலையில் இலங்கையில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் இன்றைய வியாழன் விடியலில் (வழக்கமாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் நாள்) தகவல்கள், தரவுகள், பின்னணிகளைத் தேடி எடுத்து (இதில் எங்கள் செய்தி ஆசிரியர் லெனின்ராஜ் எனக்கு நிறையவே உதவி இருந்தார்) இன்று வழங்கி இருந்தேன்..
பல நண்பர்கள் + நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதைப் பதிவாகவும் தரலாம் என்று எண்ணி இந்த இடுகை.
மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள வது வருடாந்த அமர்வு பற்றிப் பார்க்க முதல் கொஞ்சம் வரலாற்றுப் பின்னணிகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.
இலங்கை அரசுக்கு கேட்டாலே ஈயத்தை காதில் ஊற்றும் ஒன்றாக இருக்கும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் இதில் முக்கியமானது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வரலாற்றில் உதித்து பரிணமித்ததே சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம்.
ஆரம்ப கால கட்டத்தில் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்களினால் அதிகமான பொது மக்கள் உயிரிழந்தனர்.
அத்துடன் உள்நாட்டு யுத்தங்களும் காணப்பட்டன.
இந்த நிலை வலுவடைந்து இனம் மற்றும் மத ரீதியான யுத்தமாக மாறின.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டம் ரீதியாக உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டதே மனித உரிமைகள் ஆணையகம் ஆகும்.
இதன் முதற்கட்டமாக ஆரம்பத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச பேச்சுவார்த்தை ஒன்று 1864 ஆம் அண்டு Jean Henri Dunant நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று உருவாக்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் இந்த உடன்படிக்கையை ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
அத்துடன் 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையின பரிந்துரைகள் 1906 ஆம் ஆண்டு சீர்திருத்தப்படடதுடன் கடல் மார்க்க யுத்தங்களுக்கும் இவை பொருந்தும் என பரிந்துரைக்கப்பட்டது.
1929 ஆம் ஆண்டு மூன்றாவது உடன்படிக்கையின் போது யுத்தத்தை முறையாக நடத்துவது தொடர்பான நிபந்தனைகள் இதில் சேர்க்கப்பட்டன.
இதன்போதே அனைத்து நாடுகளுக்க அதிர்ச்சியளிக்கும் இரண்டாம் உலகப்பேர் ஆரம்பமாயிற்று.
இதற்கமைய 1945 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் இரண்டாம் உலகப்போர் வலுப்பெற்று அமெரிக்காவின் ஆதிக்கம் உலக நாடுகளுக்கு விளங்கியது.
இரண்டாம் உலக போர் நிறைவின் பின்னர் அதிகமான நாடுகள் உடன்படிக்கையை மீறியதாக மனித உரிமைகள் ஆணையகம் அறிவித்தது.
தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுவீடனின் ஸ்டொக்ஹம் நகரில் இடம்பெற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்;தின் மாநாட்டில் மனித உரிமை ஆணையகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சட்டங்களில் புதிய நான்கு உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன.
குறித்த நான்கு புதிய உடன்படிக்கைகளுக்கும் 1949 இல் ஜெனீவாவில் இடம் பெற்ற மாநாட்டின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இது தான் இன்று வரை சர்வதேச யுத்தங்கள், உள்நாட்டு யுத்தங்களின்போது கடைப்பிடிக்கவேண்டிய மனிதாபிமான சட்டங்கள் அடிப்படையாகக் கொண்டுவரப்பட்டன.
இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை என அனைவராலும் தற்போதும் பேசப்படுகின்றது..
இந்த நான்காவது உடன்படிக்கையின் பிரகாரம் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் யுத்த பிரதேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருத்தல், தனி நபரையோ குழுக்களாகவோ பொதுமக்களை நாடுகடத்தல், பாலியல் ரீதியில் துன்புறுத்தல் உடல் உள ரீதியில் வதைத்தல், விசாரணையின்றி விளக்கமறியலில் வைத்தல், நியாமின்றி சொத்துக்களை அழித்தல், இன மத தேசிய ரீதியில் மற்றும் அரசியல் ரீதியிலும் பாரபட்சம் காட்டுதல்
என்பன முற்றாக தடைசெய்யப்படல் வேண்டும் என சரத்துக்களில் பரிந்துரைக்கப்பட்டன.
எனினும் இரண்டாவது உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சி, மற்றும் விடுதலை போராட்டங்கள் காரணமாக குறித்த உடன்படிக்கை மீண்டும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலை மேலும் மோசமடைய 1977 ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 1949 உடன்படிக்கைகளுடன் மேலும் இரண்டு புதிய உடன்படிக்கைகள் இணைத்துக்கொள்ளப்பட்டன.
1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கைகளில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்தன.
உட்னபடிக்கைகள் தொடர்பில் நாம் பார்க்க வேண்டுமானால் முதலாவது உடன்படிக்கை.
1864 ல் முதலாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.
2. எல்லாத்தரப்பைச்சேர்ந்த வீரர்களுக்கும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.
3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
4. இந்த உடன்படிக்கையின் கீழ் பணிபுரியும் நபர்களையும் உபகரணங்களையும் இனங்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்
1929 ல் மூன்றாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்துதல்.
2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கல்.
3. கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குதல்
1949 ல் நான்காவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.
2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது
3. யுத்த கைதிகளை நடாத்தும் விதம் பற்றியது
4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.
இதற்கமைய 1977 உடன்படிக்கையின் சாரம் இவ்வாறு அமைகின்றது.
சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள் (கெரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.
இது வரை குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் மனித உரிமை ஆணையகம் தோற்றம் பெற்றமைக்கு பிரதான காரணங்களாக அமைந்தவையும் மற்றும் அந்த ஆணையகத்தின் நிபந்தனைகளும். This post copied From Arv loshan.. thanks a lot loshan for those true information..